
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையே, ஒரு காணொலி வைரலாகி வருகிறது. பாஜக எம்எல்ஏ உதய் சிங் ஹரியானாவில் விவசாயிகளால் தாக்கப்பட்டதாக இந்தக் காணொலி கூறுகிறது.
கூற்று
பேஸ்புக் பயனர் டிசம்பர் 28, 2020 அன்று ஒரு காணொலியைப் பதிவேற்றி, “ஹரியானா விவசாயிகள் மசோதாவுக்கு #எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. பாஜக எம்எல்ஏ உதய் சிங் விவசாயிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்,” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் இன்விட் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் இடுகையின் ஸ்கிரீன்ஷாட்டை பிரித்தெடுத்து, கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி இது பற்றி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஜீ நியூஸ் இணையதளத்தில், இந்த காணொலியில் பயன்படுத்தப்பட்ட அதே புகைப்படங்களைக் கொண்ட ஒரு அறிக்கையைக் கண்டோம்.
நவம்பர் 27, 2020 அன்று வெளியிடப்பட்ட அந்த செய்தி அறிக்கையில், ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள சர்னா பஞ்சாயத்து சமிதியின் செடியா கிராம பஞ்சாயத்தில் வாக்களிக்கும் நேரத்தில் இரண்டு குழுக்கள் மோதிக் கொண்டன என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை இங்கே படிக்கலாம்.
மேலும் இது குறித்து விசாரிக்க, ராஜஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி பாஸ்கரின் மின்-நாளிதழை நாங்கள் தேடினோம். அவ்வாறு தேடியதில், நவம்பர் 28, 2020 அன்று வெளியிடப்பட்ட ஜலூர் பதிப்பில் ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம். அந்த அறிக்கையில், இரு குழுக்களுக்கிடையில் பஞ்சாயத்து தேர்தலின்போது மோதல் நடந்தது. சமிதி பகுதியில் உள்ள சர்னாவ் பஞ்சாயத்தின் செடியா கிராம பஞ்சாயத்தில் நடந்த வாக்குப்பதிவின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியினருக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக, பாலியின் மூத்த பத்திரிகையாளரான ராஜேந்திர சிங்கைத் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் இது பற்றி பேசிய அவர், இந்த வைரல் காணொலி ஜலூரில் எடுக்கப்பட்டது என்றும், அங்கு பஞ்சாயத்து தேர்தலின்போது இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன என்றும் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை நாங்கள் ஆராய்ந்ததில், அந்த பயனர் பீகாரின் சிவான் நகரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்த வைரல் காணொலி ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவமே தவிர, இதற்கும் விவசாயிகள் போராட்டதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை. இந்த வைரல் பதிவு தவறானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.