
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ஜனவரி 1, 2021 முதல் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு, 30 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும் என்ற கூற்றுடன், ஒரு செய்தித்தாளின் புகைப்படத்துடன் கூடிய ஒரு வைரல் இடுகை, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பல சமூக ஊடக பயனர்களும், மூன்றாம் தரப்பு பணபரிமாற்ற செயலிகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியும், பணமில்லா பரிவர்த்தனைகளில் உள்ள ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை தெரிவித்தும் உள்ளனர்.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI) இந்த கூற்றினை மறுத்துள்ளது. 30 சதவிகித கேப் (CAP) மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும், பண பரிவர்த்தனைகளுக்காக பயனர்களிடத்தில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தினர்.
கூற்று
“2021 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது..! கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்!” என்று ஒரு செய்தித்தாளின் புகைப்படம் கூறுகிறது. இதைத் தொடர்ந்து, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பணமில்லா பரிவர்த்தனைகள் செய்வது குறித்து பல பயனர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் பயனரான பிலிப்ஸ் JP என்பவர் செய்தித்தாள் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, “30% சதவீதமா இது என்னடா அநியாயமா இருக்கு.. அப்ப ₹1000 அனுப்ப ₹300 எக்ஸ்ட்ரா கட்டணுமா.. ” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த கூற்றினை விசாரிக்க, இது குறித்த சொற்களை கொண்டு, (UPI, 30 சதவீதம்) இது பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 7 நவம்பர் அன்று டைய்னிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையினைக் கண்டோம். இந்த கட்டுரையில் “ஜனவரி 1, 2021 முதல் மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்கள் மீது 30 சதவீத கேப்பினை விதிக்க இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. பணப் பரிவர்த்தனைகளில், மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்கள் ஆதிக்கம் செலுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர என்சிபிஐ இந்த முடிவை எடுத்துள்ளது,” என்று கூறுகிறது.
பண பரிவர்த்தனைகளில் 30 சதவிகித கேப் பற்றி இந்த கட்டுரை மேலும் தெளிவுபடுத்திகிறது, “இதன் பொருள் ஒவ்வொரு மாதமும் நாட்டில் 200 கோடி UPI பரிவர்த்தனைகள் இருந்தால், அடுத்த ஆண்டு முதல் அதன் முப்பது சதவீதம், அதாவது 60 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே எந்த மூன்றாம் தரப்பு செயலியிலும் ஒரு மாதத்தில் நடைபெற முடியும்,” என்று கூறுகிறது.
இவை தவிர, இந்த வைரல் கூற்றினில் கூறப்பட்டுள்ளது போல 30 சதவீத பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறித்த எந்த செய்தியினையும் எங்களால் காண முடியவில்லை.
இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகம் (NPCI), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தால் (IBA), இந்தியாவில் பண பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்தவதற்கான வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, பண பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்தவதற்கான முறைகள் சட்டம் 2007யின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட ஓர் கழகம். இந்தியாவில் சில்லறை பண பரிவர்த்தனைகள் மற்றும் பண செலுத்துவதற்கான முறைகளை கண்காணிப்பதற்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் இந்த அறிவிப்பு குறித்து நாங்கள் தேடினோம். அவ்வாறு தேடியதில், நவம்பர் 5 தேதியிட்ட செய்திக்குறிப்பைக் கண்டறிந்தோம், அதில் “UPI வழியாக செய்யப்படும் பண பரிவர்த்தனைகள், ஒரு மாதத்திற்கு 2 பில்லியனை எட்டியுள்ளதாலும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாலும், UPI இல் செய்யப்படும் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு 30% கேப் விதிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களும் பொருந்தும். இந்த விதிமுறை ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். இது பண பரிவர்த்தனைகளின்போது ஏற்படும் அபாயங்களை குறைக்கவும், UPI மேலும் வளர்ச்சி அடைகையில், அதன் சூழலினை பாதுகாக்கவும் உதவும்,” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை மேலும் சரிபார்க்க, மின்னஞ்சல் மூலம் NPCI நாங்கள் தொடர்பு கொண்டோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைரல் கூற்றுக்களை மறுத்த அவர்கள், பயனர்களின் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும், பண பரிவர்த்தனைகளுக்கு 30 சதவீத கேப்பினை மட்டுமே தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் நமக்குத் தெளிவுபடுத்தினர்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் வசிப்பவர் என்பதும், பேஸ்புக்கில் 3,788 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. UPI பண பரிவர்த்தனைகளுக்கு 30 சதவீத பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கவில்லை. NPCI 30 சதவீத கேப் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.