X

உண்மை சரிபார்ப்பு: பிரியங்கா காந்தி புனித நீராடல் குறித்து ட்வீட் செய்யவில்லை

​பிரியங்கா காந்தியின் பெயரில் பகிரப்படும் இந்த பதிவு தவறானது.

  • By Vishvas News
  • Updated: February 19, 2021

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி பெயரில் ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அப்பதிவில் கும்பமேளாவின் புனித நீராடல் குறித்து பிரியங்கா காந்தி சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, ​​பிரியங்கா காந்தி பெயரில் பகிரப்படும் இந்த வைரல் பதிவு தவறானது என்று கண்டறியப்பட்டது.

கூற்று

பேஸ்புக் பயனரான வழக்கறிஞர் சுஷில் சோனி என்பவர் பிப்ரவரி 12 அன்று ஒரு இடுகையின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு, “கும்பமேளா குறித்த பிரியங்கா வத்ராவின் முதல் ட்வீட்,” என்று எழுதியுள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள ட்வீட்டில், “@PriyankagaINC: இந்தியா ஒரு முட்டாள்தனமான நாடு, இங்கு அரசாங்கம் மக்களின் குடிநீருக்காக நிதி செலவிடாமல், நயவஞ்சகர்களின் புனித நீராடலுக்காக கோடிகளை செலவழிக்கிறது,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

வைரல் பதிவில் பிரியங்கா காந்தி என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கினை நாங்கள் தேடத் தொடங்கினோம். அவ்வாறு தேடியதில், PriyankagaINC என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த விசாரணையின் போது, ​​பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @priyankagandhi என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது பிப்ரவரி 2019 இல் உருவாக்கப்பட்டது. இதை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இது பற்றிய அடுத்த கட்ட விசாரணைக்காக நாங்கள் காங்கிரஸ் கட்சியினைத் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் பதிவு தவறானது என்று காங்கிரசின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் சிங் நம்மிடத்தில் கூறினார். பிரியங்கா காந்தியின் உண்மையான ட்விட்டர் கணக்கு @priyankagandhi என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை நாங்கள் ஆராய்ந்ததில், இப்பயனர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இவர் உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர்.

निष्कर्ष: ​பிரியங்கா காந்தியின் பெயரில் பகிரப்படும் இந்த பதிவு தவறானது.

  • Claim Review : கும்பமேளா குறித்த பிரியங்கா வத்ராவின் முதல் ட்வீட்
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later