X

உண்மை சரிபார்ப்பு: வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் கூறவில்லை, வைரல் கூற்று தவறானது

  • By Vishvas News
  • Updated: January 10, 2021

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையே, தமிழ் மொழியில் இயங்கிவரும் செய்தி சேனலான புதிய தலைமுறையின் பெயரினைக் கொண்டுள்ள புகைப்படம் ஒன்று, “பாஜக ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,” என்று மாநில பாஜக தலைவர் எல் முருகன் குறிப்பிடத்தாகக் கூறுகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படம் திருத்தப்பட்டுள்ளதாகக் கூறி, புதியதலைமுறையின் இணைய குழு இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளது.

கூற்று

பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று தமிழகத்தின் மாநில பாஜக தலைவர் எல் முருகன் கூறியதாக புதியதலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு புகைப்படம் கூறுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

கடந்த சனிக்கிழமை தர்மபுரியில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும், மக்கள் தங்களது முந்தைய கட்சி ஆதரவுகளையெல்லாம் கைவிட்டு வருதாகவும் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரை கூறுகிறது.

வேளாண் சட்டங்கள் குறித்த தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக முருகன் திமுக மீது அவர் குற்றம் சாட்டினார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுக்கு மத்தியில் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்கள் குறித்த தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறார். இதை விவசாயிகள் உணர வேண்டும்,” என்று கூறினார்.

இதுவே அவரைப் பற்றிய மிகச் சமீபத்திய செய்தியாக இருந்தாலும், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் புதியதலைமுறை இணைய குழுவின் தலைவர் மனோஜ் பிரபாகரை தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இது தவறானது. இதுபோன்ற எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இந்த புகைப்படம் திருத்தப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் கரூரில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்தப் புகைப்படம் திருத்தப்பட்டு தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

  • Claim Review : பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று தமிழகத்தின் மாநில பாஜக தலைவர் எல் முருகன் கூறியதாக புதியதலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு புகைப்படம் கூறுகிறது.
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later