
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லீம் அல்லாத பெண்ணை காதலிப்பது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய கிரிமினல் குற்றம் என்று கூறும் ஒரு இடுகையை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. உ.பி. மாநில சட்ட ஆணையம், இந்த வைரல் இடுகை, சட்டத்தை தவறான முறையில் சித்தரிக்கின்றது என்று கூறி இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது.
கூற்று
ட்விட்டரில் பல பயனர்களாலும் பகிரப்பட்டுள்ள ஒரு வைரல் இடுகையில், “ உ.பி. அமைச்சரவை ‘லவ் ஜிஹாத்’ சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணை காதலிப்பது, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுதரக்கூடிய குற்றமாகும். இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகம் பயன்படுத்தப்படும்… ” என்று கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக்கிலும் இதே கூற்று புகைப்படங்களுடன் பகிரப்படுவதை எங்களால் காண முடிந்தது.
விசாரணை
உ.பி.யில் நடைபெறும் சட்டவிரோத மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்திற்கு உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த நவம்பர் 24 ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இச்சட்டத்தினால் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது குறித்து ஜாக்ரான் ஜோஷ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், “திருமணத்தின் பெயரில் கட்டாய மத மாற்றங்கள் நடைபெறுவது அதிகரித்து வருவதன் காரணமாக இந்த சட்டம் அவசியமாகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்தால், 1 முதல் ஐந்து ஆண்டு சிறை மற்றும்15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இளம் சிறுமியர், எஸ்.சி., – எஸ்.டி. பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், 3 – 10 ஆண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால், அதில் ஈடுபடும் அமைப்புக்கு, 3 – 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த அமைப்பின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.
அதே நேரத்தில், ஒரு ஆணோ/ பெண்ணோ திருமணத்துக்குப் பிறகு சுயவிருப்பத்தோடு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், அதற்கு மாவட்ட மாஜிஸ்திரேடிடம், இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், அவருக்கு குறைந்தபட்ச அபராதமாய் 10 ஆயிரம் ரூபாயும், 6- 36 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
இந்த புதிய சட்டம் குறித்து மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள நாங்கள் உத்தரபிரதேச சட்டத்துறையை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையத்தின் தலைவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான ஆதித்ய நாத் மிட்டல், இந்த தவறான கூற்றுக்களை மறுத்தார். மேலும் “சட்டவிரோத மத மதமாற்ற சட்டம் என்பது கட்டாயப்படுத்துவதன் மூலமாகவும், தவறான விளக்கங்கள் தருவதன் மூலமாகவும், செல்வாக்கினை தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் நடைபெறும் சட்டவிரோத மத மாற்றங்களை தடுப்பதாகும். இது சுயவிருப்பத்தோடு மத மாற்றம் செய்வதை அனுமதிக்கிறது,”என்று கூறினார். சட்டவிரோதமாக மத மாற்றங்கள் செய்தால் 3-10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அளிக்கக்கூடிய இந்த சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு தண்டனை வகைகளையும் அவர் நமக்கு விளக்கினார்.
நாங்கள் அழைத்ததில் எங்களிடம் பேசிய உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையத்தின் செயலாளர் சப்னா திரிபாதியும், இந்த சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானது அல்ல. சட்டவிரோத மத மாற்றங்களை தடைசெய்கிறது என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரான ஷாஸ் தாரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் டெஹ்ராடூனில் வசிப்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 301 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான அவசர சட்டம் கட்டாய மத மாற்றங்களையே தடை செய்கிறது. இது மாவட்ட மாஜிஸ்திரேடிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்னறிவிப்பு செய்து, சுய விருப்பத்தோடு செய்யப்படும் மத மாற்றங்களை அனுமதிக்கிறது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.