உண்மை சரிபார்ப்பு : இந்த மூச்சுப் பரிசோதனை நுரையீரல் நலன் அல்லது ஆக்சிஜன் அளவுகளுக்கு அல்ல, வைரல் காணொளி தவறாக வழிநடத்துவது
விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், நுரையீரல் சோதனை என்ற பெயரில் உள்ள வைரல் க்ளைம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் காணொளி முன்பே பலமுறை பலவித க்ளைம்களுடன் வைரல் ஆகியுள்ளது
- By: Jyoti Kumari
- Published: Aug 13, 2022 at 04:53 PM
- Updated: Aug 13, 2022 at 05:54 PM
விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): நுரையீரல்கள் நலத்துடன் உள்ளனவா என்பதை நிர்ணயிக்கும் மூச்சுப் பரிசோதனை என்று க்ளைம் செய்யும் ஒரு ஒரு நிமிட காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தக் காணொளியின்படி, ஒருவர் ஏ என்ற புள்ளியிலிருந்து பி என்ற புள்ளி வரை மூச்சை இழுத்துப் பிடித்தார் என்றால், அது வலிமையான நுரையீரல்களின் அடையாளம். பயனர்கள் இதை நுரையீரல் நலன் சோதனை என்று இதை பகிர்கின்றனர். விஷ்வாஸ் நியூஸ் இதை புலன்விசாரணை செய்து இந்தப் பதிவு போலி என்று கண்டுபிடித்தது. கொரோனா கிருமியை நுரையீரல் நலன் சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஏற்கனவே இதுபோல பல க்ளைம்கள் வைரல் ஆகியிருக்கின்றன.
க்ளைம்
ஃபேஸ்புக் பயனர் Bright Jnr இந்தப்பதிவை ஜூலை 13 அன்று பகிர்ந்து எழுதினார், “உங்கள் நுரையீரல்களையும் ஆக்சிஜன் அளவையும் சோதியுங்கள். நீங்கள் புள்ளி ஏ-விலிருந்து புள்ளி பி வரை உங்கள் மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால், நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள்.”
ஒரு பயனரும் இந்த காணொளியை இன்ஸ்டாக்ராமில் இதே க்ளைமுடன் பகிர்ந்து இருக்கிறார்., வேறு பல பயனர்களும் இந்தப் பதிவை இதே போன்ற க்ளைமுடன் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு இங்கே காணக் கிடைக்கும்.
புலன் விசாரணை
நாங்கள் இந்தக் க்ளைமை இன்டர்நெட்டில் சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளின் உதவியோடு தேடினோம். அந்தத் தேடலில் உலக சுகாதார நிறுவனத்தின் வலைதளத்தில் விவரங்களையும் அவர்களது அதிகாரப் பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவையும் கண்டுபிடித்தோம் உலக சுகாதார நிறுவனத்தின் வலைதளத்தில் உள்ள கட்டுக்கதையை உடைக்கும் பிரிவு (Myth Buster section) அசௌகரியம் இல்லாமல் உங்கள் மூச்சை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் இழுத்துப் பிடிப்பது உங்களுக்கு கொரோனா இல்லை அல்லது வேறு எந்த நுரையீரல் நோயும் இல்லை என்று நிரூபிக்காது என்று தெளிவாகக் கூறுகிறது.
இந்த விவரத்தை உலக சுகாதார நிறுவனம் தன் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்திலும் ட்விட்டர் ஹேண்டிலிலும் பகிர்ந்திருக்கிறது. அதை இங்கே காணலாம்.
இந்த வைரல் க்ளைமை புலன்விசாரணை செய்ய லக்னோ பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஆஷிஷ் வர்மாவுடன் தொடர்பு கொண்டோம். அவர் இந்தக் க்ளைம் பொய் என்று கூறினார்.
நாங்கள் இந்தக் களைமை, மேல் விவரங்களுக்காக ஹைதராபாத் சிட்டிசன்ஸ் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் நுரையீரல் நிபுணரும் ஆலோசகருமான டாக்டர் பிரஷாந்த் முக்காவிடம் பகிர்ந்து கொண்டோம். அவர் கூறினார்: நீங்கள் உங்கள் மூச்சை ஏ புள்ளியிலிருந்து பி புள்ளி வரை இழுத்துப் பிடிக்க முடியும் என்றால் உங்களுக்கு ஆரோக்கியமான நுரையீரல்களும் ஆக்சிஜென் அளவும் உள்ளன என்று க்ளைம் செய்யும் வைரல் காணொளி பொய் மற்றும் தவறாக வழிநடத்துவது ஏனென்ன்றால் அது ஒரு உண்மையான நோய் கண்டறிதல் அல்ல. ஃபிப்ரோசிஸ் போன்ற நுரையீரல் நோயைக் கண்டறிய அனைத்தையும் கண்டுபிடிக்கும் ஒரு சோதனை என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி, ஒருவர் மூச்சை எவ்வளவு நேரம் இழுத்து பிடிக்க முடியும் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது, குறிப்பாக வயதானவர்கள் அல்லது தொடர்ந்து புகை பிடிப்பவர்கள் போன்ற பலகீனமான நிலையில் இருப்பவர்களின் நுரையீரல் கொள்ளளவு வேறுபடும். மேலும், மிக அதிகமான ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் இது போல் ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் செய்தால், ஒருவேளை பிரச்சினை வராமல் தடுக்கலாம்.”
புலன்விசாரணையின் முடிவில் நாங்கள் இந்தக் களைமை பகிர்ந்த பயனரை ஒரு சமூக சஸ்கேனிங் செய்தோம். அதில் அந்த பயனர் கானாவில் உள்ள ஆக்ரா என்ற இடத்தில் வசிப்பவர் என்று தெரிந்தது.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், நுரையீரல் சோதனை என்ற பெயரில் உள்ள வைரல் க்ளைம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் காணொளி முன்பே பலமுறை பலவித க்ளைம்களுடன் வைரல் ஆகியுள்ளது
- Claim Review : உங்கள் நுரையீரல்களையும் ஆக்சிஜன் அளவையும் சோதியுங்கள். நீங்கள் புள்ளி ஏ-விலிருந்து புள்ளி பி வரை உங்கள் மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால், நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள்.
- Claimed By : ஃபேஸ்புக் பயனர் பிரைட் ஜூனியர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.