X

உண்மை சரிபார்ப்பு: புகைப்படத்தில் இருக்கும் நபர் யோகி ஆதித்யநாத்தின் தமையனார் இல்லை. வைரல் பதிவு போலி

இந்த வைரல் பதிவைப்பற்றி விஷ்வாஸ் நியூஸ் நடத்திய புலன் விசாரணையில், புகைப்படத்தில் எந்த நபரின் முகம் தெரிகிறதோ, அவர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் அல்ல என்று தெரிய வந்தது. வைரல் பதிவும் அதில் இருந்த உரிமைக் கோரிக்கை வாக்கியமும் போலி.

  • By Vishvas News
  • Updated: October 8, 2021

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகத்தில் உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் காட்சியளிக்கும் ஒரு நபரின் புகைப்படம் வைரல் ஆகியிருந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனர, அது யோகி ஆதித்யநாத்தின் தமையனாரின் புகைப்படம் என்றும் அவர் ஒரு தேநீர் கடை நடத்தி வருகிறார் என்றும் உரிமை கோரியிருந்தார். இதைப்பற்றி விஷ்வாஸ் நியூஸ் விசாரணை செய்தபோது அந்தப் புகைப்படத்தில் யாருடைய உருவம் தெரிகிறதோ, அவர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் அல்ல என்று எங்களுக்குத் தெரிய வந்தது. வைரல் பதிவின் கூட இருக்கும் உரிமைக் கோரிக்கையும் போலி. யோகிஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை நடத்தவில்லை  இதற்கு முன்பும் கூட ஒரு நபரின் புகைப்படம் ஏற்கனவே சமூக ஊடகங்களில்  வைரல் ஆக இருந்தது மற்றும் அதை பகிர்ந்த பயனரும் இதே போன்று உரிமைக் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த முறையும் விஷ்வாஸ் நியூஸ் உண்மை சரிபார்ப்பு செய்திருந்தது  அந்த உண்மை சரிபார்ப்பை இங்கே படிக்கலாம்.

இந்த வைரல் பதிவில் என்ன உள்ளது?

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த முகநூல் பயனர் எழுதினார், “யோகிஜியின் தமையனார் இப்போதும் கூட ஒரு சிறிய தேநீர் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார். தயவு செய்து அவரை, மாயா, மம்தா, அகிலேஷ், லாலு, சிதம்பரம் மற்றும் சோனியாவின் குடும்பத்தோடு சேர்த்து எடை போட்டுப் பாருங்கள்”

பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பாருங்கள்.

புலன் விசாரணை

எங்களது புலன் விசாரணையைத் தொடங்கி, முதலில் நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் வைரல் ஆகியிருந்த புகைப்படத்தின் உண்மையான ஆதாரத்தை தேட ஆரம்பித்தோம். இந்தத் தேடலில் எங்களுக்கு இந்தப் புகைப்படம் எந்த வலைதளத்திலும் கிடைக்கவில்லை.

புலன் விசாரணையை நாங்கள் மேலே கொண்டு சென்றபோது நாங்கள் கூகுள் ஓபன் தேடல் மூலம், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களின் சகோதரர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தோம்.

உண்மையில், முதலில் நாங்கள் theancestory என்ற பெயரில் உள்ள ஒரு வலைதளத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களின் குடும்ப விவரங்கள் கிடைத்தன. அதில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். எல்லோருக்கும் மூத்த சகோதரர் மன்வேந்தர் மோகன் ஒரு விவசாயி, மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர், அவர்களில் ஷைலேந்திர மோகன் பிஷ்ட் ராணுவத்தில் உள்ளார், மேலும் எல்லோருக்கும் சிறிய சகோதரர் மகேந்திர சிங் பிஷ்ட் பத்திரிக்கையாளர் ஆவார்.

செய்திகளைத் தேடி செல்லும் போது, எங்கள் கைகளில் விழிப்புணர்வு பற்றி வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தி அகப்பட்டது.. அதில் யோகி ஆதித்யநாத் அவர்களின் இளைய சகோதரர் ஷைலேந்திர மோகன் பாரத ராணுவத்தில் உள்ளார் என்று சொல்லப்பட்டிருந்தது.

நாங்கள் எங்கள் புலன்விசாரணையை மேலே கொண்டு சென்றோம். ஏபிசி நியூசின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் யோகியின் குடும்பத்தினரிடன் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் கிடைத்தது, அதில் அவருடைய மூத்த மற்றும் எல்லோருக்கும் சிறிய சகோதரர்களைக் காண முடிந்தது  அதிலும் கூட வைரல் ஆகியிருக்கும் நபரின் புகைப்படம் காணப்படவில்லை.

விஷ்வாஸ் நியூஸ் உறுதி படுத்துவதற்காக, யோகி ஆதித்யநாத்தின் எல்லோருக்கும் சிறிய சகோதரர் மகேந்திர சிங்-உடன் தொடர்பு கொண்டு வைரலாயிருக்கும் பதிவை அவருடன் பகிர்ந்து கொண்டோம். படத்தில் இருப்பவர் அவருடைய சகோதரர் இல்லை என்று அவர் எங்களிடம் உறுதி படுத்தினார்.. வைரல் பதிவுடன் என்ன உரிமைக் கோரிக்கை வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தனவோ அவையும் தவறானவை.

இப்போது மீதமிருப்பது இந்த போலியான பதிவை பகிர்ந்த முகநூல் பயனர் மீரா சிங்கைப் பற்றிய சமூக அலசல். பீகாரில் பாட்னாவில் வசிக்கும் இந்த பயனரை 35,874 பேர் தொடர்கிறார்கள் என்று நாங்கள் கண்டுபிடித்தோம். இந்தப் பயனர் முகநூலில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டில் இருக்கிறார்.

निष्कर्ष: இந்த வைரல் பதிவைப்பற்றி விஷ்வாஸ் நியூஸ் நடத்திய புலன் விசாரணையில், புகைப்படத்தில் எந்த நபரின் முகம் தெரிகிறதோ, அவர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் அல்ல என்று தெரிய வந்தது. வைரல் பதிவும் அதில் இருந்த உரிமைக் கோரிக்கை வாக்கியமும் போலி.

  • Claim Review : योगी जी के बड़े भाई अभी भी एक छोटी सी चाय-स्टॉल चलाते हैँ! जरा इनकी तुलना कीजिये माया, मोमता, अखिलेश, लालू, चिदंबरम,और सोनिया के खानदानों से....
  • Claimed By : Meera Singh
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later