X

உண்மை சரிபார்ப்பு: அரசாங்கம் வழங்கிடும் பண்டிகை கால முன்பணத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி இல்லை, வைரல் செய்தி தெளிவற்றது

  • By Vishvas News
  • Updated: October 21, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000 அறிவிக்கப்பட்டதைப் பற்றி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் ஒரு வைரல் செய்தியில், அந்த முன்பணம் 18 சதவீத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) உடன் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. வரி பிடித்தம் போக ₹ 8,200 கொடுக்கப்படுகிறது என்றும், 10 மாத தவணையில் அப்பணம் மீண்டும் பெறப்படுவதாகவும் அச்செய்தி குற்றம் சாட்டுகிறது.

விஸ்வாஸ் செய்தி விசாரணையில் வைரல் கூற்று தெளிவற்றது என்று தெரியவந்துள்ளது. நிதியமைச்சர் அரசு ஊழியர்களுக்கு ₹10,000 பண்டிகை கால முன்பணம் அறிவித்தார் என்பது உண்மைதான் என்றாலும், இது 18 சதவீத ஜிஎஸ்டியுடன் வருகிறது என்ற கூற்று தவறானது.

கூற்று

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் ஒரு செய்தியில், “மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் பெஸ்டிவல் அட்வான்ஸ் தரப்படும்னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிச்சார்ல. அந்த பத்தாயிரத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் இருக்காம். அந்த பிடித்தம் போக கிடைக்கும் 8200 ரூவாவையும் நேரடியாக பணமாக பெற முடியாதாம். அந்த பணத்திற்காக ஊழியர்கள் விண்ணப்பம் நிரப்பி தந்ததும் அவர்களுக்கு ஒரு Rupay கார்டு கொடுப்பார்களாம். அந்த கார்டை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் கடைகளில் பொருளாக தான் வாங்கிக் கொள்ள முடியுமாம். வாங்கிய பிறகு மாதம் ஆயிரம் வீதம் பத்து மாதத்திற்கு பத்தாயிரத்தை பிடித்துக் கொள்வார்களாம்… ” என்று குறிப்படப்பட்டுள்ளது.

விசாரணை

இது குறித்து விசாரிக்க பண்டிகை கால முன்பணம் பற்றிய செய்திகளை நாங்கள் முதலில் இணையத்தில் தேடினோம் (விழா முன்பணம், அரசு ஊழியர்களுக்கு ரூ .10,000).

அவ்வாறு தேடியதில் அக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்ட டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரையை நாங்கள் கண்டோம். அதில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தில் நுகர்வினை அதிகரிக்க அனைத்து அரசு ஊழியர்களுக்கும் திருவிழா முன்பணமாக 10,000 ரூபாய் அறிவித்தார். இந்த முன்பணம் மத்திய ஊழியர்களுக்கு ரூபே கார்டாக வழங்கப்படும். அவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த அட்டையினை பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த முன்பணம் 10 தவணைகளில், முற்றிலும் வட்டி இல்லாமல் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

மாலைமலர் செய்தி அறிக்கை, “6-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும்,” என்று தகவலை உறுதிப்படுத்தியது.

நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இது குறித்த அலுவலக குறிப்பாணை இருப்பதைக் கண்டோம்.

“இந்த முன்பண திட்டத்தின் கீழ் ₹ 4,000 கோடியை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதே போன்று மாநில அரசுகளும் முன்பணம் வழங்கினால், மேலும் ₹8,000 கோடி வழங்கப்படும். 50 சதவிகித மாநிலங்கள் இதுபோன்று முன்பணம் வழங்குவதாக கருதினால், அதன் மதிப்பீடு 4,000 கோடி ரூபாய்,” என்று லைவ் மின்ட் கட்டுரை கூறுகிறது.

இந்த கூற்றினை சரிபார்க்க KSR&Co நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் டாக்டர் KS. ரவிச்சந்திரனை விஸ்வாஸ் செய்தி தொடர்பு கொண்டது. இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “பண்டிகை கால முன்பணத்தில் ஜிஎஸ்டி வரி எடுக்கப்பட மாட்டாது. பொருட்கள் வாங்கப்பட்டால், அந்த பொருட்களைப் பொறுத்து ஜிஎஸ்டி எடுக்கப்படும். திட்டத்தின் வடிவமைப்பிலிருந்து, மக்கள் செலவழிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என்பது தெளிவாகிறது,” என்றார்.

निष्कर्ष: வைரல் செய்தி தெளிவற்றது. அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு ₹ 10,000 பண்டிகை கால முன்பணம் அறிவித்துள்ளது என்பதும் , இது ரூபே அட்டை மூலம் மட்டுமே செலவழிக்கப்படலாம் மற்றும் அது தவணைகளில் வசூலிக்கப்படுகிறது என்பதும் உண்மைதான். ஆனால் பண்டிகை கால முன்பணத்தில் 18 சதவீத ஜிஎஸ்டி பிடித்தம் குறித்த கூற்று தவறானது.

  • Claim Review : மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் பெஸ்டிவல் அட்வான்ஸ் தரப்படும்னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிச்சார்ல. அந்த பத்தாயிரத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் இருக்காம். அந்த பிடித்தம் போக கிடைக்கும் 8200 ரூவாவையும் நேரடியாக பணமாக பெற முடியாதாம். அந்த பணத்திற்காக ஊழியர்கள் விண்ணப்பம் நிரப்பி தந்ததும் அவர்களுக்கு ஒரு Rupay கார்டு கொடுப்பார்களாம். அந்த கார்டை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் கடைகளில் பொருளாக தான் வாங்கிக் கொள்ள முடியுமாம். வாங்கிய பிறகு மாதம் ஆயிரம் வீதம் பத்து மாதத்திற்கு பத்தாயிரத்தை பிடித்துக் கொள்வார்களாம்
  • Claimed By : வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி
  • Fact Check : Misleading
Misleading
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later