X

உண்மை சரிபார்ப்பு: நீரஜ் சோப்ராவின் புகைப்படம் குறித்து ராகுல் காந்தி எதுவும் டுவீட் செய்யவில்லை, வைரல் பதிவு போலியானது.

விஷ்வாஸ் நியூஸ் இன் புலனாய்வில் இந்த வைரல் டுவீட் போலியானது என்பது தெரியவந்தது. இந்த போலியான டுவீட் ராகுல் காந்திக்கு எதிராக பரப்புரை செய்யும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • By Vishvas News
  • Updated: August 24, 2021

விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்பில் ஒரு போலியான டுவீட் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராகுல் காந்தி நீரஜ் சோப்ரா குறித்து டுவீட் செய்திருப்பதாக கிளைம் செய்யப்படுகிறது. விஷ்வாஸ் நியூஸ் இன் புலனாய்வில் அந்த டுவீட் போலியானது என்பது தெரிகிறது. இந்த டுவீட் பொய்யாக ராகுல் காந்தியின் பெயரில் உள்ளது.

கிளைம்

ஃபேஸ்புக் பயனர் கங்கா பையா ஹிந்து ராகுல் காந்தியின் பெயரில் போலியான டுவீட் ஒன்றை ஆகஸ்ட் 10 அன்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்: அது இப்போது எவ்வாறு அழைக்கப்படும்?

அந்த டுவீட்டில் ராகுல் காந்தியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இவ்வாறு எழுதியிருந்தது: “முதலாவதாக வந்தும் இரண்டாவது நிலையில் நிற்பது நியாயமா? பதில் சொல்லுங்கள் மோடி ஜி.”

இந்த ஃபேஸ்புக் பதிவின் ஆர்ச்சிவ்டு பதிப்பை இங்கே காணலாம்.

புலனாய்வு

விஷ்வாஸ் நியூஸ், ராகுல் காந்தியின் சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் ஹேன்டிலை ஸ்கேன் செய்வதன் மூலம் தன் புலனாய்வைத் தொடங்கியது. இங்கு அத்தகைய வைரல் டுவீட் எதையும் நாங்கள் காணவில்லை.

வைரல் டுவீட்டில் ஆகஸ்ட் 5 என்கிற தேதி காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 அன்று ராகுல் காந்தி ஒரே ஒரு டுவீட் ஒலிம்பிக்ஸ் குறித்து செய்திருப்பதை நாங்கள் கண்டோம், அதில் அவர் ரவி தாஹியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா ஒலிம்பிகஸ் தங்கம் வென்றது ஆகஸ்டு 7, ஆனால் அந்த வைரல் டுவீட்டில் எழுதியிருக்கும் தேதியானது ஆகஸ்ட் 5.

விஷ்வாஸ் நியூஸ், காங்கிரஸின் ஊடகப் பிரிவின் தேசியச் செயலாளரும் பொறுப்பாளர்களில் ஒருவருமான பிரணவ் ஜாவை தொடர்பு கொண்டது. அவரும் அந்த வைரல் டுவீட் போலியானது என்பதைக் கூறினார்.

இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் கங்கா பையா ஹிந்துவின் புரொஃபைலை நாங்கள் ஆராய்ந்தோம். அந்த பயனர் 200க்கும் அதிகமான நண்பர்களை கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் இன் புலனாய்வில் இந்த வைரல் டுவீட் போலியானது என்பது தெரியவந்தது. இந்த போலியான டுவீட் ராகுல் காந்திக்கு எதிராக பரப்புரை செய்யும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later