X

உண்மை சரிபார்ப்பு: செலன்ஸ்கி-புடின் இவர்களின் பழைய பகை என்று இரண்டு வேறுபட்ட காட்சிகளின் துணுக்குகளை இணைத்து செய்யப்பட்ட காணொளி

இந்த க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன்விசாரணையில் கண்டுபிடித்தது. இந்தக் காணொளி திருத்தப்பட்டது. உண்மையான காணொளியில் உள்ள நிகழ்ச்சியில் புடின் இருக்கவில்லை.

  • By Vishvas News
  • Updated: April 15, 2022

விஷ்வாஸ் நியூஸ் (புது டெல்லி): உக்ரைய்ன்-ரஷ்யா போரின் இடையில், மேடையில் ஒரு நபர் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவது போன்று காட்டும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பதிவு க்ளைம் செய்கிறது “இந்தக் காணொளியில் உள்ள மனிதர் உக்ரைய்ன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, வெகு நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடினை கேலி செய்தார். அதற்குப் பிறகு பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டினர், ஆனால் புடின் கை தட்டவில்லை, இப்போது அவர் தன் பழி தீர்க்கிறார்.” விஷ்வாஸ் நியூஸ் தனது புலன்விசாரணையில் இந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது. இந்தக் காணொளி திருத்தப்பட்டது. உண்மைக் காணொளியில் உள்ள காட்சி செயலில் புடின் இருக்கவில்லை.

இந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

ஃபேஸ்புக் பயனர் Akioyamen Josephine (archive) அவருடைய ஃபேஸ்புக் தற்குறிப்பில் இந்தப் படத்தை இந்தத் தலைப்புடன் பதிவிட்டார் , “சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இன்று, ஒரு ரஷ்ய நகைச்சுவை நிகழ்ச்சியில் பார்வையாளர்களோடு புடின் இருந்தபோது அவரைப் பற்றி செலன்ஸ்கி ஒரு கிண்டல் அடித்தார். புடின் அதைக் கைதட்டிப் பாராட்டவில்லை. இன்று, தீராச் சினமுடைய எதிரிகள்.”

புலன் விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவி கொண்டு இந்த காணொளியின் ஸ்க்ரீன் க்ராப்களைத் தேடியது. செலன்ஸ்கி நடத்திய இந்த நிகழ்ச்சிக் காணொளியை நாங்கள் கேவிஎன் என்ற ஒரு சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் கண்டுபிடித்தோம். இந்தக் காணொளி “கேவிஎன் மேஜர் லீக் 2002” என்ற தலைப்போடு மார்ச் 2012-இல் பகிரப்பட்டது. கேவிஎன் மேஜர் லீக் என்பது ரஷ்யாவின் ஒரு பிரபலமான நகைச்சுவைத் திறன் காட்சி. ஆனால் அந்த முழுக் காணொளியிலும் பார்வையாளர்களோடு புடின் அமர்ந்திருப்பது போன்ற துணுக்கை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

Geohistory-யின் செய்தியின்படி, செலன்ஸ்கி கேவிஎன்-இன் பல முக்கிய லீக்-களில் பங்கேற்றார். இருந்தும், இந்தக் காணொளியில் இருப்பவர் செலன்ஸ்கி என்று உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் செலன்ஸ்கியின் பழைய புகைப்படங்களோடு இந்த வைரல் காணொளியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவை இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த ஒற்றுமைகளை கீழ் உள்ள படத்தொகுப்பில் பார்க்கலாம்.

ரஷ்ய அதிபர் வ்ளாதிமிர் புடின் உள்ள துணுக்கிலிருந்து எடுத்த ஸ்க்ரீன் ஷாட்களை நாங்கள் தேடினோம். இந்தத் துணுக்கை 2013-இல் கேவிஎன்-ஆல் அப்லோட் செய்யப்பட இன்னொரு காணொளியில் கண்டிபிடித்தோம். அந்தக் காணொளி “கேவிஎன் பிரீமியர் லீக் டீம் – ஸ்பெஷல் ப்ராஜெக்ட் 2006” என்று தலைப்பிடப் பட்டிருந்தது. இந்தக் காணொளியில், இந்தத் துணுக்கு 1 நிமிடம் 9 வினாடிகள் என்ற இடைவெளியில் பார்க்கக் கிடைக்கும்.

https://youtu.be/S5xw_-wqGrM

இப்போது இந்த இரண்டு துணுக்குகளும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை, அவை இரண்டும் இணைக்கப்பட்டு இந்தத் துணுக்குகள் ஒரே காட்சியில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

விஷ்வாஸ் நியூஸ் இந்த விஷயத்தை உறுதி செய்து கொள்ள உக்ரெய்ன்-இன் உண்மை சரிபார்க்கும் குழுவை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டது அவர்களிடமிருந்து பதில் வந்தவுடன் அந்த செய்தி தெரிவிக்கப்படும்.

விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்த பயனரின் சமூக பின்புலத்தை சரிபார்த்தது. அகியோயாமேன் ஜோசஃபைன்-க்கு 8,272 பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

निष्कर्ष: இந்த க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று விஷ்வாஸ் நியூஸ் தன் புலன்விசாரணையில் கண்டுபிடித்தது. இந்தக் காணொளி திருத்தப்பட்டது. உண்மையான காணொளியில் உள்ள நிகழ்ச்சியில் புடின் இருக்கவில்லை.

  • Claim Review : சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இன்று, ஒரு ரஷ்ய நகைச்சுவை நிகழ்ச்சியில் பார்வையாளர்களோடு புடின் இருந்தபோது அவரைப் பற்றி செலன்ஸ்கி ஒரு கிண்டல் அடித்தார். புடின் அதைக் கைதட்டிப் பாராட்டவில்லை. இன்று, தீராச் சினமுடைய எதிரிகள்.”
  • Claimed By : அகியோயாமேன் ஜோசஃபைன்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion
மேலும் வாசிக்க

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later