X

உண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படங்கள் அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் என தவறான கூற்றுடன் வைரலாகின்றன

  • By Vishvas News
  • Updated: November 7, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட பின்னர், காவல் நிலையத்தில் அவர் மீது காவல்துறை அதிகாரிகள் வன்முறை நிகழ்த்தியதாக சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்பதும், உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை காவல்துறையினர் தாக்கும் புகைப்படங்களே தற்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகி இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

கூற்று

இந்தப் புகைப்படங்கள் பல பயனர்களாலும் எங்களின் உண்மை சரிபார்ப்பிற்கான வாட்ஸ்அப் சாட்பாட்டுக்கு (+91 95992 99372) அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ட்விட்டர் பயனரான ரங்கோலி சாண்டல் (ரனாவத்) என்பவர் இந்த வைரல் புகைப்படங்களை (இணைப்பு) பகிர்ந்து, “இவர் #அர்னாப் கோஸ்வாமி என்பதை என்னால் நம்ப முடியவில்லை … இது உண்மையெனில் … மகாராஷ்டிரா அரசு நமக்கு ஒரு கறுப்பு தினத்தைக் கொடுத்துள்ளது. நான் மிகவும் வேதனையடைகிறேன். பத்திரிகைத்துறைக்கு ஒரு கறுப்பு தினம்” என்று எழுதியுள்ளார்.

இந்த புகைப்படங்களை வெவ்வேறு சமூக வலைதளங்களில் இதே போன்ற கூற்றுடன் பலர் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், ரங்கோலி உட்பட பல பயனர்களும் இந்த புகைப்படங்களை குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.

விசாரணை

டைனிக் ஜாக்கிரானில் வெளிவந்துள்ள ஒரு செய்தி கட்டுரையில், வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மும்பை காவல்துறையினர் தொலைக்காட்சி நிருபரான அர்னாப் கோஸ்வாமியை கைது செய்து, நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த செய்தித் தேடலில், அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் பல செய்தி அறிக்கைகள் அவரது புகைப்படங்களுடன் நமக்குக் கிடைத்தன. இருப்பினும், இந்த வைரல் புகைப்படத்தை எந்த செய்தி அறிக்கையிலும் எங்களால் காண முடியவில்லை.

இந்த வைரல் புகைப்படத்தின் உண்மையான மூலத்தைக் கண்டறிய, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 10 ஜனவரி அன்று News18.com வெளியிட்ட செய்தியில் இந்த புகைப்படங்களை நாங்கள் கண்டோம். அதில், “உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்திற்குள் மூன்று காவல்துறை அதிகாரிகள் ஒரு நபரை கொடூரமாக தாக்கும் காணொளி சமீபத்தில் வெளிவந்தது, இதைத் தொடர்ந்து அந்த காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்… ” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தொலைக்காட்சி நிருபரான அலோக் பாண்டேவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து 10 ஜனவரி அன்று இந்த சம்பவத்தின் காணொளியை ட்வீட் செய்துள்ளார். அந்த காணொளியில் சில காவல்துறை அதிகாரிகள் ஒரு இளைஞரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காண முடிகிறது.

இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் மதன்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் ஷியாம் சுந்தர் திவாரியைத் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த சம்பவம் மிகவும் பழையது மற்றும் இது மதன்பூர் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

பிபிசி இந்தியின் ஒரு அறிக்கையில், அர்னாப் கோஸ்வாமி தன்மீது காவல்துறையினர் உடல்ரீதியான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பழைய சம்பவத்தின் புகைப்படங்களே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகி உள்ளன.

  • Claim Review : இவர் #அர்னாப் கோஸ்வாமி என்பதை என்னால் நம்ப முடியவில்லை … இது உண்மையெனில் … மகாராஷ்டிரா அரசு நமக்கு ஒரு கறுப்பு தினத்தைக் கொடுத்துள்ளது. நான் மிகவும் வேதனையடைகிறேன். பத்திரிகைத்துறைக்கு ஒரு கறுப்பு தினம்
  • Claimed By : ட்விட்டர் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later