Fact Check: லெப்டினன்ட் கிரண் ஷெகாவத் மறைவு 2015 இல் நடந்தது, வைரல் பதிவு தவறாக வழிநடத்துகிறது
கடந்த மாதம் பஹல்கமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை இலக்கு வைத்து இந்தியா வான் தாக்குதல் நடத்தியது.
- By: Ashish Maharishi
- Published: May 16, 2025 at 11:47 AM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்) கடந்த மாதம் பஹல்கமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை இலக்கு வைத்து இந்தியா வான் தாக்குதல் நடத்தியது. தற்போது இரண்டும் நாடுகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்கிறது. இதற்கிடையே சமூக ஊடகத்தில் ஒரு பதிவு வைரல் ஆகிறது. இந்த பதிவின் படி பெண் அதிகாரி கிரன் ஷெகாவத் வீரமரணம் அடைந்தார் என்பதாகும்.
சமூக ஊடகத்தில் சில பயனர்கள், தற்போதைய இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்கு நடுவே, இதை சமீபத்தியது எனக் கருதி பகிர்கின்றனர். இந்த பதிவை விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து இது தவறானது எனக் கண்டறிந்தது. உண்மையில், லெஃப்டினன்ட் கிரண் ஷெகாவத் மார்ச் 2015-ல் ஒரு விமான விபத்தில் இறந்தார். இவர் தொடர்பான தகவலை வைரலாக்குவதன் மூலம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
வைரலாவது என்ன?
பேஸ்புக் பயனர் நியூஸ் மிஷன் மே 12ம் தேதியன்று ஒரு பதிவில் பின்வருமாறு கூறியிருந்தார், “தியாகி பெண் அதிகாரி கிரண் ஷெகாவத் 27 வயதில் வீரமரணம் அடைந்துள்ளார்”

வைரல் பதிவின் உள்ளடக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. பல பயனர்கள் இதை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இதன் ஆர்க்கைவ் பதிப்பை இங்கே பார்க்கவும்.
விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் வைரல் பதிவை ஆராய முதலில் கூகுள் லென்ஸ் கருவியை பயன்படுத்தியது. வைரல் பதிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை வைத்து தேடியதில், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பழைய பதிவு ஒன்றை கண்டோம். மே 1, 2020 தேதியிட்ட இந்தப் பதிவில் மார்ச் 2015-ல் கோவாவில் கிரன் ஷெகாவத் வீரமரணம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

விசாரணையை மேலும் தொடர நாங்கள் கூகுள் ஓபன் சேர்ச் கருவியை பயன்படுத்தினோம். முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடியதில் கிரன் ஷெகாவத் தொடர்பான பல ஊடகச் செய்திகளை கண்டறிந்தோம். 29 மார்ச் 2015 தேதியைச் சேர்ந்த இந்தச் செய்தி லெஃப்டினன்ட் கிரன் ஷெகாவத்தின் விமானம் கோவா கரையில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது என்றும், சில நாட்களுக்குப் பின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
Patrika.com-ல் வெளியிடப்பட்ட பழைய செய்தியில் இவ்வாறு உள்ளது, ”கிரன 1 மே 1998-ல் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் செஃப்ராகுன்வர் கிராமத்தில் பிறந்தார். அவர் ஹர்யாணாவின் மேவட் மாவட்டத்தின் குர்த்தாலா கிராமத்தில் வசிக்கும் லெஃப்டினன்ட் விவேக் சிங் சோன்கரை திருமணம் செய்துள்ளார். ராணுவத்துடன் குடும்பத் தொடர்பு கொண்டிருந்த கிரண் பிள்ளைப் பருவத்திலிருந்தே ராணுவத்தில் சேருவதில் விருப்பமாக இருந்தார். 2010ம் ஆண்டில் அவருடைய ஆசையை நிறைவேற்றினார். திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் அவர் வீரமணம் அடைந்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தளபதி விவேக் மத்வால் விஷ்வாஸ் நியூஸிடம் கூறுகையில் லெஃப்டினன்ட் கிரன் ஷெகாவத் மார்ச் 2015-ல் நடந்த விமான விபத்தில் வீரமரணம் அடைந்தார் என்றும் வைரல் பதில் கூறப்பட்டுள்ள தகவல் பழையது என்றும் கூறினார்.
லெஃப்டினன்ட் கிரன் ஷெகாவத்தின் தந்தையான விஜேந்ரா சிங் ஷெகாவத்திடம் விஷ்வாஸ் நியூஸ் பேசியது, அப்போது அவர் தனது மகளின் மரணம் குறித்த பழைய பதிவுகளை சிலர் சமூக ஊடகத்தில் வைரலாக்குவதாகத் தெரிவித்தார். கிரண் மார்ச் 2015-ல் இறந்துள்ளார்.
விசாரணையின் முடிவில் தவறாக வழிநடத்தும் பதிவை பதிவிட்ட பயனரை ஆராய்ந்தோம். இந்த பேஸ்புக் பக்கம் நியூஸ் மிஷன் என்கிற பெயரில் உள்ளது, இதற்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பின்தொடரப்படுகிறது. இந்த பேஜ் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த குல்லு என்பரால் இயக்கப்படுகிறது.
முடிவு : விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரல் போஸ்ட் தவறாக வழிநடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. 2015-ல் லெஃப்டினன்ட் கிரன் ஷெகாவத் விமான விபத்தில் இறந்தார். அதன் தொடர்பான பதிவு, குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் தற்போதைய இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்கு நடுவே வைரலாக்கப்பட்டு வருகிறது.
- Claim Review : தியாகி பெண் அதிகாரி கிரண் ஷெகாவத் 27 வயதில் வீர மரணம் அடைந்துள்ளார்.
- Claimed By : ஃபேஸ்புக் பயனர் நியூஸ் மிஷன்
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











