X

உண்மை சரிபார்ப்பு: இது அடல் பிஹாரி வாஜ்பாயின் குழந்தை பருவ புகைப்படம் அல்ல, வைரல் கூற்று தவறானது

  • By Vishvas News
  • Updated: December 28, 2020

புது தில்லி (விஸ்வாஸ் அணி). ஒரு குழந்தையோடு ஒரு பெண் இடம்பெற்றிருக்கும் பழைய புகைப்படம் ஒன்று, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது தாயார் கிருஷ்ணா தேவியுடன் இருக்கும் புகைப்படம் என்று கூறப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்தது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது வாஜ்பாயோ, அவரது தாயாரோ அல்ல.

கூற்று

ஒரு பெண்ணின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திப்பதைக் காட்டும் பழைய புகைப்படம் ஒன்று, “தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று,” என்று டிசம்பர் 25-ம் தேதி மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறுவதாக பகிரப்பட்டு வருகிறது.

மற்றொரு பயனரும் இதே புகைப்படத்தை பகிர்ந்து,”தாயின் மடியில் குழந்தை அடல் ஜி” என்று எழுதியுள்ளார்.

பல சமூக ஊடக பயனர்களும் இந்தி மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழிகளில் இதே போன்ற கூற்றுக்களுடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த
இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி இணையத்தில் இந்த வைரல் புகைப்படத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், பேஸ்புக் பயனர் ராணுசங்கரின் கணக்கினில், 8 மார்ச் 2018 அன்று இந்த புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இது குறித்து விசாரிக்க, முசாபர்பூரில் உள்ள கமல்பூராவைச் சேர்ந்தவரும், காந்தி ஸ்வராஜ் ஆசிரமம் நிறுவனத்தின் நிர்வாகியுமான சங்கரை நாங்கள் தொடர்பு கொண்டோம். இவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பரு சட்டசபை தொகுதியில் ஜான் ஆதிகர் (ஜனநாயக) கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.

நம்மோடு தொலைபேசியில் பேசிய அவர், இந்த வைரல் புகைப்படம், தனது தாயார் நீலம் சங்கருடன், தனது குழந்தை பருவத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று அவர் நமக்குத் தெளிவுபடுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த புகைப்படத்தை சங்கர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்பிறகு சிலர் அதை அடல் பிஹாரி வாஜ்பாயின் குழந்தை பருவ புகைப்படம் என்று கூறி பகிரத் தொடங்கியுள்ளனர். தான் 1976 இல் பிறந்ததாகவும், இந்தப் புகைப்படம் 1977 அல்லது 1978 இல் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சங்கர் நம்மிடம் கூறினார். அவரது தாயார் 1980 இல் இறந்துவிட்டார்.

தனது தாயாரோடு தனது வீட்டில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அவர் நமக்கு அனுப்பினார்.

இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த பல பயனர்களுள் ஒருவரான பேஸ்புக் பயனர் மிஷன் அகந்த் இந்து ராஷ்டிர நிர்மனின் கணக்கினை ஆராய்ந்ததில், பேஸ்புக்கில் அவருக்கு 171 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்தப் புகைப்படம் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் அல்ல.

  • Claim Review : ஒரு பெண்ணின் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திப்பதைக் காட்டும் பழைய புகைப்படம் ஒன்று, “தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று,” என்று டிசம்பர் 25-ம் தேதி மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறுவதாக பகிரப்பட்டு வருகிறது.
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later