X

உண்மைச் சரிபார்ப்பு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி ரிஷி சுனக் வைரலான அறிக்கையை வெளியிடவில்லை, வைரல் பதிவு போலியானது

  • By Vishvas News
  • Updated: November 16, 2022

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பிரிட்டனின் புதிய பிரதமரான பிறகு, ரிஷி சுனக் பல காரணங்களால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ​​பலவீனமான மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவுக்கு சரியான வழியைக் காட்ட மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவைப்படுகிறார் என்று ரிஷி சுனக் கூறியதாக சமூக ஊடகங்களில் இப்போது ஒரு வைரல் பதிவு உள்ளது.

விஸ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை ஆய்வு செய்து அது போலியானது என கண்டறிந்தது. ரிஷி சுனக் அத்தகைய அறிக்கை எதையும் கொடுக்கவில்லை; பாஸ்கர்.காமில் ஒரு செய்தி அறிக்கையின் (படத்)தொகுப்பு டிஜிட்டல் முறையில் திரித்து அமைக்கப்பட்டு (மாற்றப்பட்டு) வைரலானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

உரிமைகோரல்:

‘நியூ இந்தியா கி புலாண்ட் ஆவாஸ்’ என்ற முகநூல் பக்கம், அக்டோபர் 27 அன்று ரிஷி சுனக்கின் படைப்பை ஒரு இடுகையில் பகிர்ந்துள்ளது, அதில், “இந்தியாவுக்கு சரியான வழியைக் காட்டவும், பலவீனமான, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவைப்படுகிறார்” என்று எழுதப்பட்டிருந்தது.

ரிஷி சுனக் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்திய அந்த இடுகை அது பிரிட்டனின் புதிய பிரதமரின் அறிக்கை என்று விவரிக்கப்பட்டுள்ளது.

இது உண்மை என்று நினைத்து, மற்ற பயனர்களும் அதை வைரலாக்கி வருகின்றனர்.

இடுகையின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.

விசாரணை:

வைரலான பதிவை ஆய்வு செய்யும்படியாக விஸ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் ஓபன் சர்ச் டூலை பயன்படுத்திது. இருப்பினும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ரிஷி சுனக் அத்தகைய அறிக்கை ஒன்றை அளித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் எந்த செய்தியையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விசாரணையை முன்னெடுத்துச் செல்ல கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் கருவி பயன்படுத்தப்பட்டது. வைரலான படத்தொகுப்பைத் தேடியபோது, ​​டைனிக் பாஸ்கரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அசல் படத்தொகுப்பைக் கண்டோம். இது அக்டோபர் 25 அன்று பகிரப்பட்டிருந்தது. பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் ஆகியோரின் அறிக்கைகளுடன் இது பயன்படுத்தப்பட்டது.

விஸ்வாஸ் நியூஸ் உண்மையான மற்றும் போலி படத்தொகுப்புகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தது. அசல் படத்தொகுப்பில் உள்ள புகைப்படத்தின் பகுதியும் ரிஷி சுனக் பெயரில் வைரலான பதிவில் இருந்த. புகைப்படத்தின் பகுதியும் ஒன்றாக இருந்தது. ஆனால் கீழ் பகுதி வித்தியாசமாக இருந்தது. இரண்டு படத்தொகுப்புகளையும் ஒன்றாக கீழே காணலாம்.

அடுத்த கட்ட விசாரணையில், நாங்கள் டைனிக் பாஸ்கரை தொடர்பு கொண்டோம். பாஸ்கர்.காம் தலைவர் பிரசூன் மிஸ்ரா விஸ்வாஸ் நியூஸிடம் கூறியதாவது, “வைரலான பதிவில் கூறப்பட்டுள்ளபடி, ரிஷி சுனக் மற்றும் மன்மோகன் சிங் பற்றி எனது இணையதளத்தில் இதுபோன்ற எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. இது போலியானது.”

முடிவுரை: விஸ்வாஸ் நியூசால் நடத்தப்பட்ட விசாரணையில், ரிஷி சுனக் பெயரில் வெளியான வைரல் அறிக்கை போலியானது என நிரூபிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவர் அப்படி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது (திரித்து அமைக்கப்பட்டுள்ளது).

  • Claim Review : ரிஷி சுனக் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கருத்துக்களைப் பாராட்டினார்
  • Claimed By : முகநூல் பக்கம்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later