X

உண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

முடிவு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகனைத் தேடுவதாக வந்த வைரலான மேட்ரிமோனியல் விளம்பரம் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிட்டலாக உருவாக்கப்பட்டது ஆகும். இது எந்த செய்தித்தாளிலும் வெளியானதல்ல.

  • By Vishvas News
  • Updated: June 30, 2021

புதுதில்லி (விஷ்வாஸ் நியூஸ்) பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பர க்ளிப்பிங் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது நெட்டிசன்களுக்கு பொழுதுபோக்காகவும் உள்ளது. விஷ்வாஸ் நியூஸ் தனது புலனாயவில் இந்த மேட்ரிமோனி விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளது.

க்ளைம்:

ஆர்ஜே மேக்னா (RJ Meghna) வைரல் மேட்ரிமோனி விளம்பரத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டு பின்வருமாறு எழுதியுள்ளார்: புதுயுகத்தின் திருமண விளம்பரம்: கோவேக்ஸின் வாலோ கோ குச் ஹி கன்ட்ரீஸ் மே என்ட்ரி அலோட் ஹை! லுக்ஸ் லைக் பந்தி நே ஹனிமூன் தக் ப்ளான் கர் ரஹா ஹே! ஆப்டர் ஆல் எம்.எஸ்ஸி இன் மேதமேட்டிக்ஸ் ஹோ ஹே”

vவைரல் பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கே காணவும்.

இந்தப் பதிவு பலரால் டிவிட்டரிலும் பகிரப்பட்டுள்ளது.

இந்திய அரசியல்வாதி சஷி தரூராலும் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது.

புலனாய்வு:

விஷ்வாஸ் நியூஸ் சில அடிப்படை கண்டறிதல்களுடன் இந்தப் புலனாய்வைத் தொடங்கியது. இந்த திருமண விளம்பரம் ஒரு செய்தி வடிவில் பரவலாகப் பகிரப்பட்டது, ஆனால் பொதுவாக திருமண விளம்பரங்கள் ஒரு செய்தித்தாளில் இவ்விதமாக ஒருபோதும் வருவதில்லை. அதோடு, வாட்சப் (Whatsapp) இல் மஸ்ட்ஹெட்டில் கோவா டிம் “Goa Tim” என்க பெயருனும்  இந்தப் பதிவு பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாகவும், விஷ்வாஸ் நியூஸ் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட செய்தித்தாள் க்ளிப்பிங் மீது புலன்னாய்வு செய்துள்ளது, இதுவும் அதைப் போன்றே உள்ளது.

உண்மை சரிபார்ப்பு: இந்தப் பதிவு ஜன சங் பணியாளர்களின் நீதிமன்ற கைது தொடர்பானதல்ல, போலியான க்ளைமுடனான செய்தித்தாள் க்ளிப்பிங் வைரலானது.

விஷ்வாஸ் நியூஸ் “நியூஸ்பேப்பர் க்ளிப்பிங் மேக்கர் ஆன்லைன்“ என்கிற கீவேர்ட்களைப் பயன்படுத்தியது. இது மூலம் நியூஸ்பேப்பர் க்ளிப்பிங் உருவாக்கும் வலைத்தளத்திற்கு கொண்டு சென்றது.

இங்கு காட்டப்படுகிற நியூஸ்பேப்பர் ஸ்னிப்பெட், பரவலாக ஆன்லைனில் பகிரப்படுகிற மேட்ரிமோனியல் விளம்பரத்திற்கு மிகவும் நெருங்கி  உள்ளது.

எனவே இந்த மேட்ரிமோனியல் விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

சிறிய அளவில் கீவேர்ட் தேடலின் மூலம் ‘கிவ் இன்டியா‘ (‘Give India‘) இன் ஃபேஸ்புக் பக்கத்தை நாங்கள் கண்டுபிடித்தோம், இது இந்த விளம்பரத்தை பகிர்ந்து, ” 58 வயதான சேவியோ ஃபிகுரெடோ (Savio Figueiredo) இந்தியர்களை கோவிட் தடுப்பூசி நோக்கி கவர்வதற்கு புது விதமான வழியை கைக்கொண்டுள்ளார். அவர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் அதேவிதமாக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு மணமகனைத் தேடுவது போல ஒரு விளையாட்டுத்தனமான விளம்பரத்தைப் பதிவிட்டுள்ளார்.”

இந்தப் பதிவின் மூலமாகவே மேலே சொல்லப்பட்ட பதிவு, சேவியோ ஃபிகுரெடோ என்னும் நபரால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை விஷ்வாஸ் நியூஸ் அறிந்தது.

புலனாய்வின் கடைசிப் படியாக விஷ்வாஸ் நியூஸ் சேவியோ ஃபிகுரெடோவை ஃபேஸ்புக் மெசன்ஜர் மூலம் தொடர்பு கொண்டது.

விஷ்வாஸ் நியூஸ் உடன் உரையாடுகையில் சேவியோ கூறியதாவது, ”ஒரு அன்புக்குரிய நண்பனை கோவிட் காரணமாக இழந்த காரணத்தால் ஃபேஸ்புக்கில் உள்ள என் நண்பர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இது. இது வைரல் ஆவதற்காக செய்யப்பட்டது அல்ல. இந்திய மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் காப்பாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்”.

அவர் மேலும் கூறுகையில், ”நான் ஒன்றை கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும், கோவிஷீல்டு என்று நான் குறிப்பிட்டது ஏனென்றால் கோவேக்சின் டபிள்யு.ஹெச்.ஓ. (WHO) ஆல் அங்கீகரிக்கப்படவில்லை, … அதை செலுத்தியவர்களை வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிப்பதில்லை என்பதோடு நான் கோவா-இல் இருந்து வந்தவன் என்பதால் கோவாவிலிருந்து வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் கப்பலில் பயணிப்பர்வகள் தங்கள் பணிகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதனால் தான். நான் கோவேக்ஸினுக்கு எதிரானவன் அல்ல.”

இதன் பின் விஷ்வாஸ் நியூஸ், மேட்ரிமோனியல் விளம்பரத்தை பகிர்ந்த ப்ரொஃபைலின் பின்னணி சரிபார்பைபை செய்தது. ஆர்ஜே மேக்னா 164 ஆயிரம் ஃபாலோயர்களுடன் உள்ள சரிபார்க்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் ஆகும்.

निष्कर्ष: முடிவு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகனைத் தேடுவதாக வந்த வைரலான மேட்ரிமோனியல் விளம்பரம் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிட்டலாக உருவாக்கப்பட்டது ஆகும். இது எந்த செய்தித்தாளிலும் வெளியானதல்ல.

  • Claim Review : புதுயுகத்தின் திருமண விளம்பரம்: கோவேக்ஸின் வாலோ கோ குச் ஹி கன்ட்ரீஸ் மே என்ட்ரி அலோட் ஹை! லுக்ஸ் லைக் பந்தி நே ஹனிமூன் தக் ப்ளான் கர் ரஹா ஹே! ஆப்டர் ஆல் எம்.எஸ்ஸி இன் மேதமேட்டிக்ஸ் ஹோ ஹே”
  • Claimed By : RJ Megha
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later