X

உண்மை சரிபார்ப்பு: ‘மசாலா கிங்’ தர்மபால் குலாட்டியின் இந்த காணொலி அவரது வாழ்வின் இறுதி தருணங்களின் எடுக்கப்படவில்லை

  • By Vishvas News
  • Updated: December 11, 2020

புது தில்லி (விஸ்வாஸ் குழு). MDH மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் மகாஷய் தரம்பால் குலாட்டியின் மறைவினையொட்டி, மருத்துவமனை படுக்கை ஒன்றில் குலாட்டி அமர்ந்திருக்கும்போது, ஒரு நபர் அவருக்காக பாடல் ஒன்றைப் பாடும் காணொலி, இது குலாட்டியின் இறுதி தருணங்களின்போது எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன், பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நமது வாட்ஸ்அப் சாட்பாட்டின் (+919599299372) மூலம் உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடையே வந்தடைந்தது. இது குறித்து நம் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இந்த வைரல் காணொலி பழையது என்பதும், நமக்குத் தெரியவந்தது.

கூற்று

ஹிமான்ஷு சிங் ராஜாவத் – போலீஸ் ஆபிஸர் ராஜ் என்கிற பேஸ்புக் பக்கம், இந்த காணொலியைப் பகிர்ந்து, “மசாலா மன்னர் மகாஷே தரம்பால் ஜியின் (MDH) இறுதி தருணத்தின் புகைப்படங்கள், அவரது இறுதி தருணத்தில் கூட அவரது இதயம் நாட்டிற்காக துடித்துக் கொண்டிருந்தது…” என்று எழுதியுள்ளார்.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

பல்வேறு சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுவரும் இந்த காணொலிக்கு கீழே உள்ள கருத்துகளை நாங்கள் கவனித்தோம். மேலும் ஏபிபி செய்தி நிருபரான விகாஸ் படோரியாவின் கணக்கிலும், இந்த காணொலி பகிரப்பட்டு இருப்பதை நாங்கள் கண்டோம். பேஸ்புக் பயனரான ககன் அஹுஜா என்பவர் தான் பதிவிட்டுள்ள கருத்துக்களில், இந்த காணொலியில் பாடும் அந்த நபரை, அம்பலாவைச் சேர்ந்த தனது மூத்த சகோதரர் ராகேஷ் அஹுஜா என்று அடையாளம் கண்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. மேலும் ககன் அஹுஜா தனது பேஸ்புக் இடுகை ஒன்றிலும், இந்த வைரல் காணொலியை பதிவேற்றி, அதில் ராகேஷ் அஹுஜாவை டேக் செய்து இருப்பதையும் எங்களால் காண முடிந்தது.

இந்த கூற்றினை சரிபார்க்க நாங்கள் ராகேஷ் அஹுஜாவை தொடர்பு கொண்டோம். தரம்பால் குலாட்டியின் இறுதி தருணங்களின்போது இந்த காணொலி எடுக்கப்படவில்லை என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்திய அஹுஜா, கடந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தின்போதே இந்த காணொலி எடுக்கப்பட்டதாகக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர், “டெல்லியின் ஜனக்புரியில் உள்ள அவரது சொந்த மருத்துவமனையான மாதா சந்தன் தேவி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவரின் அனுமதி பெற்றே நாங்கள் இந்தப் பாடலைப் பாடினோம். குலாட்டி ஐயா இசையை மிகவும் நேசித்தார், இசையைக் கேட்கும்போதெல்லாம் அவர் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொள்வார். இந்த நிகழ்வின்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ந்திருந்தோம்,” என்று கூறினார்.

தான் அம்பாலாவில் MDH மசாலா பொருட்களை விநியோகிப்பவர் என்றும், அடிக்கடி குலாட்டியை தான் சந்திப்பது உண்டு என்றும் அஹுஜா கூறினார். இந்த காணொலி எடுக்கப்பட்ட சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், “அவர் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்தபோது, ​​நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்றோம்,” என்று கூறினார்.

இந்த வைரல் காணொலியைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கம் 45,036 பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பது நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. MDH உரிமையாளர் தரம்பால் குலாட்டியின் இந்த பழைய காணொலி, தற்போது அவரது மறைவினைத் தொடர்ந்து, தெளிவற்ற கூற்றுடன் வைரலாகி உள்ளது.

  • Claim Review : மசாலா மன்னர் மகாஷே தரம்பால் ஜியின் (MDH) இறுதி தருணத்தின் புகைப்படங்கள், அவரது இறுதி தருணத்தில் கூட அவரது இதயம் நாட்டிற்காக துடித்துக் கொண்டிருந்தது
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : Misleading
Misleading
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later