உண்மைச் சரிபார்ப்பு: தில்லி கல்வி அமைச்சர் ஆதிஷி, எம்சிடி பள்ளியை ஆய்வு செய்யும் காணொளி ஒன்று தவறான கூற்றுடன் பகிரப்பட்டது
- By Vishvas News
- Updated: April 27, 2023

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): பாழடைந்த பள்ளியை டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி மர்லேனா ஆய்வு செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், பள்ளியின் மோசமான நிலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தை ஆதிஷி விமர்சிப்பதைக் கேட்க முடிந்தது. இந்த பள்ளி டெல்லி அரசால் நடத்தப்படுவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆதிஷி “கவனக்குறைவாக உண்மையை அம்பலப்படுத்தியதாகவும்” வைரலான இந்த பதிவு கூறுகிறது.
ஆதிஷி மர்லேனா பார்வையிட்ட பள்ளி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (எம்சிடி) கட்டுப்பாட்டில் வருகிறது, மாறாக தில்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அல்ல என்பதால் இந்த கூற்று தவறாக வழிநடத்துகிறது என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்துள்ளது. 2022 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பிறகு, டெல்லியின் புதிய கல்வி அமைச்சர் ஆதிஷி கடந்த சில நாட்களாக நகராட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார்.
உரிமைகோரல்:
ஏப்ரல் 11, 2023 அன்று காணொளி ஒன்றை பகர்ந்து கொண்டு முகநூல் பயனர் அமித் ஷர்மா தலைப்பில் எழுதியதாவது, “இதுதான் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவால் உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த கல்வி மாதிரி, என்று குஜ்லிவாலா நாட்டிலும் உலகிலும் இதைப்பற்றி பெருமையாகக் கூறுகிறார், இப்போது புதிய கல்வி அமைச்சர் ஆதிஷி, அவர்களின் சொந்த கல்வி மாதிரியையே கிழித்து எறிகிறார்.”
இடுகைக்கான காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே அணுகலாம்.
விசாரணை:
வைரலான காணொளியின் உண்மைத்தன்மையை அறிய, நாங்கள் அது தொடர்பான முக்கிய வார்த்தைகளை கூகுளில் தேட ஆரம்பித்தோம். இதன் போது, ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த முழு காணொளியையும் நாங்கள் கண்டோம். இந்த காணொளியானது ஏப்ரல் 10, 2023 அன்று பதிவேற்றப்பட்டது. கொடுக்கப்பட்ட தகவலின்படி, டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி மர்லேனா மற்றும் டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் டெல்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள ஒரு பள்ளியை ஆய்வு செய்ய வஜிராபாத் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அந்த காணொளியில், பள்ளியின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பிற்காக அதிகாரிகளை அவர் திட்டுவதையும் காணலாம்.
விசாரணையின் போது, ஏப்ரல் 11, 2023 அன்று ஏபிபி நியூஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம். அந்த அறிக்கையின்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அமைச்சர் ஆதிஷி மற்றும் மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோரின் பள்ளிப் பயணம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஆதிஷி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் பல பள்ளிகளுக்குச் சென்று, அங்குள்ள அசுத்தம், குப்பைக் குவியல், பள்ளி முதல்வர்கள் பள்ளியில் இல்லாதது மற்றும் ஆசிரியர்களின் அலட்சியம் மற்றும் பிற பிரச்சனைகளைப் கண்ட பிறகு, அந்த மண்டலத்திலுள்ள பல பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை எச்சரித்துள்ளார் வஜிராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் மோசமான நிலையைக் கண்டு கல்வி அமைச்சர் அதிர்ச்சியடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்தி அறிக்கைகளை இங்கே.படிக்கலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 2022 இல் நடந்த டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதற்கு முன் 15 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தது.
ஏபிபி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் ஒரு சுதந்திரமான அமைப்பு. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1957-ன் விதிகளின் கீழ் டெல்லி மாநகராட்சி செயல்படுகிறது. இதனுடன், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் அன்றாட செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட முடியாது.
இதுவும் டெல்லி அரசிடம் இருந்து வேற்றுமையானது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் வேலை என்பது சுகாதார வசதிகளை கவனித்துக்கொள்வது மற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். இதைத் தவிர, 60 அடிக்கு குறைவான சாலைகளை சுத்தம் செய்யும் பணி, மற்றும் சந்தை பகுதிகளும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனால் செய்யப்படுகிறது. கல்வித்துறையை நாம் பார்ப்போமானால், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் கல்வித் துறை ஆரம்பக் கல்விக்காக மட்டுமே செயல்படுகிறது, அதாவது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதனுடன் சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் பராமரிப்புப் பணிகளை டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் பொறுப்பேற்றுள்ளது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நீர் வழங்கல், வடிகால் அமைப்பு, குடிசைப் பகுதிகளின் மேம்பாடு மற்றும் தெரு விளக்குகள் ஆகியவற்றையும் முனிசிபல் அமைப்பு நிர்வகிக்கிறது. டெல்லியில் உள்ள பல பார்க்கிங் இடங்களும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் வருகின்றன.
மேலும் கூடுதல் தகவலுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வேத் குமாரை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த காணொளி மீது கூறப்படும் கூற்று தவறானது என்று அவர் எங்களிடம் கூறினார். அவர் கூறியதாவது, “இந்த காணொளி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து அறிய டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி மர்லேனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தக் காணொளி அந்தக் காலத்திலுள்ளது.”
விசாரணையின் முடிவில், போலியான கூற்றுடன் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள முகநூல் பயனாளர் அமித் ஷர்மாவின் கணக்கை நாங்கள் ஸ்கேன் செய்தோம். நவம்பர் 2009 முதல் பயனர் முகநூலில் செயலில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த பயனருக்கு 5,000 பேஸ்புக் நண்பர்கள் மற்றும் 25,652 பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்ததில், பயனர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவுரை: ஆதிஷி மர்லேனா பார்வையிட்ட பள்ளி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (எம்சிடி) கீழ் வருகிறது, மாறாக தில்லி அரசாங்கத்தின் கீழ் அல்ல என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது. டிசம்பர் 2022 இல் நடைபெற்ற டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. டெல்லியின் புதிய கல்வி அமைச்சர் அதிஷி மர்லேனா சில நாட்களாக டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார்
- Claim Review : டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி மர்லேனா ஒரு அரசுப் பள்ளியின் மோசமான நிலையை விமர்சித்தார்
- Claimed By : முகநூல் பயனர்: அமித் ஷர்மா
- Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com