X

உண்மை சரிபார்ப்பு: கால்பந்து விளையாட்டு வீரர் மெஸஸியின் பழைய புகைப்படம் போலியான ஒரு உரிமைக் கோரிக்கையுடன் வைரல்

விஷ்வாஸ் நியூஸ் அதன் புலன் விசாரணையில் அந்த வைரல் உரிமைக் கோரிக்கை போலி என்று கண்டு பிடித்தது. மெஸ்ஸி காமரூனுக்கு சமீபத்தில் செல்லவில்லை. லயோனல் மெஸ்ஸியின் இந்த புகைப்படம், அவர் 2015-இல் காபோனில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுவதற்காக வந்த போது எடுக்கப்பட்டது.

  • By Vishvas News
  • Updated: January 30, 2022

குவாஹாத்தி (விஷ்வாஸ் நியூஸ்): கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி காமரூன் கால்பந்து சங்கத் தலைவரும், மெஸ்ஸியின் பார்சிலோனா குழுவின் முற்கால சக தோழருமான சாமுவேல் ஈடோ-வின் அழைப்பின் பேரில் காமரூன்-க்கு செல்வதாக உரிமைக் கோரிக்கை விடுத்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரல் ஆக இருக்கிறது. தான் தேர்வு பெறுவதற்கு முன் மெஸ்ஸியை வருமாறு அழைப்பதாக உறுதி அளித்ததாகவும்,அந்த உறுதியை அவர் இப்போது பூர்த்தி செய்கிறார் என்றும் இந்தப் பதிவு உரிமைக் கோரிக்கை விடுக்கிறது. விஸ்வாஸ் நியூஸ் தனது புலன் விசாரணையில், இந்த வைரல் உரிமைக் கோரிக்கை போலி என்று கண்டிபிடித்தது. மெஸ்ஸி சமீபத்தில் காமரூன் செல்லவில்லை. லயோனல் மெஸ்ஸியின் இந்தப் புகைப்படம் அவர் கபோனுக்கு 2015-இல் ஒரு விளையாட்டு அரங்குக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்டது.

இந்த வைரல பதிவு என்ன?

Ghetto Youth TV என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்தப் பதிவைப் பகிர்ந்து, எழுதியது: காமரூன் வரும் மெஸ்ஸிக்கு வரவேற்பு தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மெஸ்ஸியை காமரூன்-க்கு அழைத்து வருவதாக காமரூன் மக்களுக்கு சாமுவேல் எடோ’ஓ வாக்களித்தார். மெஸ்ஸி பாஃபுல் சர்வதேச விமான நிலையத்தில் இப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறார்.’

இந்த வைரல பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணவும்.

புலன் விசாரணை 

விஷ்வாஸ் நியூஸ் யான்டெக்ஸ் ரிவர்ஸ் இமேஜ் தேடு கருவியின் உதவியோடு இந்த வைரல புகைப்படத்தைத் தேடியது. இந்த வைரல புகைப்படம் பயன்படுத்தப்பட்ட பல அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். Sports.fr-இல் ஜூலை 18, 2015 அன்று பிரசுரிக்கப்பட்ட இந்த அறிக்கை இவ்வாறு உள்ளது – மொழிபெயர்ப்பு – தற்போது, விடுமுறையில், லயோனல் மெஸ்ஸி, அதிபர் அலி போங்கோவின் அழைப்பின் பேரில் கபோனுக்குச் சென்றார். இந்த அறிக்கையை நீங்கள் இங்கு க்ளிக் செய்து படிக்கலாம்.

ஜுலை 23, 2015. இந்த அறிக்கை மெஸ்ஸி அந்த நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த உடுப்பைப் பற்றிய விமரிசனம். அந்த அறிக்கையின் படி, “பார்சிலோனா முன்னேறு ஆட்டக்காரர் மற்றும் அர்ஜென்டினாவின் நக்ஷத்திரம் லயோனல் மெஸ்ஸி, ஆஃப்கான் 2017-க்கான நாட்டின் போர்ட்-ஜென்டில் விளையாட்டு அரங்கத்துக்கு முதல் கல் நாட்டுவதற்கான காபோனில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த சாதாரண உடையைப் பற்றி வலுத்த விமரிசனங்களுக்கு உள்ளானார்.”

இதன் தொடர்பாக, நாங்கள் நியோமியா பர்தா (செய்தித்தாள்)-வின் விளையாட்டு ஆசிரியரான முகுல் சர்மாவைத் தொடர்பு கொண்டோம். “அது ஒரு மிகவும் பழைய புகைப்படம், மெஸ்ஸி சமீபத்தில் காமரூனுக்கு வரவில்லை,” என்று அவர் கூறினார்.

முடிவில், கெட்டோ யூத்ஸ் டிவி-யின் ஃபேஸ்புக் பக்கத்தின் தற்குறிப்பை ஸ்கேன் செய்தோம். அந்தப் பக்கம் 22000 பேர்களால் தொடரப்படுகிறது. இந்த வைரல் பக்கம் ஏற்கனவே 3600+ மக்களால் பகிரப்பட்டு விட்டது. அந்தப் பக்கம் ஜனவரி 28, 2017 அன்று உருவாக்கப்பட்டது.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் அதன் புலன் விசாரணையில் அந்த வைரல் உரிமைக் கோரிக்கை போலி என்று கண்டு பிடித்தது. மெஸ்ஸி காமரூனுக்கு சமீபத்தில் செல்லவில்லை. லயோனல் மெஸ்ஸியின் இந்த புகைப்படம், அவர் 2015-இல் காபோனில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுவதற்காக வந்த போது எடுக்கப்பட்டது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later