உண்மை சரிபார்ப்பு: விவசாய சட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டத்தின் பழைய காணொளி தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது
விவசாய சட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டத்தின் பழைய காணொளி, பீகாரில் எடுக்கப்பட்டதாக தெளிவற்ற கூற்றுடன் வைரலாகி உள்ளது.
- By Vishvas News
- Updated: November 10, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கறுப்புக் கொடிகளுடன் மக்கள் போராட்டம் நடத்தும் ஒரு வைரல் காணொளி பீகாரில் எடுக்கப்பட்டது என்றும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவர்கள் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், ஹரியானாவில் நடந்த போராட்டத்தின் பழைய காணொளியே, பீகாரில் எடுக்கப்பட்டது என்ற தெளிவற்ற கூற்றுடன் வைரலாகியிருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் இபுனு ஹரிஷ் இந்த வைரஸ் காணொளியை (இணைப்பு) பகிர்ந்து, “பாஜக வலது சாரிகளை தெருவுக்கு தெரு அடித்துவிரட்டும் பீகார் மாநில மக்கள்,” என்று எழுதியுள்ளார்.
மேலும் பல பயனர்களும் இந்த காணொளியை இதே போன்ற கூற்றுக்களுடன் பல சமூக ஊடக தளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இந்த இரண்டு நிமிட 19 வினாடி காணொளியில், 13 விநாடியின்போது தோன்றும் ஒரு காவல்துறை வாகனத்தில், ஹரியானா காவல்துறை என்ற சொற்களைக் நம்மால் காண முடிகிறது. இந்த காணொளி, இடுகையில் கூறப்பட்டுள்ளபடி பீகாரில் எடுக்கப்பட்டிருந்தால், அதில் நிச்சயமாக ஹரியானா காவல்துறைக்கு பதிலாக பீகார் காவல்துறை என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காணொளி குறித்து நமக்கு உறுதிப்படுத்திய டைனிக் ஜாக்ரான் பீகாரின் டிஜிட்டல் பொறுப்பாளர் அமித் அலோக், “இந்த வைரல் காணொளி பீகாரில் எடுக்கப்பட்டதல்ல” என்று கூறினார்.

கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, வைரல் புகைப்படத்தின் உண்மையான மூலத்தை நாங்கள் கண்டறிந்தோம். பேஸ்புக் பயனர் ஹர்மீத் சிங் இந்த காணொளியை அக்டோபர் 18 அன்று பகிர்ந்து, “ஹரியானாவின் விவசாயிகள் எவ்வளவு மோசமான ஆதரவை பாஜகவுக்கு வழங்குகிறார்கள் என்று பாருங்கள் …” என்று எழுதியுள்ளார்.
இது குறித்த வார்த்தைகளை இணையத்தில் தேடியபோது, ட்ரிப்யூனின் யூடியூப் சேனல் பதிவேற்றிய காணொளியைக் கண்டோம், அதில் விவசாய சட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. “அம்பாலா எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா, குருக்ஷேத்ரா எம்.பி. நைப் சைனி மற்றும் அம்பாலா பாஜக தலைவர் ராஜேஷ் படோரா தலைமையிலான டிராக்டர் பேரணி நரிங்கரில் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டது,” என்று அதன் விளக்கம் கூறுகிறது.
வைரல் காணொளியைப் பகிர்ந்த பயனர், தன்னை தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் என்று கூறிப்பிட்டுள்ளார்.
निष्कर्ष: விவசாய சட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டத்தின் பழைய காணொளி, பீகாரில் எடுக்கப்பட்டதாக தெளிவற்ற கூற்றுடன் வைரலாகி உள்ளது.
- Claim Review : பாஜக வலது சாரிகளை தெருவுக்கு தெரு அடித்துவிரட்டும் பீகார் மாநில மக்கள்
- Claimed By : பேஸ்புக் பயனர் இபுனு ஹரிஷ்
- Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com