X

உண்மை சரிபார்ப்பு: இது பீகாரின் முசாபர்பூர் மேம்பாலத்தின் புகைப்படம் அல்ல, வைரல் கூற்று தவறானது

  • By Vishvas News
  • Updated: October 20, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). முசாபர்பூரில் தெரு விளக்கு வசதி கொண்ட ஒரு சாலையின் புகைப்படம் என்று பகிரப்பட்ட ஒரு இடுகை, இது சீனாவில் உள்ள ஒரு சாலை என குற்றம் சாட்டுகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது ஹைதராபாத்தில் உள்ள RHS மேம்பாலத்தின் புகைப்படம் என்பதும், வைரல் கூற்றுக்களில் சொல்லப்படுவது போல இது முசாபர்பூர் அல்லது சீனாவில் உள்ள சாலையின் புகைப்படமும் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

ட்விட்டர் பயனர் ‘தீபாலி பாரதி’ இந்த வைரல் புகைப்படத்தினை பகிர்ந்து, “பாஜக முசாபர்பூர் என்று குறிக்கும் புகைப்படம் உண்மையில் சீனாவில் உள்ள ஒரு தெருவின் புகைப்படமாகும். 2018 ஆம் ஆண்டில், இந்த படம் ஒரிசாவிலிருந்து பகிரப்பட்டது …” என்று எழுதியுள்ளார்.

பல பயனர்களும் பீகாரிலிந்து வந்தது என இதே போன்ற கூற்றுடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

விசாரணை

இந்த வைரல் இடுகையில் பாஜக தலைவர் சுரேஷ் சர்மா பகிர்ந்த புகைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட் உள்ளது. தெரு விளக்கு திட்டம் குறித்தும், முசாபர்பூரில் மொத்தம் 17,554 தெரு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்தும் இது கூறுகிறது. பாஜக தலைவர் சுரேஷ் சர்மா தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இந்த படங்களை சிறிது நேரம் பகிர்ந்து கொண்டு பின்பு அவற்றை நீக்கிவிட்டார். அவரது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இடுகைகளை இங்கே காணலாம்.

ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட தி நியூஸ் மினிட் கட்டுரையில் இந்தப் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அந்த வைரல் புகைப்படம் ஹைதராபாத்தில் உள்ள பைரமல்குடா சந்திப்பில் இருக்கும் 780 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தின் புகைப்படம் என்பதை இக்கட்டுரை எங்களுக்குத் தெளிவுபடுத்தியது.

RHS மேம்பாலத்தின் புகைப்படம் (Source-The News Minute)

தெலுங்கானாவின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.டி.ராமராவ் ஆகஸ்ட் 9 அன்று வெளியிட்ட ட்வீட்டில் வைரல் புகைப்படம் உட்பட மேம்பாலத்தின் நான்கு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்தக் கூற்றினைச் சரிபார்க்க ஹைதராபாத்தில் உள்ள டிவி9 நிருபர் நூர் முகமதுவை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், வைரல் புகைப்படத்தில் இருப்பது ஹைதராபாத்தின் RHS மேம்பாலம் என்று கூறினார். “இந்த மேம்பாலம் ஆகஸ்டில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. அதனை ஒளியூட்டுவதற்கு எல்.ஈ.டி விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

வைரல் கூற்றினைப் பகிர்ந்து கொண்ட பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும், மே 2020 முதல் அக்கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: வைரல் பதிவு தவறானது. ஹைதராபாத்தின் RHS மேம்பாலத்தின் புகைப்படமே தவறான கூற்றுடன் வைரலாகி உள்ளது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later