X

உண்மை சரிபார்ப்பு: போஸ்டில் உள்ள உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை தமிழ்நாட்டு மாணவர்கள் வடிவமைத்தார்கள் என்னும் க்ளைம் சமீபத்தியது அல்ல. இது தவறான தகவல்.

சென்னை மாணவர்கள் உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை விண்ணில் செலுத்தியதாக சொல்லப்படுகிற வைரல் போஸ்ட் பழைய ஒன்று சமீபத்தியது அல்ல. இந்த போஸ்ட் தவறானது.

  • By Vishvas News
  • Updated: April 30, 2022

விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி) தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்ள் உலகிலேயே மிகச்சிறிய சேட்டிலைட்டை உருவாக்கியதாகவும் அதை நாசா மூலமாக சமீபத்தில் ஏவியதாகவும் க்ளைம் செய்கிற போஸ்ட் ஒன்றை ஃபேஸ்புக்கில் விஷ்வாஸ் நியூஸ் கண்டது. மேலும் ஊடகங்கள் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை குறித்த செய்திகளில் மும்முரமாக இருப்பதால் இந்த உண்மையைக் காட்டவில்லை என்றும் அந்த போஸ்ட்டில் கூறப்பட்டிருந்தது.

விஷ்வாஸ் நியூஸ் தன்னுடைய புலனாய்வில் இந்த க்ளைமும் படமும் பழையது என்பதைக் கண்டறிந்தது. சென்னை மாணவர்கள் உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை 2017-ம் ஆண்டில் கட்டியிருந்தார்கள். இது சமீபத்திய நிகழ்வு அல்ல.

க்ளைம்:

முபீன் வஸ்கர் எனும் ஃபேஸ்புக் பயனர் धर्म मराठी (தர்ம் – மராத்தி) எனும் ஃபேஸ்புக் க்ரூப்பில் ஒரு போஸ்ட்டை 24 மார்ச் அன்று பகிர்ந்திருந்தார். அதில் ஏஎன்ஐ உடையது எ்ன்று குறிப்பிட்டு ஒரு படம் இருந்தது. பயனர் க்ளைம் செய்தது: DELETED (அழிக்கப்பட்டது)

ஆங்கில மொழிபெயர்ப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது மாணவரான ரிஃபாத் ஃபரூக் உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை உருவாக்கி அதை நாசா மூலமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்தியா இன்று ஒரு சரித்திரத்தை படைத்திருக்கிறது. இந்த சேட்டிலைட் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் ”கலாம்சாட்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் எடை 64 கிராம். இருந்தபோதும், (Godi) கோடி மீடியா காஷ்மீர் ஃபல்ஸ்ஸை காட்டுவதிலேயே மும்முரமாக உள்ளது.

இந்த போஸ்ட் மற்றும் இதன் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பை இங்கு காணவும்.

புலனாய்வு:

எளிமையான கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலின் மூலமாக விஷ்வாஸ் நியூஸ் உண்மை சரிபார்ப்பைத் தொடங்கியது.

ஏஎன்ஐ (ANI)-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேன்டிலி்ல் இருந்த போஸ்ட்டில் இந்த இமேஜ் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம்.

அந்த போஸ்ட்டில் பின்வருமாறு இருந்தது: உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை உருவாக்கிய சென்னை மாணவர்கள் அதனை விண்ணில் செலுத்திய பின் மகிழ்கிறார்கள். 64 கிராம் எடையுள்ள சேட்டிலைட்டை நாசா விண்ணில் செலுத்தியது.

இந்த போஸ்ட்டில் மூன்று படங்கள் இருந்தன இந்த போஸ்ட் ஜுன் 22, 2017 அன்று செய்யப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி பல்வேறு ஊடக வலைத்தளங்களில் இருப்பதையும் கீவேர்டு தேடலில் நாங்கள் அறிந்தோம்.f

இந்தியன் எக்ஸ்பிரசில் “தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவரால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை நாசா விண்ணில் செலுத்துகிறது” என்கிற தலைப்பில் இருந்த செய்திக்குறிப்பில், ”வியாழன் அன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் மற்றும் அவரது அணி உருவாக்கிய, முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் ”கலாம்சாட்” என பெயரிடப்பட்ட உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை நாசா விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்தியா சரித்திரம் படைத்தது. இந்த மிகச்சிறிய சேட்டிலைட் சுமார் 64 கிராம் எடை கொண்டது.”

இந்தச் செய்திக்குறிப்பு ஜுன் 23, 2017 தேதியிடப்பட்டது.

இந்தச் செய்தியை இங்கு படிக்கவும்.

ஜுன் 22, 2017 அன்று india.com–யிலும் இந்தச் செய்தி வந்திருந்தது.

விஷ்வாஸ் நியூஸ், புலனாய்வின் அடுத்த படியாக சென்னையின் ஏஎன்ஐ செய்தித்தொடர்பாளர் ரொனால்டு ஜெபராஜிடம தொடர்பு கொண்டது. அவர், ”ஜுன் 2017 அன்று கலாம்சாட் குறித்த செய்தியை ரிப்போர்ட் செய்தது நான்தான். இந்தச் செய்தி சமீபத்தியது அல்ல. நான் ரிஃபாத் ஷாரூக்குடன் ஒரு பேட்டியும் எடுத்திருக்கிறேன்.” என்றார்.

புலனாய்வின் கடைசிக் கட்டமாக இந்த வைரல் போஸ்ட்டை பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் குறித்த ஒரு சமூகப் பின்புல சரிபார்ப்பைச் செய்தது. முபீன் வஸ்கர் ரோஹா மகாராஷ்ட்ராவில் வசிப்பவர் ஆவார்.

निष्कर्ष: சென்னை மாணவர்கள் உலகின் மிகச்சிறிய சேட்டிலைட்டை விண்ணில் செலுத்தியதாக சொல்லப்படுகிற வைரல் போஸ்ட் பழைய ஒன்று சமீபத்தியது அல்ல. இந்த போஸ்ட் தவறானது.

  • Claim Review : தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிஃபாத் ஃபாரூக் வடிவமைத்த உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை 'நாசா' நேற்று விண்ணில் செலுத்தி இந்தியா வரலாறு படைத்தது. இந்த செயற்கைக்கோளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்களின் நினைவாக ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் எடை 64 கிராம் மட்டுமே. ஆனால் இந்தியாவின் கோடி மீடியா 'காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்தே மும்முரமாக உள்ளன
  • Claimed By : முபீன் வஸ்கர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later