
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). புது தில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறையின்போது, இந்த நிராயுதபாணியான விவசாயி லத்தியால் தாக்கப்பட்டார் என்ற கூற்றுடன், முதுகில் காயங்களுடன் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. ஒரு பழைய சம்பவத்தின் புகைப்படம், சமீபத்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையிலிருந்து எடுக்கப்பட்டதாக இப்போது வைரலாகியுள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் விக்ரம் சுவாமி, நிராயுதபாணியான விவசாயி லத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறி, முதுகில் சிவந்த காய அடையாளங்களுடன் ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
ட்விட்டரிலும் இதே போன்ற கூற்று இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருப்பதை எங்களால் காண முடிந்தது.
விசாரணை
குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் புதன்கிழமை பல எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்து உள்ளனர். தில்லி காவல்துறை பதிவு செய்த FIR ஒன்றில் நேற்றைய கலவரத்திற்கு PKU செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட், சத்னம் சிங் பன்னு, தர்ஷன் பால் சிங், மேதா பட்கர் மற்றும் யோகேந்திர யாதவ் உட்பட 37 விவசாயிகள் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பொறுப்பேற்றனர். டிராக்டர் பேரணிக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட வழியைப் பின்பற்றாதது மற்றும் குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைப்பதற்காக விவசாயிகள் அணிவகுத்துச் சென்றது போன்ற வன்முறைச் செயல்களை FIR மேற்கோளிட்டுள்ளது என்று டைம்ஸ்நியூஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை தெரிவிக்கின்றது.
வைரல் கூற்றில் கூறப்பட்டுள்ளபடி காவல்துறையினரால் விவசாயிகள் தாக்கப்பட்டதைப் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தும் உண்மையான செய்தி அறிக்கை எதையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக டெல்லி டெய்னிக் ஜாக்ரானின் குற்றப்பிரிவு நிருபர் ராகேஷ் சிங்கை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். டெல்லி காவல்துறையின் கூடுதல் மக்கள் தொடர்பு அதிகாரி ACP அனில் மிட்டல் மேற்கோளிட்டு பேசிய அவர், “இந்த புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. டிராக்டர் பேரணி வன்முறையின் போது டெல்லி போலீசார் இது போன்று யாரையும் அடிக்கவில்லை. இந்த வதந்தியின் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று கூறினார்.
கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, இந்தப் புகைப்படத்தின் மூலத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், 17 ஜூன் 2019 அன்று எழுதப்பட்ட ஒரு ட்வீட்டில் இதை நாங்கள் கண்டோம்.“முகர்ஜி நகர் காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு சீக்கிய ஆட்டோ டிரைவரும் அவரது மகனும் கொடூரமாக தாக்கப்பட்டனர்…” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
முகர்ஜி நகரில் 2019 ல் நடந்த காவல்துறையினரின் கொடூர சம்பவத்தை தெளிவுபடுத்தும் பல செய்தி கட்டுரைகளை நாங்கள் கண்டோம்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்தகொண்ட பேஸ்புக் பயனர் கணக்கினை ஆராய்ந்ததில், பிகானேரில் வசிப்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 2,062 பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. முகர்ஜி நகரில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பழைய சம்பவத்தின் புகைப்படம் இப்போது சமீபத்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையின்போது எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.