
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). டூத்பேஸ்ட்டில் உள்ள வண்ணக் குறியீடுகள் அதில் உள்ள உட்பொருட்களை குறித்து தெரிவிக்கின்றன என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு பதிவு கூறுகிறது. இப்பதிவில், கறுப்பு நிறம் என்றால் தூய வேதியியல் பொருட்களால் ஆனது, சிவப்பு என்றால் இயற்கை + வேதியியல் பொருட்களால் ஆனது, நீலம் என்றால் இயற்கை + மருத்துவ பொருட்களால் ஆனது மற்றும் பச்சை என்றால் இயற்கை பொருட்களால் ஆனது என்று பொருள் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் பதிவு தவறானது என்று கண்டறியப்பட்டது. டூத்பேஸ்ட்களில் உள்ள வண்ணங்கள் உற்பத்தி செயல்முறையுடன் தொடர்புடையவையே தவிர, அவ்வண்ணங்கள் அதன் உட்பொருட்களுடன் தொடர்புடையவை அல்ல என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
கூற்று
‘ஆரோக்கிய தயாரிப்புகள்’ என்ற பெயரில் பகிரப்படும் பேஸ்புக் இடுகை, “வண்ணக் குறியீட்டின் பொருள் என்ன: “கறுப்பு நிறம் என்றால் தூய வேதியியல் பொருட்களால் ஆனது, சிவப்பு என்றால் இயற்கை + வேதியியல் பொருட்களால் ஆனது, நீலம் என்றால் இயற்கை + மருத்துவ பொருட்களால் ஆனது மற்றும் பச்சை என்றால் இயற்கை பொருட்களால் ஆனது,” என்று கூறுகிறது. இந்த இடுகையுடன் உள்ள தலைப்பில், “#FridayFact: உங்கள் டூத்பேஸ்ட்டில் உள்ள வண்ணக் குறியீட்டின் அர்த்தம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பற்பசையில் வண்ண குறியீடு என்ன என்பதைப் பகிரவும்! ” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த பதிவு குறித்த சொற்களைப் பயன்படுத்தி கூகுளில் தேடுவதன் மூலம், எங்கள் விசாரணையை நாங்கள் தொடங்கினோம். அவ்வாறு தேடியதில், கோல்கேட் இணையதளத்தில், ‘பற்பசை குறியீட்டின் நிறம் என்ன?’ என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவைக் கண்டோம்.
அந்த வலைப்பதிவில் “பற்கள் பராமரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோரை ஏமாற்றவும், அவர்களிடமிருந்து டூத்பேஸ்ட்டின் உட்பொருட்களை மறைப்பதற்காகவும், வண்ண குறியீடுகளை தங்கள் டூத்பேஸ்ட்களில் பயன்படுத்தவில்லை. நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.. அப்படியென்றால் அவ்வாறான வண்ணக் குறியீடுகள் இருப்பதன் காரணம் என்ன? அவற்றிற்கு உண்மையாகவே ஒரு காரணம் உண்டு கூறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! ஆம் டூத்பேஸ்ட் தயாரிப்பதற்கு உண்மையில் அவை உதவுகின்றன, அந்த டூத்பேஸ்ட் குழாயின் முடிவு எங்கே இருக்கிறது என்பதை இந்த குறியீடுகள் ஒளி சென்சார்களுக்குச் சொல்வதன் மூலம், அவற்றை சரியாக வெட்டி, ஒழுங்காக சீல் வைக்க முடியும்,” என்று கூறப்பட்டுள்ளது.
டூத்பேஸ்ட்டுகளின் உட்பொருட்கள் வழக்கமாக பேக்கேஜிங்கில், குழாயில் அல்லது அவை வரும் பெட்டியில் அச்சிடப்படுகின்றன.
அமெரிக்க டென்டல் சங்கம் (ADA), “பற்பசைகள் ஜெல், பேஸ்ட் அல்லது தூள் வடிவில் வரலாம். பொருட்கள் சற்று வேறுபட்டாலும், எல்லா பற்பசைகளும் ஒரே பொதுவான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன,” என்று கூறுகிறது.
இந்த வைரல் பதிவு குறித்து விசாரிக்க நாங்கள் கோல்கேட்டை தொடர்பு கொண்டு பேசினோம். கோல்கேட் வாடிக்கையாளர் சேவை துறையைச் சேர்ந்த பாலாஜியின் கருத்துப்படி, “டூத்பேஸ்ட் குழாயின் வண்ண குறியீடுகள் இயந்திரத்திங்கள் அந்த குழாயின் முடிவைக் கண்டறிய உதவுகிறது. மேலும் அச்சிடுதல் சரியான இடத்தில் இருப்பதையும், சீல் முறையாக வைக்கப்படுவதலயும் இது உறுதி செய்கிறது,” என்றார்.
ஆரோக்கிய தயாரிப்புகள் என்ற பெயரில் இந்த இடுகை பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நாங்கள் இப்பக்கத்தை ஆராய்ந்ததில், இந்தப் பக்கத்திற்கு 281 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டோம்.
निष्कर्ष: டூத்பேஸ்ட் குழாயின் முடிவில் வண்ண குறியீடுகள் இருப்பது அதன் உட்பொருட்களைக் காட்டுவதற்காக என்ற கூற்று தவறானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.