X

உண்மை சரிபார்ப்பு: ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கினை நேரலையாக யோகி ஆதித்யநாத் காணவில்லை, வைரல் கூற்று தவறானது

  • By Vishvas News
  • Updated: October 2, 2020

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் குற்றச் சம்பவம் நடைபெற்றதிலிருந்து, அச்சம்பவம் தொடர்பான பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒன்றாக ஹத்ராஸ் சம்பவத்தினையும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தினையும் தொடர்புப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மடிக்கணினி போன்ற ஒரு டிஜிட்டல் திரையினை முதல்வர் ஆதித்யநாத் பார்ப்பது போல இருக்கும் புகைப்படம் ஒன்று, ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கின் நேரலையினை அவர் காண்கிறார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடனான முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது திருத்தம் (எடிட்டிங்) செய்யப்பட்டு, தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டு வருகிறது என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

கூற்று

‘ஆபன் மகாராஜ்கஞ்ச்’ என்ற பேஸ்புக் பக்கம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்தப் புகைப்படத்தை பதிவேற்றி, “ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உடலினை உ.பி. காவல்துறையினர் எரிப்பதினை முதல்வர் நேரலையில் கண்டார்,” என்று எழுதியுள்ளது. அந்தப் பதிவினை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க அதிகாரப்பூர்வ செய்தித்தாள்களின் இணைய பதிப்புகளில் ஹத்ராஸ் தொடர்பான செய்திகளைத் தேடியதில், இதன் உண்மையான புகைப்படத்தை டைனிக் ஜாக்ரானின் ஹத்ராஸ் பதிப்பில் நம்மால் காண முடிந்தது. அந்தச் செய்தி குறிப்பின் தலைப்பின் மூலம் கடந்த புதன்கிழமை லக்னோவில் முதலமைச்சர் யோகி அவர்கள் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காணொளி அழைப்புகளை மேற்கொண்டு பேசினார் என்பதை எங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும் உ.பி. அரசின் தகவல்துறை இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.

உ.பி. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை ஆராய்ந்ததில், முதல்வர் அலுவலகத்தின் (@CMOfficeUP) ஒரு ட்வீட்டில் இந்தப் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அதில் “முதல்வர் ஸ்ரீ @myogiadityanath ஜி ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடினார். அந்த உரையாடலின் போது பாதிக்கப்பட்டவரின் தந்தை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அறிந்திட முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யூஞ்சய் குமாரை தொடர்பு கொண்டோம். அப்போது உண்மையான புகைப்படத்தினை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர், ​​இந்த வைரல் படம் (எடிட்டிங் செய்யப்பட்டது) திருத்தப்பட்டது என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், அப்பக்கம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டிருப்பது தெரியவந்தது.

निष्कर्ष: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உடனான முதல்வரின் உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது எடிட்டிங் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.

  • Claim Review : ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உடலினை உ.பி. காவல்துறையினர் எரிப்பதினை முதல்வர் நேரலையில் கண்டார்
  • Claimed By : பேஸ்புக் பக்கம் ஆபன் மகாராஜ்கஞ்ச்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later