
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தற்போது நாட்டின் முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கக்கூடிய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க, தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியை குற்றம் சாட்டும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த காணொலி பழையது என்பதும், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின்போது எடுக்கப்படவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
பேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் காணொலி, தினசரி கூலி தொழிலாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பதாக குற்றம் சாட்டுகிறது. இந்த காணொலியை தனது இடுகையில் பகிர்ந்துள்ள பயனர், ஆம் ஆத்மி கட்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, “டில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடக்கும் நாடகத்துக்கு ரூ.350/- கூலியாமே,” என்று எழுதியுள்ளார்.
இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த வைரல் காணொலியில் யாரும் குளிர்கால உடைகளையோ, முகமூடகளையோ அணியாமல் இருப்பதை நாம் காண முடிகிறது. இந்த காணொலி பேரணியைப் பற்றி தெரிவிக்கிறது, ஆனால் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு பேரணி அல்ல.
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், டெல்லியின் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா 26 மார்ச் 2018 அன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் இந்த காணொலி பதிவேற்றப்பட்டு, கெஜ்ரிவாலின் ஹரியானா பேரணி என குறிப்படப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
ஆஜ்தக் மற்றும் இன்கபார்.காமிலும், இந்த காணொலி, ஆம் ஆத்மி கட்சியின் ஹிசார் பேரணியின்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் செய்தி அறிக்கைகள் பதிவேற்றப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. மேலும் போராட்டக்காரர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஆர்த்தியும், தனது ட்வீட்டின் மூலம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வைரல் கூற்றினைச் சரிபார்க்க, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுள் ஒருவரான தீபக் பாஜ்பாயை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய அவர், “ இந்த வைரல் காணொலி பழையது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அப்போதிருந்தே நாங்கள் இதுபோன்ற கூற்றுக்களை மறுத்து வருகிறோம்,” என்று கூறினார்.
இந்த வைரல் கூற்றை பகிர்ந்துகொண்ட பேஸ்புக் பயனரான ஷோபா ஜோஷியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோராவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தவறானது. இந்த வைரல் காணொலி பழையது மற்றும் அது தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்ல என்பது உண்மையாகும்.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.