X

உண்மை சரிபார்ப்பு: ராகுல் காந்தியின் திருத்தப்பட்ட புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: October 19, 2020

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ராகுல் காந்தி ஒரு இருக்கையில் அமர்ந்தபடி தனது கையை ஒரு ஸ்டாண்ட்டில் பொருத்தபட்டிருக்கும் ரத்தம் சேகரிக்கும் குடுவையுடன் இணைத்து வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று அவர் ரத்தம் தானம் செய்வது போல் நடிக்கிறார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது. இரத்தம் தானம் செய்யப்படும்போது இரத்த சேகரிக்கும் குடுவை ஸ்டாண்டில் பொருத்தப்படுவதில்லை என்றும், அது வெறுமனே சம தளத்தில் வைக்கப்படுவதே முறை என்றும் அந்த வைரல் இடுகை குற்றம் சாட்டுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், ராகுல் காந்தியின் புகைப்படம் இரத்த தானம் அளிப்பது போல டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டுள்ளது (எடிட் செய்யப்பட்டுள்ளது) என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

கூற்று

பேஸ்புக் பயனர் அபிநவ் பரத்வாஜ், ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு குழாய் வழியாக ஸ்டாண்டிலிருக்கும் ரத்த குடுவையுடன் தன் கையினை இணைத்துள்ள ராகுல் காந்தியின் புகைப்படத்தை பகிர்ந்து, “இதுபோன்ற இரத்த தானத்தை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?… இது இரத்த தானம் செய்வதற்கான புதிய வழி…” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் முதலில் இந்த படத்தின் ஸ்கிரீன் ஷாட்டை கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் 16 மார்ச் 2014 அன்று thehindu.com இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இந்த புகைப்படத்தை நாங்கள் கண்டோம். அந்த உண்மையான புகைப்படத்தில் சலைன் ஸ்டாண்டோ, இரத்த சேகரிக்கும் குடுவையோ இல்லை.

இதே புகைப்படத்தினை outlookindia.com மற்றும் பஞ்சாப் கேசரி செய்திகளிலும் ரத்த தானம் வழங்குகின்ற கட்டமைப்பு இல்லாமல் எங்களால் காண முடிந்தது.

இந்த கூற்றை சரிபார்க்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சீவ் சிங்கை தொடர்பு கொண்டோம். “இந்த வைரல் புகைப்படம் திருத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 4,999 நண்பர்கள் இருப்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ராகுல் காந்தியின் புகைப்படம் டிஜிட்டல் முறையில் ரத்த சேகரிக்கும் குடுவை மற்றும் ஸ்டாண்டுடன் திருத்தப்பட்டுள்ளது.

  • Claim Review : இதுபோன்ற இரத்த தானத்தை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?… இது இரத்த தானம் செய்வதற்கான புதிய வழி
  • Claimed By : பேஸ்புக் பயனர் அபிநவ் பரத்வாஜ்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later