X

உண்மை சரிபார்ப்பு: ரஷ்யாவில் எடுக்கப்பட்ட ஒரு மத நிகழ்வின் புகைப்படம் தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது

  • By Vishvas News
  • Updated: September 14, 2020

புது தில்லி (விஸ்வாஸ் குழு) கொரோனாவின் காரணமாக கடவுள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் சில சிலைகள் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதையும், அதனைச் சுற்றி சில நபர்கள் நிற்பதையும் நம்மால் காண முடிகிறது.

உண்மையைச் சரிபார்க்கும் சாட்பாட் மூலமாக (+91 95992 99372) விஸ்வாஸ் நியூஸை இந்தப் படம் வந்தடைந்தது. இது குறித்த விசாரணையில் இந்தக் கூற்று தெளிவற்றது என்பதும், ரஷ்யாவில் முன் எப்போதோ நடந்த ஒரு மத நிகழ்வின் பழைய புகைப்படம் கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

கூற்று

இந்தப் புகைப்படமும், அது தொடர்பான கூற்றும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் வேகமாய் பகிரப்பட்டு வருகின்றன. விக்ரம் குமார் என்ற பேஸ்புக் பயனர் இந்த கூற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த இடுகை காண இங்கே கிளிக் செய்யவும்.

விசாரணை

விஸ்வாஸ் நியூஸ் இந்தக் கூற்று தொடர்பான புகைப்படத்தினை யான்டெக்ஸ் பட தேடல் கருவியைப் (Yandex Image Search) பயன்படுத்தி தேடியது. தேடலின் முடிவில் அந்த புகைப்படத்தினை ஒத்த பல புகைப்படங்களை நம்மால் காண முடிந்தது. அதிலும் ஒரு புகைப்படம் நாம் தேடியே புகைப்படம் போலவே இருந்தது.

இந்தத் தேடலின் முடிவை மேலே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் காணலாம். கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று ரஷ்யாவின் சமூக வலைதளமான vk.com இல் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் அதே புகைப்படத்தினை நம்மால் காண முடிந்தது. விஷ்ணு-ரதா-தாஸ் மனகோவ் என்ற பயனர் கடந்த ஆண்டு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்த இடுகையை இங்கே காணலாம்.

மேலும் அந்த புகைப்படமும், அந்த காணொளியின் உள்ளடக்கமும் ஒன்றுபோல் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

அந்த காணொளியின் தலைப்பு ரஷ்ய மொழியில் இருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, விடுமுறையில் ஸ்ரீ பஞ்ச-தத்வாவின் தரிசனம் (2019-07-26 20-20) என கூகுள் மொழிபெயர்ப்பில் கிடைத்தது. உலகில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது 2019 டிசம்பரில் தான். இதன் மூலம் இந்தப் புகைப்படத்திற்கும், கொரோனா வைரஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற முடிவுக்கு எங்களால் வர முடிந்தது.

பேஸ்புக்கில் விஷ்ணு-ரதா-தாஸ் மனகோவின் சுயவிவரத்தையும் நாங்கள் கண்டறிந்தோம். அந்த சுயவிவரத்திலிருந்து அவர் இஸ்கானுடன் (ISKCON) தொடர்புடையவர் என்பதையும் அறிந்தோம். மேலும் இது குறித்து புதுடெல்லி இஸ்கான் தேசிய தகவல் தொடர்பு இயக்குனர் வ்ரிஜேந்திரநந்தன் தாஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என்று அவர் நமக்குத் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் ரஷ்யாவின் மஸ்கோவிலுள்ள இஸ்கான் கோயில் தலைவர் சாது பிரியா தாஸுடன் அவர் நம்மைத் தொடர்பில் இணைத்தார். இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த மத நிகழ்வான பஞ்ச் தத்வா பிரண் பிரதிஷ்டனின் படம் என்று அவர் நமக்குத் தெரிவித்தார். தவறான கூற்றுடன் இந்தப் படத்தை மக்கள் பகிரக்கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் விக்ரம் குமாரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், அவர் பீகார் மாநிலம் சீதாமாரியில் வசிப்பவர் என்பது தெரிய வந்தது.

निष्कर्ष: ரஷ்யாவில் முன் எப்போதோ நடந்த ஒரு மத நிகழ்வின் பழைய புகைப்படம் கொரோனா வைரஸுடன் தொடர்புபடுத்தப்பட்டு தெளிவற்ற கூற்றுக்களுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்திற்கும் கொரோனாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகில் கொரோனா நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நாளிற்கு நான்கு மாதங்கள் முன்னதாகவே இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது.

  • Claim Review : கடவுள் சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை செய்வதாக சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படம்
  • Claimed By : FB User Murugan Thirupathi Asari
  • Fact Check : Misleading
Misleading
    Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

தொடர்புடைய கட்டுரைகள்

Post saved! You can read it later