X

உண்மை சரிபார்ப்பு: மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதாக வதந்தி

  • By Vishvas News
  • Updated: March 21, 2021

விஸ்வாஸ் செய்தி (புது தில்லி). மம்தா பானர்ஜியின் காலில் உள்ள கட்டு, இடமிருந்து வலமாக மாறியுள்ளதாகவும், அதனால் அவர் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று பொய் உரைக்கிறார் என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாகிறது.

விஸ்வாஸ் செய்தி இந்த வைரல் இடுகை குறித்து விசாரித்ததில், ​​மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயத்தின் அசல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் வைரலாகிறது.

கூற்று

பேஸ்புக் பயனர் நிலேஷ் கலா, 16 மார்ச் அன்று மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை பதிவேற்றி, ​​‘எலும்பு முறிவு இடமிருந்து வலமாக மாறியுள்ளது..இது நிச்சயம் மருத்துவ அதிசயம் தான் …’ என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், “மருத்துவமனையில் இடது காலில் இருந்த கட்டு வெளியே வரும் போது வலது காலில் மாறியுள்ளது. மூன்றாம் நாளில் வீல் சேரில் இருந்து எழுந்து நடக்கும் மம்தா பானர்ஜி,” என்று எழுதியுள்ளார்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க நாங்கள் கூகுள் பின்னோக்கிய படக் கருவியில் இந்த வைரல் புகைப்படத்தைத் தேடியதில், இதன் அசல் புகைப்படத்தை ஏபிபி மஜ்ஹாவின் இணையதளத்தில் கண்டோம். அதில் உள்ள புகைப்படத்தில், மம்தா பானர்ஜியின் இடது காலில் கட்டு கட்டப்பட்டிருப்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.

மேலும் இது பற்றி விசாரித்ததில், ​​அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காணொலியை யூடியூப்பில் கண்டறிந்தோம். இதில், சக்கர நாற்காலியில் இருந்து அவர் காரில் ஏறுவதை நம்மால் காண முடிகிறது. இந்த காணொலியை இந்துஸ்தான் டைம்ஸ் யூடியூப் சேனல் 13 மார்ச் அன்று பதிவேற்றியுள்ளது.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் கொல்கத்தா டைனிக் ஜாக்ரானின் பணியகத் தலைவர் JK வாஜ்பாயை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், மம்தா பானர்ஜியின் இடது காலில் காயம் ஏற்பட்டதால் கட்டு போடப்பட்டதாகவும், இந்த வைரல் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அசல் படத்திற்கும், எடிட் செய்யப்பட்ட படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கீழே காணலாம். புகைப்பட எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் நிலேஷ் காலேவின் கணக்கினை ஆராய்ந்ததில், இவருக்கு 400 க்கும் மேற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

निष्कर्ष: மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயத்தின் அசல் படம் எடிட்டிங் கருவியின் உதவியுடன் எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.

  • Claim Review : மருத்துவமனையில் இடது காலில் இருந்த கட்டு வெளியே வரும் போது வலது காலில் மாறியுள்ளது. மூன்றாம் நாளில் வீல் சேரில் இருந்து எழுந்து நடக்கும் மம்தா பானர்ஜி
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later