உண்மை சரிபார்ப்பு: கோரக்பூர் எம்பி ரவி கிஷனின் கூற்று உள்ள வெட்டப்பட்ட காணொளி தவறான சூழலில் வைரல் ஆகியுள்ளது.
விஷ்வாஸ் நியூஸின் புலன் விசாரணையில், எம்பி ரவி கிஷன் சம்பந்தப்பட்ட வைரல் பதிவு தவறாக வழிநடத்துவது என்று தெரிய வந்தது. அந்த வைரல் காணொளி வெட்டப்பட்டுள்ளது.
- By Vishvas News
- Updated: February 16, 2022

புது டில்லி (விஷ்வாஸ் நியூஸ்): கோரக்பூர் எம்பி ரவி கிஷனின் எட்டு வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களின் பல தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் “தேர்தல் காகிதத்தை அவர் நிரப்பி விட்டு போய் விட வேண்டும். தேர்தல் பிரச்சாரங்கள் இங்கு செய்யக்கூடாது. அது அவமானகரமானது” என்று முதலமைச்சர் யோகி ஆதிநாத்திடம் அவர் கூறுவதாக கேட்கிறது. சிலர் இந்த காணொளியை வைரல் செய்துவிட்டு யோகி ஆதித்யநாத்தை ரவி கிஷன் அவமானப்படுத்துவதாக கூறுகின்றனர். விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவை புலன் விசாரணை செய்தது. புலன் விசாரணையில் வெட்டப்பட்ட நிலையில் ரவி கிஷனின் கூற்று தவறான சூழலில் வைரல் ஆவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
எது வைரல் ஆகிறது
ஃபேஸ்புக் பயனர் விஷால் பக்ஷி 5, பிப்ரவரி அன்று எம்பி ரவி கிஷனின் காணொளி ஒன்றை பதிவேற்றி விட்டு, அவர் சொல்வதாகச் சொல்கிறார்: “சீட்டை நிரப்பி விட்டு இங்கிருந்து செல்லட்டும், இல்லையென்றால் மிகுந்த அவமானம் ஏற்படும் … இது மிகவும் அவமானகரமானது என்று அஜய் சிங் பிஷ்ட்டிடம் சொல்லுங்கள்!”
ஃபேஸ்புக் பதிவின் உள்ளடக்கம் அது இருப்பதைப் போலவே இங்கு எழுதப்பட்டிருக்கிறது. அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். மேலும் பல பயனர்கள் இதபோன்ற உரிமைக் கோரிக்கைகளோடு வெவ்வேறு சமூக ஊடகங்களில் இந்தப் படத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
புலன் விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் கோரக்பூர் பிஜேபி எம்பி ரவி கிஷனை இந்த கூற்றின் உண்மைத்தன்மையை அறிவதற்காக, நேரடியாகத் தொடர்பு கொண்டது. சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் சிலர் வேண்டுமென்றே ஈடுபடுவதாக அவர் விஷ்வாஸ் நியூசிடம் கூறினார்.
இந்த வைரல் பதிவில், நியூஸ் சேனல் நியுஸ்24-இன் மைக்கைத் தெளிவாகக் காணலாம். நாங்கள் நியுஸ்24-இன் ட்விட்டர் ஹேண்டிலைத் தேடினோம். இந்த முழுக் காணொளி பிப்ரவரி 4 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில், பிஜேபி எம்பி ரவி கிஷன் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது சொல்வது போல் உள்ளது, அதன் மொழி பெயர்ப்பு: “மகாராஜ் ஜியிடம் படிவத்தை பூர்த்தி செய்து விட்டு கிளம்பிப் போகச் சொல்லுங்கள். அவர் இருந்து இங்கே பிரச்சாரம் செய்தால் எங்களுக்கு அவமானமாக இருக்கும். அவரை லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேலை செய்கிறோம். அது எப்படி என்றால் மகாராஜ் ஜிக்கு கிடைக்கபோகும் வெற்றி போல உத்தர பிரதேஷ் சரித்திரத்தில் அதிகமான வெற்றி இருக்கவே போவதில்லை என்று உங்கள் சேனலின் பார்வையாளர்களுக்கு சொல்கிறோம்.”
முழு பேச்சையும் இங்கே காணலாம்.
புலன் விசாரணையின் முடிவில் விஷ்வாஸ் நியூஸ் இந்த போலி பதிவை பதிவு செய்த பயனரின் தற்குறிப்பை ஸ்கேன் செய்தது. ஃபேஸ்புக் பயனர் விஷால் பக்ஷியை சமூக ஸ்கேன் செய்தது அந்த பயனர் மத்திய பிரதேசத்தில் உள்ள தமோ என்ற இடத்தில் வசிப்பவர் என்று தெரியப் படுத்தியது.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸின் புலன் விசாரணையில், எம்பி ரவி கிஷன் சம்பந்தப்பட்ட வைரல் பதிவு தவறாக வழிநடத்துவது என்று தெரிய வந்தது. அந்த வைரல் காணொளி வெட்டப்பட்டுள்ளது.
- Claim Review : சீட்டை நிரப்பி விட்டு இங்கிருந்து செல்லட்டும், இல்லையென்றால் மிகுந்த அவமானம் ஏற்படும் … இது மிகவும் அவமானகரமானது என்று அஜய் சிங் பிஷ்ட்டிடம் சொல்லுங்கள்!”
- Claimed By : விஷால் பக்ஷி
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com