X

உண்மை சரிபார்ப்பு: முன்னாள் BJYM தலைவரின் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: October 6, 2020

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் தாக்கூரின் தந்தை இவர் தான் என்று கூறி உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இந்த வைரல் புகைப்படத்தில் உள்ள நபர் பிரயாகராஜின் முன்னாள் BJYM தலைவர் டாக்டர் ஷியாம் பிரகாஷ் திவேதி என்பதையும், அவருக்கு ஹத்ராஸ் வழக்குடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். மேலும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் அவர் ஏற்கனவே சிறையில் உள்ளார் என்பதும் எங்களுக்கு தெரியவந்தது.

கூற்று

பேஸ்புக் பயனர் சஞ்சு யதுவன்ஷி சாபா அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்த சந்தீப் தாக்கூரின் தந்தை சிவப்பு வட்டத்தில் உள்ளார் !! அதனால்தான் பாதிக்கப்பட்டவரின் சடலம் நள்ளிரவில் எரிக்கப்பட்டது, இதனால் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு குற்றவாளிகள் எளிதில் விடுவிக்கப்படுவார்கள்,” என்று எழுதியுள்ளார்.

இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம். பல பயனர்களும் இதே கூற்றுடன் இப்புகைப்படத்திற்கு ஒத்த பல புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விசாரணை

இந்தப் புகைப்படத்தின் மூலத்தை முதலில் கண்டறிய, இந்த வைரல் புகைப்படத்தை வெவ்வேறு தலைகீழ் பட தேடல் கருவிகளில் (Reverse Image Search Tool) பதிவேற்றியதில், புகைப்படத்தில் உள்ளவர் பிரயாகராஜின் முன்னாள் BJYM தலைவர் டாக்டர் ஷியாம் பிரகாஷ் திவேதி என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. எங்களின் தேடலின் போது, ​​அதே புகைப்படத்தினை செப்டம்பர் 6 அன்று பேஸ்புக் பயனர் டாக்டர் ஷியாம் பிரகாஷ் திவேதி வெளியிட்டுள்ளதையும் எங்களால் காண முடிந்தது.

அக்டோபர் 3 ம் தேதி நியூஸ் ட்ராக்கில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “பிரயாகராஜில் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர் ஷியாம் பிரகாஷ் திவேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் பல நாட்கள் தலைமறைவாக இருந்தார்,” என்று குறிப்படப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை உறுதிப்படுத்த பிரயாகராஜின் செய்தித்தாள்களைத் தேடியதில், அக்டோபர் 4 ம் தேதி டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையை எங்களால் காண முடிந்தது.

இந்தக் கூற்றினை சரிபார்க்க டைனிக் ஜாக்ரானின் பிரயாகராஜ் ஆசிரியர் ராகேஷ் பாண்டேவை தொடர்பு கொண்டோம். முதல்வருடன் படத்தில் உள்ளவர் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் தாக்கூரின் தந்தை அல்ல, அவர் திவேதி என்று அவர் கூறினார். மேலும் “2019 ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரகாஷ் திவேதி மீது செப்டம்பர் 15 ஆம் தேதி கர்னல்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அக்டோபர் 3 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார்,” என்றார் பாண்டே.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. உ.பி. முதல்வருடன் படத்தில் உள்ளவர் பிரயாகராஜின் முன்னாள் BJYM தலைவர் ஷியாம் பிரகாஷ் திவேதி.

  • Claim Review : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் தாக்கூரின் தந்தை இவர் தான் என்று கூறி உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம்
  • Claimed By : பேஸ்புக் பயனர் சஞ்சு யதுவன்ஷி சாபா
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later