X

உண்மைச் சரிபார்ப்பு: நடைபாதை இடிந்து விழுந்ததில் இருந்து தப்பிய நபரின் வைரலான காணொளி ஆந்திராவைச் சேர்ந்தது சென்னை அல்ல

நடைபாதை இடிந்து குகைக்குள் விழுந்ததில் இருந்து மனிதன் தப்பிக்கும் வைரல் வீடியோ, ஆந்திராவின் திருப்பதி நகரத்தில் இருந்து உள்ளது.

  • By Vishvas News
  • Updated: August 24, 2022

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): மொபைல் கடைக்கு வெளியே நடைபாதை சரிந்து விழுந்ததில் இருந்து ஒருவர் தப்பித்துக்கொண்டிருக்கும் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளிக்கு மில்லியன் கணக்கான பார்வைகளும் (வியூஸ்) விருப்பங்களும் (லைக்ஸ்) கிடைத்துள்ளது. ஆனால், தற்போது அந்த வீடியோ சென்னையில் இருந்து வந்ததாக சிலர் கூறி வருகின்றனர். விஸ்வாஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ ஆந்திராவின் திருப்பதி நகரைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வடிகால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

உரிமை கோரல்:

ட்விட்டர் பயனர் துரை அதிமுக ட்விட்டரில் வைரலான வீடியோவைப் பகிர்ந்து தமிழில் எழுதினார்:

தமிழாக்கம்: “விடியலோ விடியல்” 🙄 சென்னையில் விடியல் ஆட்சியில் தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் அவல நிலை… 👆

இடுகையையும் அதன் காப்பகப் பதிப்பையும் இங்கே பார்க்கவும்.

விசாரணை:

விஸ்வாஸ் நியூஸ், இன்விட் கருவியில் காணொளியை பதிவேற்றம் செய்வதனூடாக விசாரணையைத் தொடங்கியது.

ஃப்ரேம்கள் மற்றும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம், இச்சம்பவம் குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதைக் கண்டோம், ஆனால் அது நடந்த இடத்தை யாரும் குறிப்பிடவில்லை.

பின்பு நாங்கள் யூடியூப்பில் முக்கிய வார்த்தைகளைச் சரிபார்த்தோம், மேலும் வீடியோவைப் பகிர்ந்த சேனலையும் கண்டோம்.

8.15 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட V6 News தெலுங்கு, அந்த வீடியோவைப் பகிர்ந்து, எழுதியிருந்ததாவது: அரசின் அலட்சியத்தால் திருப்பதி ஏர் பைபாஸ் சாலையில் இடிந்து விழுந்த நடைபாதை | V6 செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் திருப்பதி நகரத்தில் உள்ள ஏர் பைபாஸ் சாலையில் இருந்துள்ள காணொளி இது என்பது உறுதி செய்யப்பட்டது.

‘வேதம் மொபைல் கடையின்’ முன் பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது அந்த மொபைல் கடையின் தொடர்பு எண்ணையும் எங்களுக்கு வழங்கிய ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளருடன் விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது,

நாங்கள் கடையை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசினோம். கடை மேலாளர் கூறுகையில், “வைரலாகிய வீடியோவில் காணப்பட்ட சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் கடையின் முன் நடந்தது. வடிகால் இடிந்து விழுந்ததில் இருந்து அந்த நபர் விழாமல் தப்பினார்.”

மேலும், இது நகராட்சி பிரச்னை என்றும், தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அந்த நபர் கூறினார்.

DURAI ADMK தோகமலை கிழக்கு ஒன்றியம் தகவல் தொழிநுட்ப @DURAIDU78031144 joined Twitter on January 2021 and has 1,368 followers.

அடுத்த கட்ட விசாரணையில், வீடியோவைப் பகிர்ந்துள்ள ட்விட்டர் சுயவிவரத்தில் சமூகப் பின்னணியைச் சரிபார்த்தோம். துரை அதிமுக தோகமலை கிழக்கு ஒன்றியம் தகவல் தொழிநுட்ப @DURAIDU78031144 ஜனவரி 2021 அன்று Twitter இல் சேர்ந்தார் மற்றும் 1,368 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

निष्कर्ष: நடைபாதை இடிந்து குகைக்குள் விழுந்ததில் இருந்து மனிதன் தப்பிக்கும் வைரல் வீடியோ, ஆந்திராவின் திருப்பதி நகரத்தில் இருந்து உள்ளது.

  • Claim Review : அரசின் அலட்சியத்தால் திருப்பதி ஏர் பைபாஸ் சாலையில் இடிந்து விழுந்த நடைபாதை | V6 செய்திகள்
  • Claimed By : துரை அ.தி.மு.க
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later