
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஏர்டெல் 1 மாதத்திற்கு 200 ஜிபி இணையத்தை இலவசமாக வழங்குவதாக ஒரு வைரல் பதிவு கூறுகிறது. இந்த இடுகையுடன், ஒரு இணைப்பு ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த இணைப்பு தவறானது என்பதையும், இது ஒரு மோசடி வலைத்தளத்திற்கு வழிவகுக்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். மேலும் இந்த வைரல் இடுகையில் குறிப்பிட்டுள்ள எந்தவொரு சலுகையையும் தாங்கள் வெளியிடவில்லை என்பதையும் ஏர்டெல் நிறுவனம் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
கூற்று
உண்மை சரிபார்ப்பிற்காக நமது வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியாக நம்மிடையே வந்தடைந்த ஒரு இடுகை, ஏர்டெல் 1 மாதத்திற்கு 200 ஜிபி இணையத்தை இலவசமாக வழங்குவதாக ஒரு இணைப்புடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விசாரணை
அந்த இடுகையில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நாங்கள் எங்கள் விசாரணையைத் துவங்கினோம். முதலில் நமது எண்ணை உள்ளிட்டு, அதனை உறுதிபடுத்திய அந்த தளம், அதைத் தொடர்ந்து பின்வரும் செயல்களைச் செய்ய அறிவுறுத்தியது.
ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் airtel.in அல்லது airtel.com என்பதேயாகும். இந்த இணையதளங்கள் இந்த வைரல் இடுகையில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், இது போன்ற சலுகைகளைப் பெற, 20 நண்பர்கள் அல்லது 3 குழுக்களுக்கு வாட்ஸ்அப்பில் இந்த சலுகையை பகிருங்கள் என ஏர்டெல் ஒருபோதும் பயனர்களிடம் வேண்டுகோள் வைப்பதில்லை.
ஏர்டெல்லின் சமூக ஊடக கணக்குகளிலும், மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், 200 ஜிபி இலவச இணைய சலுகை அறிவிப்பு குறித்து நாங்கள் தேடினோம். ஆனால் அத்தகைய சலுகை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹூயிஸ் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளம் குறித்து நாங்கள் தேடியதில், இந்த வலைத்தளம் ஆகஸ்ட் 2020 இல் உருவாக்கப்பட்டது என்பதையும், இது ஏர்டெல்லுக்கு சொந்தமானது அல்ல என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
இது குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை அதிகாரி படாலுடன் நாங்கள் பேசினோம். ஏர்டெல் தற்போது 200 ஜிபி இணையத்தை இலவசமாக வழங்கவில்லை என்பதையும், வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளமும் தவறானது என்பதையும் அவர் நமக்கு உறுதிப்படுத்தினார்.
निष्कर्ष: இல்லை, ஏர்டெல் 1 மாதத்திற்கு 200 ஜிபி இணையத்தை இலவசமாக வழங்கவில்லை. மேலும், வைரல் இடுகையில் கொடுக்கப்பட்ட வலைத்தளம் ஒரு மோசடி வலைதளம்.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.