X

உண்மை சரிபார்ப்பு: முலாயம் மற்றும் அகிலேஷ் முதலமைச்சர் யோகியுடன் இருக்கும் பழைய படம் தவறான க்ளைமுடன் வைரல்

முதல் அமைச்சர் யோகி மற்றும் முலாயம் குடும்ப சந்திப்பு பற்றிய படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பழையது. வைரல் ஆக இருக்கும் இந்தப் படம் 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டது அல்ல.

  • By Vishvas News
  • Updated: March 25, 2022

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). முதலமைச்சர் யோகி மற்றும் முலாயம் சிங் யாதவின் குடும்பத்தோடு இருக்கும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆக உள்ளது. அந்தப் படத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் மேலும் யோகி ஆதித்யநாத் அனைவரும் ஒன்றாக தேநீர் குடிப்பது போல உள்ளது. உத்தர பிரதேசத் தேர்தலில் பிஜேபி-யின் வெற்றிக்குப் பிறகு முலாயம் சிங் யாதவ் தன குடும்பத்தோடு யோகி ஆதித்யநாத்திடம் சென்று வாழ்த்தியதாக அந்தப்பதிவு க்ளைம் செய்கிறது. அந்தக் க்ளைம் தவறு என்று விஷ்வாஸ் நியூஸ் தனது புலன்விசாரணையில் கண்டு பிடித்தது. முதல் அமைச்சர் யோகி மற்றும் முலாயம் குடும்ப சந்திப்பு பற்றிய படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பழையது. வைரல் ஆக இருக்கும் இந்தப் படம் 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டது அல்ல.

எது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது?

ஃபேஸ்புக் பயனர் ராகவேந்திர மிஸ்ரா இந்தப் படத்தை பதிவேற்றி விட்டு எழுதினார். ”அப்பா முலாயம் சிங், மாமா ஷிவ்பால் யாதவ் மற்றும் மருமகன் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச தேர்தல்களில் பிஜேபி வெற்றி பெற்றவுடன் பாபா யோகிஜிக்கு வாழ்த்துக் கூற வந்தனர். இதுதான் அரசியல்.”

புலன் விசாரணை –

இந்த வைரல் க்ளைமில் உள்ள உண்மையை அறிய, நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உபயோகித்து இந்தப் படத்தைத் தேடினோம். இந்த வைரல் க்ளைமுடன் சம்பந்தப்பட்ட ஒரு அறிக்கை 10 ஜூன் 2019 அன்று தைனிக் ஜாகரன் வலைதளத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்ததைக் கண்டு பிடித்தோம். அந்த அறிக்கையில் கொடுத்திருந்த தகவலின்படி, முலாயம் சிங் யாதவ் உயர் சர்க்கரை அளவிற்காக டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயன்சஸ்-இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நிலை சீரடைந்த பின் அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக விக்ரமாதித்யா மார்கில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்றார். இந்தப்படம் அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அகிலேஷ் மற்றும் ஷிவ்பால் அங்கு இருந்தனர்.

அங்கு கண்டுபிடித்த விவரங்களின் அடிப்படையில், சில முக்கிய வார்த்தைகளைக் கொண்டு நாங்கள் கூகிளில் தேடினோம். அந்த வைரல் படம் முதலமைச்சர் யோகியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டரில் 10 ஜூன் 2019 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்தது என்பதைக் கண்டுபிடித்தோம். அதன் தலைப்பு கூறியது, “முன்னாள் முதலமைச்சர் மற்றும் சமாஜ்வாடி பார்ட்டியின் நிறுவனருமான ஸ்ரீ முலாயம் சிங் யாதவ்ஜி-யை அவர் வீட்டில் இன்று சந்தித்து அவரது உடல் நலனைப் பற்றி விசாரித்தேன். அவர் விரைவில் உடல் நலம் அடைய நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.”

மேல் விவரங்களுக்காக, நாங்கள் தைனிக் சாகரனின் உத்தர பிரதேச டிஜிட்டல் பொறுப்பாளர் தர்மேந்திர குமார் பாண்டேவுடன் தொடர்பு கொண்டோம். அவர் அந்த வைரல் க்ளைம் தவறு என்று கூறினார். அந்த வைரல் படம் மூன்று வருட பழையது, தவறான க்ளைமுடன் இப்போது பகிரப்படுகிறது.

பயனரை சமூக ஸ்கேன் செய்தபோது, அந்தப் பயனர் 370 நபர்களால் தொடரப் படுகிறார் என்றும், ஃபேஸ்புக்கில் அவருக்கு 1,353 நண்பர்கள் உள்ளனர் என்றும் கண்டுபிடித்தோம். ராகவேந்திர மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் உள்ள ஆஸம்கர் என்ற இடத்தில் வசிப்பவர்.

निष्कर्ष: முதல் அமைச்சர் யோகி மற்றும் முலாயம் குடும்ப சந்திப்பு பற்றிய படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பழையது. வைரல் ஆக இருக்கும் இந்தப் படம் 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டது அல்ல.

  • Claim Review : அப்பா முலாயம் சிங், மாமா ஷிவ்பால் யாதவ் மற்றும் மருமகன் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச தேர்தல்களில் பிஜேபி வெற்றி பெற்றவுடன் பாபா யோகிஜிக்கு வாழ்த்துக் கூற வந்தனர். யாதவ் ஆதரவாளர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியையும் கட்சி ஊழியர்களையும் இரவு பகலாக திட்டி வருகின்றனர்
  • Claimed By : ராகவேந்திர மிஸ்ரா
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later