X

உண்மை சரிபார்ப்பு: இந்த ரயில் அதானிக்கு சொந்தமானதல்ல, விளம்பரத்தைக் கொண்டுள்ள என்ஜினின் வைரல் காணொலி தவறான கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: December 22, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). அதானி குழுமம் குறித்த விளம்பரத்தைக் கொண்டுள்ள ஒரு இரயிலின் காணொலி, அதானி இரயில் வந்ததாக கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொலியில் உள்ள ரயிலின் வெளிப்புறம், அதானி வில்மரினையும், பார்ச்சூன் சக்கி ஃப்ரெஷ் மாவு என்ற லோகோவை அதன் எஞ்சினும் விளம்பரப்படுத்துகிறது.

விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்தது. இந்த வைரல் கூற்றில் கூறப்பட்டுள்ளது போல, மேற்கு ரயில்வேயால் இயக்கப்படும் ரயில் அதானிக்கு விற்கப்படவில்லை. மேற்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர், தாங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் என்ஜின்களில் இதுவும் ஒன்று என்று கூறி, இந்த வைரல் கூற்றுகளை மறுத்துவிட்டார்.

கூற்று

அதானி வில்மர் மற்றும் பார்ச்சூன் சக்கி ஃப்ரெஷ் மாவு ஆகியவற்றின் விளம்பரங்களை தன் வெளிப்புற பகுதியில் கொண்டுள்ள ஒரு ரயிலின் வைரல் காணொலி, இந்த ரயில் அதானிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பேஸ்புக் பயனரான பழனி குணசேகரன் என்பவர், இந்த காணொலியைப் பகிர்ந்து,”ஐயா எங்க ஊருக்கு அதானி ரயில் வந்துருச்சு.. இனி சொகுசாக ஊரை சுத்தும்… ஏழைகள் எல்லாம் பசியால் சுடுகாடு போகும்,” என்று எழுதியுள்ளார்.
இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இந்தக் கூற்றினை சரிபார்க்க நாங்கள் இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனாவை தொடர்பு கொண்டு பேசினோம். பைனான்சியல் எக்ஸ்பிரஸின் ஒரு செய்தி கட்டுரையை எங்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், இது விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இந்திய ரயில்வே என்ஜின் மட்டுமே என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.

ரயில்வே துறையின் கூற்றுப்படி, இந்திய ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிக்க கடந்த சில ஆண்டுகளாக ரயில் என்ஜின்களில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமுல் போன்ற பிற நிறுவனங்களின் விளம்பரங்களையும் சில ரயில்களில் இருப்பதை நம்மால் காண முடிகிறது.

ரயில்வே துறை அதன் வருமானத்தை அதிகரிக்க, அதானி மற்றும் ஹல்திராம் ஆகிய நிறுவனங்களின் முதலீடுகளை எதிர்பார்க்கிறது என்று கூறும் மற்றொரு செய்தி கட்டுரையையும் எங்களால் காண முடிந்தது. மேலும் வதோதராவில் இயங்கும் ரயில்களில் கொடுக்கப்படும் விளம்பரத்திற்கு, அதானி வில்மர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வைரல் காணொலியில் காட்டப்பட்டும் என்ஜினில் வதோதரா மற்றும் அதானி-வில்மர் என்று எழுதப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது.

வதோதரா மேற்கு ரயில்வே துறையின் கீழ் வருவதன் காரணமாக, இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் மேற்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கேம்ராஜ் மீனாவை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், ஒப்பந்தத்தின் அடிப்படையில், எந்தவொரு தனியார் நிறுவனமும் அதன் தயாரிப்புகளை விளம்பரம் செய்யலாம் என்று அவர் நமக்கு விளக்கினார். மேலும் தொடர்ந்த அவர், “இது முதல் முறை அல்ல. இது ஏற்கனவே நடப்பில் உள்ள ஒன்றே. ரயில்வே அதானிக்கு விற்கப்பட்டுள்ளது என்று சொல்வது முற்றிலும் தவறானது,” என்று கூறினார்.

அதானி-வில்மர் என்பது இந்தியாவின் அதானி குழுமத்திற்கும், சிங்கப்பூரின் வில்மார் இன்டர்நேஷனலுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும்.

இந்த பதிவினைப் பகிர்ந்துகொண்ட பேஸ்புக் பயனரர் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பழனியில் வசிப்பவர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. அதானியின் தயாரிப்பினை விளம்பரப்படுத்தும் ரயில் என்ஜினின் காணொலி, ரயில்வே துறை ரயிலை அதானிக்கு விற்றுவிட்டது என்ற தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. என்ஜினில் விளம்பரப்படுத்துவதன் மூலம் ரயில்வே துறை, தனியார் நிறுவனங்களிடமிருந்து வருவாய் ஈட்டுகிறது என்பதே உண்மை.

  • Claim Review : எங்க ஊருக்கு அதானி ரயில் வந்துருச்சு
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later