X

உண்மை சரிபார்ப்பு: மூளையினை சேதப்படுத்தும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிடவில்லை

மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் பொய்யாக பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.

  • By Vishvas News
  • Updated: October 23, 2020

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). உலக சுகாதார அமைப்பு (WHO) மூளைக்கு தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் கூறுகிறது. இந்த புகைப்படத்தில் உலக சுகாதார அமைப்பின் சின்னமும் உள்ளது. இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, இந்த ​​வைரல் பட்டியல் WHO பெயரில் பொய்யாக பகிரப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம்.

கூற்று

உலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவை தவிர்ப்பது, தாமதமாக தூங்குவது, அதிக சர்க்கரை உட்கொள்வது, அதிக தூக்கம் கொள்வது (குறிப்பாக காலையில்) , தொலைக்காட்சி அல்லது கணினி பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்வது, தூங்கும் போது தொப்பி/குள்ளா அல்லது சாக்ஸ் அணிவது, சிறுநீரை நிறுத்தும் பழக்கம் ஆகியவையும் இதில் அடங்கும் என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.

இந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் செய்த ஆரம்ப சோதனையின்போது, ​​வைரல் கூற்றில் இலக்கண மற்றும் தொடரியல் பிழைகள் நிறைந்திருப்பதைக் கண்டோம். இடுகையின் இறுதியில், “Don’t Just ReadForward to whom you care As I care for U” என்று கூறப்பட்டுள்ளது. ‘You’ என்ற சொல் “u” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில சொற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி பிரச்சினைகளும் திருத்தப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இவற்றை வைத்து, உலக சுகாதார நிறுவனம் இந்த முறையில் பொது தகவல்களை வெளியிடுவது சாத்தியமில்லை என்று நாங்கள் முடிவு செய்தோம்.

இது பற்றி மேலும் விசாரிக்க நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, அதன் சுகாதார அவசரநிலை துறையின் தொழில்நுட்ப அதிகாரியுடன் பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், இந்த வைரல் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் பகிரவில்லை என்றும், அவர்கள் நிறுவனத்தின் பெயரில் இது பொய்யாக பகிரப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இந்த கூற்றினை இணையத்தில் நாங்கள் தேடியபோது, ​​இந்த கூற்று உலக சுகாதார நிறுவனத்தின் சின்னம் இல்லாமல், வேறு ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரில்,
2017 ஆம் ஆண்டு முதலே, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்தோம்.

கூற்றுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1 காலை உணவினை தவிர்த்தல்

தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, காலை உணவு தவிர்ப்பதற்கும், மூளை பாதிப்பு அடைவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்ற போதிலும், காலை உணவை தவிர்ப்பது பசியின்மைக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, காலப்போக்கில் எடை அதிகரித்து, அதுவே உடல்நலக்குறைவுக்கு வழிவகுக்கலாம். இந்த அறிக்கைகளை இங்கே படிக்கலாம்.

2 தாமதமாக உறங்குதல்

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நினைவாற்றலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அதிக தூக்கம் மற்றும் மிகக் குறைந்த தூக்கம் இரண்டுமே உடலுக்கு நல்லதல்ல. அதனால் ஒரு நபர் சராசரியாக குறைந்தபட்சம் ஏழு மணிநேர தூக்கத்தையாவது நிச்சயம் பெற வேண்டும்.

3 அதிக சர்க்கரை உட்கொள்ளல்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நாளில் உண்ணும் உணவில் 25 கிராம் சர்க்கரை இருப்பது அவசியமான ஒன்றாகும். இந்த அளவினைத் தாண்டி அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொள்வதனால், உடல்நலக்குறைவு ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4 காலையில் அதிக தூக்கம்

தேசிய மருத்துவ நூலகத்தின் கூற்றுப்படி,10 முதல் 15 நிமிடங்கள் வரை எடுக்கப்படும் ஆற்றல் தூக்கங்கள், ஒரு நபரின் ஆக்கத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், காலையில் தூங்குவது மூளைக்கு பாதிப்பினை விளைவிக்கும் என்று எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. பகல் நேரத்தில் தூங்குவது இரவில் சிலருக்கு சரியான தூக்கம் வராமல் போவதற்கு வழிவகுக்கக்கூடும். மேலும் இதன் விளைவாக, ஒருவர் இரவில் தூங்காதபோது, ​​உடல் தன்னைத்தானே இயற்கையாக குணப்படுத்திக் கொள்ளும் அதன் பண்பையும் இழக்கக்கூடும்.

5 தொலைக்காட்சி/ கணினி பார்த்துக்கொண்டே உணவு உண்ணுதல்

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் அறிக்கையின்படி, நீங்கள் உணவு உட்கொள்ளும் வேளையில் உங்கள் கவனம் திசைதிருப்பப்பட்டால், ​​அது அதிகமான உணவை உட்கொள்ள வழிவகுக்கலாம். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நீங்கள் சாப்பிடும் உணவின் சுவை உங்களுக்குத் தெரியாமலும் போகலாம். இருப்பினும், கவனத்தை சிதறவிட்டுக்கொண்டே உணவினை உண்பதற்கும், மூளை பாதிப்பு அடைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

6 உறங்கும் போது தொப்பி, சாக்ஸ் அணிவது

ஒரு ஆய்வின்படி, உறங்கும் வேளையில், குறிப்பாக குளிரான தேசங்களில், கால்களில் சாக்ஸ் அணிந்து பாதங்களை சூடாக வைத்திருப்பது, உறக்கத்தின் துவக்கத்தை விரைவுபடுத்தி, உடலை தளர்த்தி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், வெப்பமண்டல நாடுகளில், சாக்ஸுடன் தூங்குவது உடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

7 சிறுநீரைத் தடுக்கும் பழக்கம்

சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது காலப்போக்கில் சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்தி, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இச்செயல்களை செய்கையில், இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த இடுகை லைஃப் டெகோரம் என்ற பக்கத்தால் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இப்பக்கத்தினை ஆராய்ந்ததில், இந்த ​​பயனருக்கு இன்று வரை 286 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

निष्कर्ष: மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் பொய்யாக பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.

  • Claim Review : உலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவை தவிர்ப்பது, தாமதமாக தூங்குவது, அதிக சர்க்கரை உட்கொள்வது, அதிக தூக்கம் கொள்வது (குறிப்பாக காலையில்) , தொலைக்காட்சி அல்லது கணினி பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்வது, தூங்கும் போது தொப்பி/குள்ளா அல்லது சாக்ஸ் அணிவது, சிறுநீரை நிறுத்தும் பழக்கம் ஆகியவையும் இதில் அடங்கும் என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.
  • Claimed By : பேஸ்புக் பக்கம் லைஃப் டெகோரம்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later