
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் இந்த ஆண்டு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற 33 சதவீதம் பதிலாக மாணவர்கள் 23 சதவீதம் மதிப்பெண் போதும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்ததில் இந்த வைரல் பதிவு தவறானது என்று தெரியவந்தது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீதம் மதிப்பெண் தேவை.
கூற்று
பேஸ்புக் பயனர் மான்சிங் சமத் ஒரு இடுகையைப் பகிர்ந்து, “2021 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற 33 சதவீதம் அல்ல, 23 சதவீதம் மட்டுமே தேவை. அரசாங்கத்திடமிருந்து பெரிய அறிவிப்பு,” என்று எழுதியுள்ளார்.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது பற்றி விசாரிக்க, நாங்கள் இது குறித்த சொற்களைக் கூகுளில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் எந்தச் செய்தியையும் எங்களால் காண முடியவில்லை.
‘ஆகாஷ்வானி சமச்சார்’ அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கினில் 19 ஜனவரி அன்று பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், “10 மற்றும் 12-வது பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற 23 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்று கூறும் பதவி முற்றிலும் தவறானது,’ என்று கூறப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
மேலும் இந்தத் தேடலின் போது, 28 பிப்ரவரி 2018 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றையும் நாங்கள் கண்டோம். அதில் CBSE 2021 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற 33 சதவீதம் அல்ல, 23 சதவீதம் மட்டுமே தேவை. அரசாங்கத்திடமிருந்து பெரிய அறிவிப்பு தேர்வுகளுக்கு குறைந்தபட்சம் 33 சதவீதம் மதிப்பெண், தேர்ச்சி மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) செய்தித் தொடர்பாளர், ராம ஷர்மாவைத் நாங்கள் தொடர்பு கொண்டோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் பதிவு தவறானது. இது குறித்து ஒரு விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான மான்சிங் சமத்தின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனர் ஒடிசாவின் பொன்னர்கர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 805 நண்பர்கள் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு 23 சதவீதம் மட்டுமே தேவை என்று கூறும் இடுகை தவறானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.