X

உண்மை சரிபார்ப்பு: இந்தியன் ஆயில் அதானிக்கு விற்கப்படவில்லை

  • By Vishvas News
  • Updated: February 20, 2021

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). இந்தியன் ஆயில் மற்றும் இந்தியன் ஆயில் – அதானி எரிவாயு எரிபொருள் பம்ப் ஆகியவற்றின் புகைப்படங்களைக் கொண்டுள்ள ஒரு படத்தொகுப்பு, ஆளும் கட்சி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டை தனியாருக்கு விற்றுள்ளது என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்தது. இந்தியன்-ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட்டின் (IOAGPL) செய்தித் தொடர்பாளர் இது கூட்டு நிறுவன முயற்சி என்று கூறி இக்கூற்றுக்களை மறுத்துவிட்டார்.

கூற்று

இந்தியன் ஆயில் அதானிக்கு விற்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவலாக ஒரு படத்தொகுப்பு பகிரப்படுகிறது. இது நம் நாட்டில் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தை, பாஜக ஆட்சியுடன் ஒப்பிடுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இந்த புகைப்படம் இதே போன்ற கூற்றுடன் பல்வேறு இந்திய மொழிகளிலும் பகிரப்படுவதை நம்மால் காண முடிந்தது.

விசாரணை

இந்தியன் ஆயில் மற்றும் அதானி எரிவாயு பற்றிய தகவல்களுக்காக இணையத்தில் தேடினோம். IOAGPL வலைத்தளத்தின்படி, “IOAGPL என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOC) – இந்திய அரசின் மகாரத்னா நிறுவனம் மற்றும் அதானி குழுவின் முன்னணி நகர எரிவாயு விநியோக நிறுவனமான அதானி கேஸ் லிமிடெட் (AGL) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். நிலத்தடி குழாய்களின் நெட்வொர்க் மூலம் இயற்கை எரிவாயுவினை விநியோகிக்க, நாடு முழுவதும் நகர எரிவாயு விநியோக திட்டங்களை செயல்படுத்த ஐஓஏஜிபிஎல் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் இணையதளத்திலும் இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மை பற்றிய தகவல்களை நம்மால் காண முடிந்தது.

மேலும் 2013 ஆம் ஆண்டில் இரு நிறுவனங்களும் 50:50 கூட்டு முயற்சியை இணைத்துள்ளன என்பதை உறுதிப்படுத்தும் பழைய செய்தி அறிக்கைகளும் நமக்குக் கிடைத்தன.

இதனை தெளிவுபடுத்துவதற்காக IOAGPL- இன் செய்தித் தொடர்பாளரை நாங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த கூற்றுக்களை மறுத்த அவர், இது 2013 அக்டோபரில் நாடு முழுவதும் எரிவாயு விநியோக திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சி என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்து கொண்ட வொயிட் பாலிடிக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தின் ஆராய்ந்ததில், இது 1,65,730 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பதையும், 2020 பிப்ரவரியில் இது உருவாக்கப்பட்டது என்பதையும் நாங்கள் அறிந்தோம்.

निष्कर्ष: இந்த வைரல் இடுகை தவறானது. இந்தியன் ஆயில் தனியார் நிறுவனமான அதானிக்கு விற்கப்படவில்லை. IOAGPL என்பது நாடு முழுவதும் எரிவாயு விநியோக திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சி.

  • Claim Review : இந்தியன் ஆயில் அதானிக்கு விற்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவலாக ஒரு படத்தொகுப்பு பகிரப்படுகிறது
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : Misleading
Misleading
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later