
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). இரண்டு புகைப்படங்களைக் கொண்ட ஒரு பதிவு, முதல் புகைப்படத்தில் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியுடன் மேடையில் இருக்கும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பிய பெண்ணே, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு புகைப்படங்களிலும் வெவ்வேறு பெண்கள் உள்ளனர். ஒவைசியுடன் காணப்படும் பெண் அமுல்யா லியோனா. இரண்டாவது குழு புகைப்படத்தில் காணப்படும் பெண் வளர்மதி.
கூற்று
பேஸ்புக் பயனர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்; அமுல்யா இவரும் விவசாயிதான் சொன்னா நம்புங்கப்பா!!” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர் நிகில் சக்சேனா வைரல் பதிவொன்றில், “ஓவைசியின் நிகழ்வில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் கோஷங்களை எழுப்பிய பெண்ணுக்கு விவசாயிகள் போராட்டத்தில் என்ன வேலை?” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி, இந்தப் புகைப்படங்களின் மூலம் குறித்து தேடினோம். ஒரு ஊடக அறிக்கையின்படி, கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் CAAவை எதிர்த்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் மேடையில் ஒரு பெண், ஒவைசி முன்னிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினார். மாணவர் தலைவர் அமுல்யா லியோனா என அடையாளம் காணப்பட்ட அச்சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் இரண்டாவது புகைப்படத்தை நாங்கள் கண்டோம். அதன் கீழே பதிவிடப்பட்டிருந்த கமெண்டில், அப்பெண் வளர்மதி பயனர் ஒருவர் அடையாளம் கூறியிருப்பதை நம்மால் காண முடிந்தது.
வளர்மதி பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியதில், ஜூன் 2018 இல் அவர் கைது செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் நமக்குக் கிடைத்தன. அவரது பேஸ்புக் கணக்கில் ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்ட பதிவில் இந்த வைரல் புகைப்படத்தையும் நாங்கள் கண்டோம்.
இதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள நாங்கள் பேஸ்புக் வழியாக வளர்மதியை தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், டெல்லியில் ஜனவரி 26 அன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்ட அவரது படமே இப்போது வைரலாகி வருவதாக அவர் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாரில் உள்ள குர்ஜாவைச் சேர்ந்தவர் என்பது நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ஒவைசியின் நிகழ்வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய முழக்கத்தை எழுப்பிய பெண் அமுல்யா லியோனா. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் வளர்மதி.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.