
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் தேர்தல் அறிக்கையில் இலவச கோவிட் தடுப்பூசியை அறிவித்ததை தொடர்ந்து, பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு கோவிட் தடுப்பூசி இலவசமாக கிடைக்காது என்ற கூற்றுடன் ஒரு வைரல் பதிவு பகிரப்பட்டு வருகிறது.
இந்த கூற்று தெளிவற்றது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசியை மத்திய அமைச்சர் அறிவித்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நமக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.
கூற்று
பீகாருக்கு இலவச கோவிட் தடுப்பூசிகளை வழங்கப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த சிறிது நேரத்திலேயே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு இடுகையில், “வாக்களிக்கவில்லை என்றால், தடுப்பூசி இல்லையா?… பாஜகவுக்கு வாக்களிப்பவர்களுக்கு மட்டுமே இவர்கள் இலவச தடுப்பூசி வழங்குவார்கள். அவ்வாறு வாக்களிக்காதவர்கள், தடுப்பூசிகளை பெற மாட்டார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
வேறு பல பயனர்களும் தங்களின் பேஸ்புக் இடுகைகளில் இதே போன்ற கூற்றுகளை பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க பாஜகவின் பீகார் தேர்தல் அறிக்கை பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம்.
இந்தத் தேடலில் டைனிக் ஜாக்ரானில் கட்டுரையினை கண்டோம். அதில், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அக்டோபர் 22, வியாழக்கிழமை பாட்னாவில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் … கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தி பெரிய அளவில் தொடங்கியதும், அது பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பாகும். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாட்னாவில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, இந்த அறிவிப்பையும் வெளியிட்டார், ” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில் இலவச கோவிட் தடுப்பூசி வாக்குறுதி குறித்து சீதாராமன் ஒரு நிலைப்பாட்டை வெளிபடுத்தியுள்ளார். “இந்த தொற்றுநோயை அரசியல் ஆதாயங்களுக்காக ஆளுங்கட்சி பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது குறித்து பாஜகவின் மூத்த தலைவரான சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு மட்டுமே. பதவிக்கு வந்தபின்னர் ஒரு கட்சி என்ன செய்ய விரும்புகிறது என்பதை அறிவிக்க முடியும்,” என்று கூறியதாக 24 அக்டோபர் அன்று டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கூறுகிறது.
இந்த கூற்றினை சரிபார்க்க பாஜக செய்தித் தொடர்பாளர் தாஜிந்தர் பால் சிங் பாகாவை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், கோவிட் தடுப்பூசிகளுக்கும், வாக்களிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் “மாநில பாஜக தலைவராக சீதாராமன் ஜி இருப்பதனால் இந்த அறிவிப்பினை அறிவித்திருந்தார். இருப்பினும், அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசியை வழங்கப் போவதாக மத்திய அமைச்சர் இன்று அறிவித்திருக்கிறார், ” என்று கூறினார்.
ஜாக்ரான் ஜோஷில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி அறிவித்ததை காட்டுகிறது.
இந்த இடுகையை பகிர்ந்த Unoffical Kanhaiya Kumar என்ற பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்ததில், இந்த பக்கதிற்கு 1,59,493 பின்தொடர்பவர்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: வைரல் இடுகை தெளிவற்றது. அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசியை வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவித்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் நமக்குத் தெளிவுபடுத்தி உள்ளார்.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.