
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு இடுகை மெட்பெட்ஸின் (ஒரு வகையான உடல் பரிசோதனை கருவி) புகைப்படங்களைக் காட்டுகிறது. இந்த மெட்பெட்ஸ் மூலம் எந்த நோயையும் 2.5 நிமிடங்களில் குணப்படுத்திவிட முடியும் என்றும், மெட்பெட்ஸ் செயற்கை நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது என்றும், இந்தக் கருவி மிகுந்த புத்திசாலித்தனத்தோடு இயங்கக்கூடிய ஒன்று என்றும் இந்த இடுகை கூறுகிறது.
விஸ்வாஸ் செய்தி விசாரணையில், இந்த வைரல் இடுகையில் உள்ள புகைப்படங்கள் 2013ல் வெளியான திரைப்படமான “எலிசியம்”லிருந்து எடுக்கப்பட்டதைக் கண்டறிந்தோம். மேலும், இதுவரை அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்தவொரு உடல் பரிசோதனை கருவியாலும், இந்த இடுகையில் கூறப்பட்டுள்ளபடி 2.5 நிமிடங்களுக்குள் ஒரு நோயை குணப்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.
கூற்று
எம்.ஆர்.ஐ இயந்திரத்தை போன்ற உடல் பரிசோதனை கருவி ஒன்றில், ஒரு பெண் படுத்திருப்பது போன்ற சில புகைப்படங்களை இந்த வைரல் இடுகை காட்டுகிறது. “மெட்பெட்ஸ் உங்கள் தசைகள், தோல் ஆகியவற்றை ஆராய்ந்து, உங்கள் இரத்தத்தில் மைக்ரான் அளவு வரை சென்று நோயைக் கண்டறியும் மற்றும் எந்தவொரு நோயையும் 2.5 நிமிடத்தில் கண்டறிந்து, அதனைக் குணப்படுத்திவிடும்,” என்று இந்த இடுகை கூறுகிறது.
நமது வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) வழியாக உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடையே வந்தடைந்தது.
விசாரணை
இதுகுறித்து விசாரிக்க, இந்த வைரல் புகைப்படங்களை கூகுள் தலைகீழ் படத் தேடலினை பயன்படுத்தி தேடியதில், இந்த புகைப்படங்கள் 2013ஆம் ஆண்டில் வெளியான அறிவியல் புனைகதை திரைப்படமான “எலிசியம்” இலிருந்து எடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தோம். இந்த வைரல் இடுகையில் பகிரப்பட்ட புகைப்படங்களை யூடியூப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரில் காணலாம்:
இந்தத் திரைப்படத்தில், எந்த நோயையும் அடையாளம் கண்டு குணப்படுத்தும் திறன் கொண்ட இந்த மெட்பெட்ஸ் ஸ்கேனர்களை, பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடிவது போன்று காட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த வைரல் பதிவிலும் எழுதப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
IEEE வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி, மெட்பெட் எனப்படும் ஸ்மார்ட் டிஜிட்டல் மருத்துவ படுக்கையானது, நேரம், இடம் மற்றும் மருத்துவ கட்டணம் குறித்த பிரச்சினைகளை திறமையான முறையில் தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கருவியாகும். நோயாளிகள் யாரையும் சார்ந்திருக்காது இருப்பதே இந்த கருவியின் வடிவமைக்கப்பட்ட நோக்கமாகும், மேலும் செவிலியர்கள் தாமதமாக வரும்போதோ அல்லது அவர்கள் இல்லாதபோது, நோயாளிகள் தங்களே தாங்களே கவனித்துக்கொள்ள இது உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, இந்த கருவி எந்த நோயையும் 2.5 நிமிடங்களில் குணப்படுத்த முடியும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
டெல்லியின் அப்பல்லோ மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய முக்கிய பராமரிப்பு பிரிவு மருத்துவரான டாக்டர் நிகிலிடம் இது குறித்து நாங்கள் கேட்டதில், ஒரு இயந்திரத்தால் 2.5 நிமிடங்களில் ஒரு நோயைக் கண்டுபிடித்து குணப்படுத்த முடியுமானால் மருத்துவர்களின் தேவை இருக்காது. இந்த வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளது போன்று எந்த இயந்திரமும் இல்லை என்று கூறினார்.
निष्कर्ष: இந்த வைரல் புகைப்படங்களில் உள்ள இயந்திரத்தால் 2.5 நிமிடங்களில் ஒரு நோயை குணப்படுத்த முடியாது. இந்த புகைப்படங்கள் 2013ல் வெளியான ஒரு திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.