X

உண்மை சரிபார்ப்பு: கோவா காங்கிரஸின் சமூக ஊடகத் தலைவரின் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: October 15, 2020

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). காங்கிரஸ் நிகழ்வு ஒன்றில் மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம், அவர்தான் டாக்டர் ராஜ்குமாரி என்றும், அவரே ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்து செய்தி சேனல்களுக்கு நேர்காணல்களை வழங்கினார் என்ற கூற்றுகளுடன் வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த வைரல் பதிவு தவறானது என்பதும், கோவா காங்கிரஸின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரதிபா போர்கரின் பழைய புகைப்படமே தற்போது சில தவறான கூற்றுக்களுடன் வைரலாகி வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

பேஸ்புக் பயனர் மங்கேஷ் பவார் அக்டோபர் 12 அன்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “ஹத்ராஸ்..இது #டாக்டர்_ராஜ்குமாரி என்ற #நக்சல் பெண், பாதிக்கப்பட்டவரின் போலி மைத்துனராக மாறி செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 25 வரை பாதிக்கப்பட்டவரின் வீட்டில் வசித்து, பாதிக்கப்பட்டவரின் மைத்துனராக செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல்களை வழங்கினார்,” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு சமூக ஊடக பயனர், “காங்கிரஸ் நிகழ்வில் ஹத்ராஸ் போலி பெண்மணி…” என்று எழுதி, இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

விஸ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி வைரல் புகைப்படங்களைத் தேடினோம். அந்தத் தேடலில் பல இணைப்புகளை ஆராய்ந்த பிறகு, பிரதிபா போர்கரின் பேஸ்புக் கணக்கில் அதன் உண்மையான புகைப்படத்தைக் கண்டோம். அப்புகைப்படம் மே 12 அன்று அவரது அட்டைப் (கவர்) புகைப்படமாக இருந்துள்ளது.

நாங்கள் கோவா காங்கிரஸின் பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்ததில், 29 செப்டம்பர் 2019 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தைக் கண்டோம்.

அக்டோபர் 14 ஆம் தேதி கோவா காங்கிரஸ் பக்கத்தால் பதிவேற்றப்பட்ட பிரதிபா போர்கரின் காணொளியையும் நாங்கள் கண்டோம், அதில் “GPCC சமூக ஊடக பொறுப்பாளர் பிரதிபா போர்கர், சமூக ஊடக தளங்கள் மூலம் அவர் மற்றும் அவர் கட்சியின் மற்ற தலைவர்கள் தொடர்பாக இழிவான மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவா காவல்துறையின் டி.ஜி.பியிடம் 14/10/2020 அன்று புகார் அளித்தார்,” என்று குறிப்படப்பட்டிருந்தது.

இந்த கூற்றைச் சரிபார்க்க கோவா காங்கிரசின் சமூக ஊடகத் தலைவர் பிரதிபா போர்கரைத் தொடர்புகொண்டோம். ஹத்ராஸின் நக்சல் பெண் என்ற தவறான கூற்றுடன் அவரது புகைப்படம் வைரலாகி இருப்பதாக அவர் எங்களிடம் கூறினார். “கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படம், என்னை காயப்படுத்த வேண்டியே தற்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகி உள்ளது. கோவா காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார் போர்கர்.

ஹத்ராஸ் வழக்கில் தொடர்புள்ள மைத்துனர் (பெண்) குழப்பம் குறித்து விசாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். டைனிக் ஜாக்ரானின் ஒரு செய்தி கட்டுரையின் படி, “எஸ்ஐடி குழு மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தேடுகிறது. இதற்கிடையில், தான் ஒரு நக்சலைட் என்று குற்றம் சாட்டப்பட்டதனால், ​​டாக்டர் ராஜ்குமாரி பன்சால் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார்… ” என்று குறிப்படப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்றும், பூல்காதி கிராமத்தில் மட்டுமே அவர்களை சந்தித்ததாகவும் பன்சல் வெளியிட்ட அறிக்கையை இந்தக் கட்டுரை மேற்கோளிட்டு காட்டுகிறது.

இந்தியா டுடே தனது ட்விட்டர் கணக்கினில் அக்டோபர் 13 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது, அதில் பன்சால் நக்சலைட்டுகளுடனான தனது தொடர்பு குறித்த கூற்றுக்களை மறுப்பதைக் நம்மால் காண முடிந்தது.

வைரல் இடுகையைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் மங்கேஷ் பவாரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 486 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. புகைப்படத்தில் உள்ள பெண் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்ட டாக்டர் ராஜ்குமாரி பன்சால் அல்ல. கோவா காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் பிரதிபா போர்கரின் புகைப்படமே தற்போது தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.

  • Claim Review : ஹத்ராஸ்..இது #டாக்டர்_ராஜ்குமாரி என்ற #நக்சல் பெண், பாதிக்கப்பட்டவரின் போலி மைத்துனராக மாறி செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 25 வரை பாதிக்கப்பட்டவரின் வீட்டில் வசித்து, பாதிக்கப்பட்டவரின் மைத்துனராக செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல்களை வழங்கினார்
  • Claimed By : பேஸ்புக் பயனர் மங்கேஷ் பவார்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later