X

உண்மை சரிபார்ப்பு: ‘F -16 விமானத்தில் சிறுநீர் கழித்த விமானி பிடிபட்டார்’ என்று பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிடவில்லை

ஒரு போர் விமானத்தின் உள்ளே ஒரு விமானி ஒருவர் சிறுநீர் கழித்தார் என டான் நாளிதழில் செய்தி வெளியானதாகக் கூறும் ஸ்கிரின்ஷாட் தவறானது. அது எடிட்டிங் செய்யப்பட்டது என்பதே உண்மை.

  • By Vishvas News
  • Updated: January 6, 2021

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு இடுகை, பாகிஸ்தானில் வெளியாகும் பத்திரிகையான ‘டான்’ இல் வெளியிடப்பட்ட அறிக்கையாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. இந்த இடுகையின் தலைப்பு, ஒரு விமானி போர் விமானத்திற்குள் சிறுநீர் கழிக்கும்போது பிடிபட்டார் என்று கூறுகிறது.


இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, இந்த ​​வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதையும், தவறான கூற்றுடன் பகிரப்பட்டு இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

கூற்று

பாகிஸ்தானின் ‘டான்’ செய்தித்தாள் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று, “PAF F -16 போர் விமானத்தின் காக்பிட்டில் சிறுநீர் கழித்த விமானி, சிறுநீர் கழிப்பதால் போர் விமானங்களின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தனது கனவில் அல்லாஹ் வந்து சொன்னதாகக் கூறினார்,” என்ற தலைப்புடன் பகிரப்பட்டு வருகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, இந்த ​​வைரல் இடுகையில் கூறப்பட்டது போன்று எந்தவொரு கட்டுரையும் ‘டான்’ இதழில் வெளியிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.

மேலும், இந்தத் தலைப்பில் பல இலக்கணப் பிழைகள் இருப்பதையும், அதனுடன் முற்றுப்புள்ளி இருப்பதையும் நம்மால் காண முடிந்தது. தலைப்பில் முற்றுப்புள்ளி ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இதன்மூலம் அந்த ஸ்கிரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டிருப்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.

ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூன் 10, 2020 அன்று இதுபோன்ற கட்டுரை ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடியதில், இந்தத் தேதியில் அதுபோன்ற அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.

ஸ்கிரீன்ஷாட்டின் வடிவமைப்பை ‘டான்’ நாளிதழின் கட்டுரை ஒன்றோடு ஒப்பிட்டோம். அவ்வாறு செய்ததில், ‘டான்’ நாளிதழில் வெளியான கட்டுரை ஆசிரியரின் பெயரைக் கொண்டிருப்பதையும், அதே நேரத்தில் வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் அதுபோன்று எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இந்த வித்தியாசத்தை கீழே காணலாம்:

இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக, பாகிஸ்தானின் டான் செய்தியின் மூத்த ஆசிரியர் அடீல் ஜாஃப்ரியுடன் நாங்கள் பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இது ஒரு தவறான பதிவு,” என்று கூறினார்.

இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், பேஸ்புக் பயனர் ராஜேஷ் கே ஸ்ரீவஸ்தவாவைத் 400 பேர் பின்தொடர்வதை நாங்கள் கண்டறிந்தோம்.

निष्कर्ष: ஒரு போர் விமானத்தின் உள்ளே ஒரு விமானி ஒருவர் சிறுநீர் கழித்தார் என டான் நாளிதழில் செய்தி வெளியானதாகக் கூறும் ஸ்கிரின்ஷாட் தவறானது. அது எடிட்டிங் செய்யப்பட்டது என்பதே உண்மை.

  • Claim Review : பாகிஸ்தானின் 'டான்' செய்தித்தாள் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று, 'PAF F -16 போர் விமானத்தின் காக்பிட்டில் சிறுநீர் கழித்த விமானி, சிறுநீர் கழிப்பதால் போர் விமானங்களின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தனது கனவில் அல்லாஹ் வந்து சொன்னதாகக் கூறினார்,' என்ற தலைப்புடன் பகிரப்பட்டு வருகிறது
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later