X

உண்மை சரிபார்ப்பு: மு.க. ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக VK சசிகலா ட்வீட் செய்யவில்லை

  • By Vishvas News
  • Updated: February 24, 2021

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). VK சசிகலாவின் ட்விட்டர் கணக்கிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு வைரல் ட்வீட், திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பதாக கூறுகிறது.

இந்த ட்விட்டர் கணக்கு அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட கணக்கு அல்ல என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அ.ம.மு.க கட்சியின் செய்தித் தொடர்பாளர், இதுபோன்ற எந்த அறிக்கையையும் VK சசிகலா வெளியிடவில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.

கூற்று

திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாகக் கூறி VK சசிகலா (@sassikalaa2) என்பவரிடமிருந்து வெளியான ட்வீட்டின் புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த ட்வீட்டின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

“அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு (அதிமுக) மேலும் பதற்றமூட்டும் வகையில், அக்கட்சிலிருந்து வெளியேற்றப்பட்ட பொதுச் செயலாளரும், மறைந்த கட்சித் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளருமான VK சசிகலா, தொண்டர்களின் ஆரவாரத்துடன் சென்னை திரும்பினார்…தான் அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்ததோடு, எதிர்க்கட்சியான மு.க.ஸ்டாலினின் திமுக கட்சியினையும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க தொண்டர்கள் உறுதிகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்,” என்று பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு கட்டுரை கூறுகிறது.

VK சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னைக் குறிப்பிடுவது குறித்த செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டறிந்தாலும், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

VK சசிகலாவின் (@sassikalaa2) ட்விட்டர் கணக்கினை ஆராய்ந்ததில், அக்கணக்கின் சுயவிவரமும் மற்றும் நீல நிற டிக் இல்லாமையும் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. இக்கணக்கு சசிகலாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அல்ல என்பதை இதன் மூலம் நாங்கள் அறிந்துகொண்டோம்.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருண்குமார், “அவருக்கு (VK சசிகலா) ட்விட்டர் கணக்கு இல்லை. இந்த வைரல் பதிவுகள் தவறானவை,” என்று தெரிவித்தார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அந்த பயனருக்கு பேஸ்புக்கில் 4963 நண்பர்கள் இருப்பதும், அவர் தமிழ்நாட்டின் ராம்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மே 2016 முதல் பேஸ்புக்கில் உள்ளார் என்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. VK சசிகலாவுக்கு ட்விட்டர் கணக்கு இல்லை.

  • Claim Review : திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாகக் கூறி VK சசிகலா (@sassikalaa2) என்பவரிடமிருந்து வெளியான ட்வீட்
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later