X

உண்மை சரிபார்ப்பு: முலாயம் சிங் யாதவ் மற்றும் ஸ்ம்ரிதி இரானி பற்றிய போலி உரிமைக்கோரிக்கை சமூக ஊடகங்களில் வைரல்

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், முலாயம் சிங் யாதவின் பெயரில் வைரலில் இருக்கும் இந்தக் கூற்று பொய் என்று ஆனது. விசாரணையின்போது, முலாயம் சிங் யாதவ் இது போன்ற எந்த கூற்றையும் கூறவில்லை என்று விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது.

  • By Vishvas News
  • Updated: February 20, 2022

புது டெல்லி (விஷ்வாஸ் குழு). மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்ஜெட் அமர்வின் போது முலாயம் சிங் யாதவிடம் சென்று ஆசி வாங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல ஆகிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்பு படுத்தி, யோகி ஆதித்யநாத் மீண்டும் உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஆகவேண்டும் என்பது தன் விருப்பம் என முலாயம் சிங் யாதவ் ஸ்மிரிதி இரானியிடம் சொன்னதாக அந்த வைரல் பதிவு உரிமைக் கோரிக்கை விடுக்கிறது. விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவை சோதித்துவிட்டு அந்த உரிமைக்கொரிக்கை தவறு என்று கண்டுபிடித்தது. அந்தக் கூற்று முலாயம் சிங் யாதவால் கொடுக்கப்பட்டஹு அல்ல.

அந்த வைரல் பதிவில் உள்ளது என்ன?

31 ஜனவரி 2022 அன்று இந்த வைரல் பதிவு பகிர்ந்து ஃபேஸ்புக் பயனர் ஜேபி சிங் “பெரிய செய்தி யோகி ஜி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சராக மீண்டும் ஆக வேண்டும் என்பது எனது மனதார்ந்த விருப்பம் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் கூறினார்” என்று எழுதினார்.

ஃபேஸ்புக் பயனர் விவேக் பிரதாப் சிங் சோட்டு இதே போன்ற ஒரு பதிவை தன ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். சமூக ஊடங்கங்களில் உள்ள வேறு பல பயனர்களும் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளனர்.
பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

புலன் விசாரணை

இந்த வைரல் க்ளைமின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, நாங்கள் கூகுளில் சில முக்கிய வார்த்தைகள் மூலம் தேடினோம், ஆனால் இந்த வைரல் க்ளைமின் தொடர்பான எந்த ஒரு நம்பத்தகுந்த ஊடக அறிக்கையையும் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. முலாயம் சிங் யாதவ் இது போன்ற ஒரு கூற்றை சொல்லியிருந்தால், அவர் நிச்சயமாக தலைப்புச் செய்தியாக ஆகியிருப்பார் மேலும் அதைக்குறித்து ஏதாவது ஊடக அறிக்கைகள் கட்டாயமாக வந்திருக்கும். பட்ஜெட் அமர்வின்போது, ஸ்மிரிதி இரானி நிச்சயமாக முலாயம் சிங் யாதவின் கால்களைத் தொட்டு அவரது ஆசிகளை வாங்கினார், ஆனால் இரானியிடம் அவர் எதுவும் சொன்னதாக எந்த ஊடக அறிக்கையும் இல்லை.

புலன்விசாரணையை மேலும் தொடர்ந்து, நாங்கள் ஸ்மிரிதி இரானியின் சமூக ஊடக கணக்குகளை தேடினோம். இந்த வைரல் க்ளைமுக்கு சம்பந்தப்பட்ட எந்தப் பதிவையும் நாங்கள் காணவில்லை.

மேல் விவரங்களுக்காக, தைனிக் ஜாக்ரனின் உத்தர பிரதேச டிஜிட்டல் பொறுப்பாளர், தர்மேந்திர குமார் பாண்டேவை அணுகினோம். அவர் அந்த வைரல் க்ளைம் தவறு என்று சொன்னார். இருவரும் பட்ஜெட் அமர்வின் போது பார்லிமென்ட்டில் சந்தித்தனர். அனைத்து ஊடகங்களும் அங்கு இருந்தன. ஸ்மிரிதி இரானி முலாயம் சிங் யாதவின் கால்களைத் தொட்டார், ஆனால் இது போல வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இப்படி இருந்திருந்தால், அவர்களில் ஒருவராவது ஊடகங்களின் முன்னிலையில் இதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்.

நாங்கள் சமாஜ்வாடி பார்ட்டி தேசிய செய்தித் தொடர்பாளர் மனோஜ் கக்கா-வை ஒரு முழுமையான உறுதிப்படுத்தலுக்காக தொடர்பு கொண்டோம். அவர் அந்த வைரல் க்ளைம் தவறு என்று சொன்னார். முலாயம் சிங் யாதவ் ஒரு மிக மூத்த தலைவர். அனைவரும் அவரிடம் ஆசி பெற வருகிறார்கள், அவர் நெறிமுறைகளின்படி அனைவருக்கும் ஆசி அளிக்கிறார். பிஜேபியின் தகவல் தொழில்நுட்பத் துறை சமாஜ்வாடி கட்சியின் புகழை கெடுப்பதற்காக இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புகிறது.

புலன்விசாரணையின் முடிவில், இந்த உரிமைக் கோரிக்கையைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் ஜேபி சிங்கின் கணக்கை ஸ்கேன் செய்தோம். ஃபேஸ்புக்கில் அந்தப் பயனரை ஐம்பத்து ஆறு ஆயிரம் மக்களுக்கு மேல் தொடர்கிறார்கள் என்று கண்டு பிடித்தோம். ஜேபி சிங் என்ற பெயரில் உள்ள பயனரின் இந்தப் பக்கம் ஃபேஸ்புக்கில் 12 ஆகஸ்ட் 2021 முதல் பயன்பாட்டில் இருக்கிறது.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், முலாயம் சிங் யாதவின் பெயரில் வைரலில் இருக்கும் இந்தக் கூற்று பொய் என்று ஆனது. விசாரணையின்போது, முலாயம் சிங் யாதவ் இது போன்ற எந்த கூற்றையும் கூறவில்லை என்று விஷ்வாஸ் நியூஸ் கண்டுபிடித்தது.

  • Claim Review : பெரிய செய்தி யோகி ஜி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சராக மீண்டும் ஆக வேண்டும் என்பது எனது மனதார்ந்த விருப்பம் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் கூறினார்
  • Claimed By : ஜேபி சிங்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later