X
X

Fact Check: கமல்நாத் ராகுல் காந்தியை ‘சிவனின் அவதாரம்’ என்று அழைத்ததாக வைரலாகும் கூற்று தவறானது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிவபெருமானின் அவதாரம் என்று குறிப்பிட்டதாகக் கூறும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிவபெருமானின் அவதாரம் என்று குறிப்பிட்டதாகக் கூறும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலான இந்த அறிக்கையை விஷ்வாஸ் நியூஸ் முன்னர் விரிவாக ஆராய்ந்து, அது போலியானது என்று கண்டறிந்தது. ராகுல் பற்றி இதுபோன்ற எந்த அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை.

வைரலாகி வருவது என்ன?

ஆகஸ்ட் 3, 2025 அன்று, ‘ஆனந்த் கே பாண்டே’ என்ற பேஸ்புக் பயனர், “ராகுல் காந்தி சிவனின் அவதாரம்: கமல்நாத்!! அவருக்கு கொஞ்சம் ‘விஷம்’ கொடுத்து சரிபார்க்கவும். மக்கள் அவரை நம்புவார்கள், அவர்களுக்கும் ஆதாரம் தேவை!” என்ற கூற்றுடன் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

பதிவின் ஆர்க்கைவ்டு லின்க்கை இங்கே  காணலாம்.

விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் முன்பு ஏப்ரல் 27, 2023 அன்று இந்தக் கூற்றை ஆராய்ந்தது. முதற்கட்டமாக கூகுள் ஓபன் தேடலில், கமல்நாத் கூறியதாகக் கூறப்படும் வைரல் அறிக்கையை உறுதிப்படுத்தும் எந்த நம்பகமான செய்தி அறிக்கைகளையும் நாங்கள் காணவில்லை. இருப்பினும், உ.பி.யின் பிரயாக்ராஜில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுலை சிவனின் அவதாரமாகக் குறிப்பிடுவதாக செய்தி அறிக்கைகளைக் கண்டோம்.

டிசம்பர் 16, 2017  செய்தியறிக்கையின்படி, ராகுல் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, பிரயாக்ராஜில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவரை நீலகண்ட சிவபெருமானின் அவதாரத்தில் சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டினர். இந்த சுவரொட்டிகள் ஆனந்த் பவனுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன.

இந்த வைரல் கூற்று தொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவி சக்சேனாவையும் விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது, கமல்நாத் ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

விஷ்வாஸ் நியூஸின் முந்தைய விசாரணைகளின் விரிவான கண்டுபிடிப்புகளை இங்கே படிக்கலாம்.

விசாரணையின் முடிவில், போலி பதிவைப் பகிர்ந்த பயனர் வாரணாசியைச் சேர்ந்த ஆனந்த் கே பாண்டே என்பதும் அவருக்கு 2000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் ஆராய்ந்ததில், கமல்நாத் ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என்று குறிப்பிட்டார் என்கிற வைரல் பதிவு போலியானது என்று கண்டறியப்பட்டது.

  • Claim Review : ராகுல் காந்தி சிவனின் அவதாரம் என்று கமல்நாத் கூறினார்.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர் ஆனந்த் கே பாண்டே
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later