X

உண்மை சரிபார்ப்பு: உறைபனியிலிருந்து காப்பாற்றப்படும் ஒரு பெண் இருக்கும் காணொளி உரிமைக் கோரிக்கையில் உள்ளது போல பாகிஸ்தானில் உள்ள மர்ரீ-லிருந்து அல்ல, இந்தியாவில் உள்ள பூஞ்ச்-லிருந்து.

கடுமையான உறைபனியில் மாட்டிகொண்ட ஒரு பெண் மீட்கப்படுவதாக காட்டிய காணொளி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் என்ற இடத்திலிருந்து வந்தது, பாகிஸ்தானிலிருந்து அல்ல.

  • By Vishvas News
  • Updated: January 23, 2022

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): சமூக ஊடகங்களின் வெவ்வேறு தளங்களில் பகிரப்படும் ஒரு 1.30 நிமிட காணொளியை விஷ்வாஸ் நியூஸ் கண்டது. அந்தக் காணொளி உறைபனியிலிருந்து மக்கள் ஒரு பெண்ணை மீட்பதைக் காட்டிற்று. இந்தக் காணொளி பாகிஸ்தானில் உள்ள மர்ரீ என்ற இடத்திலிருந்து வந்தது என்று பல தளங்களில் உரிமைக் கோரிக்கை செய்யப்பட்டிருந்தது. விஷ்வாஸ் நியூஸ் இந்தக் காணொளி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச்-லிருந்து வந்தது என்று கண்டு பிடித்தது.

உரிமைக்கோரிக்கை:

ஃபேஸ்புக் பக்கம், صدائے نرتوپہ 9, ஜனவரி, 2022 அன்று ஒரு காணொளியைப் பதிவு செய்து, பிறகு உருதுவில் எழுதியது: நீக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு: மர்ரீயில் உறைபனியில் புதைந்திருந்த உயிருடன் உள்ள பெண் சுற்றுலாப் பயணி உள்ளூர்காரர்களால் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பதிவையும் அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பையும் இங்கே சரி பார்க்கவும்.

புலன் விசாரணை:

விஷ்வாஸ் நியூஸ் சமூக ஊடகங்களின் பல தற்குறிப்புகளில் இதே போன்ற உரிமைக் கோரிக்கையோடு, இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தது. ஏனென்றால் ஜனவரியில் பாகிஸ்தானில் ஒரு கொடிய பனிப்புயல் ஏற்பட்டிருந்தது.

விஷ்வாஸ் நியூஸ் இன்விட் கருவியை பயன்படுத்தி தன் புலன் விசாரணையைத் தொடங்கியது.

எங்களுக்கு நிறைய திரைப்பிடிப்புகள் கிடைத்தன. பிறகு விஷ்வாஸ் நியூஸ் அந்த அனைத்து திரைப்பிடிப்புகள் மேலும் ஒவ்வொன்றாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தது. இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டிருந்த சிஎன்என்-செய்தி18-இன் யூடியூப் சேனல் ஒன்றைப் பார்த்தோம். அந்தக் காணொளியின் விவரக்குறிப்பு இவ்வாறு இருந்தது: ஜம்முவில் உள்ள பூஞ்ச் வட்டாரத்தைத் தாக்கிய ஒரு பனிப்பாறை சரிவினால் ஒரு பெண் அடர்த்தியான உறைபனிக்குக் கீழ் புதையுண்டார். விழிப்போடு இருந்த உள்ளூர் மக்கள் இருந்த ஒரு குழுவால் சரியான நேரத்துக்கு உறைபனியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, அவர் காப்பாற்றப் பட்டார். அந்தப் பெண் தற்போது ஒரு மருத்துவமனையில் ஆபத்திலிருந்து மீண்டு, தேறி வருகிறார்

இதைப் பற்றிய ஒரு செய்தியை நாங்கள் ஜம்மு லிங்க்ஸ் நியூஸ் என்ற போர்ட்டலில் கண்டு பிடித்தோம்.

அது சொன்னது: ஒரு 37 வயதான பெண் மற்றும் அவரது சிறிய மகள் இருவரும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பனிப்பாறை சரிவிலிருந்து கிராமத்தாரால் சனிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் உறைபனியிலிருந்து வெளியே இழுத்தபின் கிராமத்தார் விரைவாக செயல்பட்டு அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர் என்று அவர்கள் கூறினர்.

இந்தக் காணொளியை நாங்கள் newsflare வலை தளத்திலும் கண்டோம்.

அந்தக் கட்டுரை சொன்னது: வட இந்தியாவில் பனிபாறைச் சரிவில் மாட்டிக்கொண்ட பெண்ணை மீட்பாளர்கள் காப்பாற்றினர்.

புலன் விசாரணையின் அடுத்த கட்டமாக, விஷ்வாஸ் நியூஸ் காஷ்மீரில் நிலை கொண்டிருக்கும் தைனிக் ஜாக்ரனின் நிலையத் தலைவர், நவீன் நவாஸ்-உடன் தொடர்பு கொண்டது. அவர், இந்தக் காணொளி பூஞ்ச்-இல் உள்ள மனாய் கிராமத்தின் சூரன்கோட் பகுதியிலிருந்து வந்தது என்று உறுதியளித்தார். ஒரு பெண்ணும் அவரது மகளும் தண்ணீர் கொண்டுவரச் சென்று கொண்டிருந்தபோது பனிபாறைச் சரிவு ஏற்பட்டது. அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உறைபனியில் மாட்டிக் கொண்டனர். பிறகு அவர்கள் மீட்கப் பட்டனர்.

புலன் விசாரணையின் கடைசி கட்டமாக விஷ்வாஸ் நியூஸ், இந்த காணொளியை பகிர்ந்த தற்குறிப்பின் பின்புல சரிபார்ப்பு செய்தது. . صدائے نرتوپہ-ஐ 4100 தொடர்கிறார்கள், மேலும் அது 557 பேரைத் தொடர்கிறது.

निष्कर्ष: கடுமையான உறைபனியில் மாட்டிகொண்ட ஒரு பெண் மீட்கப்படுவதாக காட்டிய காணொளி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் என்ற இடத்திலிருந்து வந்தது, பாகிஸ்தானிலிருந்து அல்ல.

  • Claim Review : மர்ரீயில் உறைபனியில் புதைந்திருந்த உயிருடன் உள்ள பெண் சுற்றுலாப் பயணி உள்ளூர்காரர்களால் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
  • Claimed By : صدائے نرتوپہ
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later