X

உண்மை சரிபார்ப்பு: ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையருடன் இந்த புகைப்படத்தில் இருப்பவர் RSS தலைவர் மோகன் பாகவத் அல்ல

  • By Vishvas News
  • Updated: November 28, 2020

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமீபத்தில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரெல், நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார். இவர்களின் இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, பாரி ஓ’பாரெல் ஒரு நபருக்கு வணக்கம் தெரிவிப்பதைக் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் RSS தலைவர் மோகன் பாகவத் என்று கூறி பல பயனர்களும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர், RSS தலைவர் மோகன் பாகவத்தை சமீபத்தில் சந்தித்தது உண்மை என்றபோதிலும், இது குறித்த எங்கள் விசாரணையில் இந்த வைரல் புகைப்படத்தில் இருப்பவர் மோகன் பாகவத் அல்ல என்பதும், விகாஸ் தெலங் என்பவரே இந்த புகைப்படத்தில் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

கூற்று

ட்விட்டர் பயனரான மேக் அப்டேட்ஸ் @MeghUpdates என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் @RSSorg தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து #Covid நிவாரண பணிகளில் RSS அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டினார்,” என்று எழுதியுள்ளார்.

இந்த காப்பக பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, இச்சம்பவம் குறித்த சொற்களை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர், பாரி ஓ’பாரெல், நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தது பற்றிய அறிக்கைகளை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் தி எகனாமிக் டைம்ஸில் “ஆஸ்திரேலிய உயர் ஆணையர் நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார்,” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு அறிக்கையையும் எங்களால் காண முடிந்தது.

இந்த அறிக்கையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரல் பகிர்ந்துள்ள ட்வீட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த ட்வீட்டுகளை ஆராய்ந்ததில், இந்த வைரல் புகைப்படமும் அவற்றோடு பகிரப்பட்டு இருப்பதை எங்களால் காண முடிந்தது. பாரி ஓ’பாரலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட நான்கு புகைப்படங்களில் இந்த வைரல் புகைப்படமும் ஒன்றாகும்.

இந்த புகைப்படங்களை உன்னிப்பாக கவனித்தபோது, ​​பாரி ஓ’பாரல் பகிர்ந்த மூன்று புகைப்படங்களில் உள்ளவர் உண்மையில் RSS தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தான் என்பதைக் கண்டறிந்தோம். இருப்பினும், நான்காவது புகைப்படத்தில் இருப்பவர் டாக்டர் மோகன் பாகவத் இல்லை என்பதை எங்களால் காண முடிந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிபார்த்து, பின்னர் இணையத்தில் RSS தலைமையகத்தின் புகைப்படங்களைத் தேடினோம். அவ்வாறு தேடியதில் மஹால் என்ற பெயரில் நாக்பூரில் RSSக்கு ஒரு தலைமையகம் இருப்பதையும், ரேஷிம்பாக்கில் ஹெட்கேவர் ஸ்மிருதி மந்திர் என்ற பெயரில் மற்றொரு கட்டிடம் RSSக்கு சொந்தமாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

டாக்டர் மோகன் பாகவத்தை சந்திக்க ஆஸ்திரேலிய உயர் ஆணையர், மஹால் காரியாலயாவுக்கு சென்றதை எங்களுக்குக் கிடைத்த செய்தி அறிக்கைகள் மூலம் நாங்கள் அறிந்துகொண்டோம். எனவே இது குறித்து விசாரிக்க, ஸ்மிருதி மந்திரின் அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த புகைப்படத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரல் உடன் இருக்கும் நபர் விகாஸ் தெலங் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது குறித்து எங்களிடம் பேசிய விகாஸ் தெலங், “இந்த வைரல் புகைப்படத்தில் பாரி ஓ’பாரெல் உடனுள்ள நபர் நான் தான். டாக்டர் மோகன் பாகவத் அல்ல. இருப்பினும், மற்ற புகைப்படங்களில் அவரோடு மோகன்ஜி இருப்பதை ஒருவர் எளிதாக அடையாளம் காணலாம்,” என்று கூறினார்.

இந்த புகைப்படத்தைப் பகிர்ந்தவரின் கணக்கினை ஆராய்ந்ததில், இக்கணக்கு 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதும், இதற்கு 48.8 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: RSS தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தை ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ ’ஃபாரல் சந்தித்தபோது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் இந்த வைரல் புகைப்படம் தெளிவற்றது. அவர் மோகன் பகவத்தை சந்தித்தது உண்மை என்றாலும், இந்த வைரல் புகைப்படத்தில் அவரோடு உடனிருக்கும் நபர் வியாவாஸ்த பிரமுக் விகாஸ் தெலங் என்பவர்.

  • Claim Review : அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் @RSSorg தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து #Covid நிவாரண பணிகளில் RSS அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டினார்
  • Claimed By : ட்விட்டர் பயனர்
  • Fact Check : Misleading
Misleading
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later