X

உண்மை சரிபார்ப்பு: புனே பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: January 3, 2021

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு இடையே, தொழிலதிபர் கௌதம் அதானி தொடர்பாக சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திய ரயில்வேதுறை மற்றும் அகமதாபாத் விமான நிலையம் ஆகியவற்றை தொழிலதிபர் அதானியுடன் தொடர்புபடுத்தி, அவர் அவற்றை வாங்கியுள்ளார் என்று கூறி புதிதாக ஒரு வைரல் கூற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நாங்கள் இந்த வைரல் இடுகையை உண்மை சரிபார்ப்பு செய்ததில், புனே நடைமேடை சீட்டின் புகைப்படம் திருத்தப்பட்டு இருப்பதை (எடிட்) கண்டறிந்தோம். ‘அதானி ரயில்வே, ரயில்வே இப்போது எங்கள் தனியார் சொத்து’ என்ற கூற்று நடைமேடை சீட்டில் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. புனே நடைமேடை சீட்டின் இந்த திருத்தப்பட்ட படமே தற்போது பரவலாக பகிரப்படுகிறது. இதற்கு முன்னரே, இந்த அசல் புகைப்படம் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கூற்று

சமூக ஊடகங்களில் நடைமேடை சீட்டின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் இந்த புகைப்படத்தை மக்கள் பகிர்ந்துகொண்டு, இந்திய ரயில்வே இப்போது அதானி ரயில்வே ஆகிவிட்டது என்று கூறி, அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

பேஸ்புக் பயனரான அசோக் குமார் டிசம்பர் 27 அன்று இந்த திருத்தப்பட்ட நடைமேடை சீட்டின் புகைப்படத்தை பதிவேற்றி, (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) “பொதுமக்களை கொள்ளையடிக்கும் பணி தொடங்கியது,” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையினை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, முதலில் கூகுள் தேடலை பயன்படுத்தி, ‘புனே நடைமேடை 50 ரூ.’ என்பதை தேடியதில், ​​புனே நடைமேடை சீட்டு பற்றிய செய்திகளைக் கூறும் பல வலைத்தளங்களை நாங்கள் கண்டோம். நவபாரத் டைம்ஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, புனே ரயில் நிலையத்தின் நடைமேடை சீட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரியவந்தது. இதன் முழு செய்தியினை இங்கே காணலாம்.

மேலும் இந்த விசாரணையின் போது ரயில்வே செய்தித் தொடர்பாளரின் ட்வீட் ஒன்றையும் நாங்கள் கண்டறிந்தோம். சமூக இடைவெளி நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டி, ரயில் நிலையத்தில் தேவையற்ற கூட்டத்தை குறைக்கவே, புனே நடைமேடை சீட்டின் விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை மக்களை பின்பற்ற வைக்கவே, நடைமேடை சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக புனே பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் ஜவாரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், கோவிட் -19 காரணமாகவும், கூட்டத்தைத் தவிர்க்க வேண்டியும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், “கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே நடைமேடை சீட்டுகள் வழங்கப்படுகின்றன. தேவையற்ற கூட்டத்தை குறைப்பதற்காக சீட்டின் விலை அதிகரிக்கப்படுகின்றன. அதானி ரயில்வே குறித்த கூற்று முற்றிலும் தவறானது,” என்று கூறினார்.

இந்த தவறான இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் அசோக் குமாரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் டெல்லியில் வசிப்பவர் என்பதும், அவர் கணக்கு பிப்ரவரி 2015 முதல் செயல்பாட்டில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த கூற்று குறித்த எங்களது விசாரணையில், இந்த வைரல் பதிவு தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. சில சமூக ஊடக பயனர்கள் புனேவின் நடைமேடை சீட்டின் திருத்தப்பட்ட புகைப்படத்தை தவறான கூற்றுக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதே உண்மையாகும்.

  • Claim Review : சமூக ஊடகங்களில் நடைமேடை சீட்டின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் இந்த புகைப்படத்தை மக்கள் பகிர்ந்துகொண்டு, இந்திய ரயில்வே இப்போது அதானி ரயில்வே ஆகிவிட்டது என்று கூறி, அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later