உண்மை சரிபார்ப்பு: கொல்கத்தாவில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது
இந்த வைரல் புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதல்ல. இது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
- By Vishvas News
- Updated: October 28, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகாரில் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில், பல அரசியல் பதிவுகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பீகாரில் இருந்து வந்ததாகக் கூறி ‘Go Back Modi’ என்ற கோஷத்துடன் பகிரப்படும் இடுகை வைரலாகி வருவதை எங்களால் காண முடிந்தது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது பீகாரில் தேர்தலின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வருகின்றன.
கூற்று
சமூக ஊடக பயனரான ‘கீரனூர் ஷா நவாஸ்’ என்பவர் இந்த வைரல் புகைப்படத்தை (இணைப்பு) பகிர்ந்து, ”பீகாரில் எதிர்ப்பு தீ பற்றி எரிகிறது… Go Back Modi,” என்று எழுதியுள்ளார்.
பல பயனர்களும் இந்த புகைப்படத்தை வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை
இது குறித்து விசாரிக்க கூகுள் தலைகீழ் படத் தேடலைப் பயன்படுத்தி இந்த படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், பத்திரிகையாளர் மயுக் ரஞ்சன் கோஷின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் 11 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டிருந்த ட்வீட்டில் இந்த புகைப்படத்தைக் கண்டோம். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கோஷ், “இது கொல்கத்தாவின் பரபரப்பான சாலைகளில் ஒன்று #எஸ்ப்ளேனேட். பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும், நெருக்கடி நிரம்பிய போக்குவரத்து கொண்ட சாலை இதுவாகும். இன்றிரவு இந்த இடத்தைப் பாருங்கள். மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி வருவதால் சாலைகள் வண்ண சித்திரங்கள் போல மாறி, போக்குவரத்து ஏதுமின்றி, அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதுதான் #கொல்கத்தா #modiinkolkata,” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு சமூக ஊடக பயனரான மதுரிமாவும் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து கொல்கத்தாவில் உள்ள எஸ்ப்ளேனேடில் எடுக்கப்பட்டதாக கூறும் மூன்று புகைப்படங்களுடன் இந்த வைரல் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை உற்று கவனித்ததில், புகைப்படத்தின் பின்னணியில் இருந்த சுவரில் சொற்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டோம். அவற்றை அடையாளம் காண முயற்சித்ததில், அதில் ‘Metro Channel Control Post Hare Street Police Station’ என்று எழுதிப்பட்டிருந்ததை கண்டோம்.
இந்த சொற்களைப் பயன்படுத்தி இணையத்தில் தேடியபோது, 3 பிப்ரவரி 2019 அன்று ‘தி இந்து’ வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் ஒரு புகைப்படத்தைக் கண்டோம். அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வைரல் புகைப்படத்தில் இருக்கும் சுவரின் முன் அமர்ந்திருப்பதைக் நம்மால் காண முடிந்தது. அக்கட்டுரையில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் எஸ்ப்ளேனேடில் உள்ள ஹரே வீதி காவல் நிலையத்தின் மெட்ரோ சேனல் கட்டுப்பாட்டு அறையின் முன் தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்,” என்று கூறப்பட்டிருந்தது.

புகைப்பட வலைதளமான கெட்டியிலும் (Getty) இந்த புகைப்படம் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது.
கூகுள் வரைபடமும், வங்காளத்தில் இந்த இடம் அமைந்திருப்பதை (மெட்ரோ சேனல் காவல் நிலையம், எஸ்ப்ளேனேட்) எங்களுக்கு உறுதிப்படுத்தியது. இதன் மூலம் இந்த புகைப்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பழைய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பதையும், இது பீகாரில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் மயுக் ரஞ்சன் கோஷை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் புகைப்படம் மேற்கு வங்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது . இது ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட மெட்ரோ சேனலுக்கு வெளியே இருந்த காட்சி, … ” என்றார்.
இந்த வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவர் என்பதும், அக்கணக்கிற்கு 800 மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்கு தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதல்ல. இது மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
- Claim Review : நாம போட்ட விதை #GoBackModi. பீகார் மக்கள் தொடர்கிறார்கள். அருமை.
- Claimed By : பேஸ்புக் பயனர் ஃபாரூக் முகமது
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com