
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). SRM பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு வைரல் சுற்றறிக்கை, SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) KTR வளாகத்தின் ஒவ்வொரு பெண் மாணவியும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒரு காதலனைக் கொண்டிருப்பது கட்டாயமாக்குகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. SRM பல்கலைக்கழக பதிவாளர் அத்தகைய எந்தவொரு சுற்றறிக்கையையும் தாங்கள் பகிர்ந்து கொள்வில்லை என்று மறுத்துள்ளார்.
கூற்று
SRM பல்கலைக்கழக பதிவாளரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு வைரல் சுற்றறிக்கை, SRMIST KTR வளாகத்தின் உள்ள ஒவ்வொரு பெண் மாணவரும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒரு காதலனைக் கொண்டிருப்பதைக் கட்டாயமாக்குகிறது. மேலும் ஒற்றை மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அது எச்சரிக்கிறது. வளாகத்திற்குள் நுழைவதற்கு தங்கள் காதலனுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட சமீபத்திய படத்தை காட்ட வேண்டும் என்றும் அது கூறுகிறது. SRM பல்கலைக்கழக லோகோ, பதிவாளரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் கூடிய சுற்றறிக்கை கல்லூரியில் உள்ள மற்ற அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் கன்னிகா என்னும் பயனர் பகிர்ந்துகொண்டு, “அடேய் , என்னங்கடா இது, எல்லா பொன்னுங்களுக்கும் கண்டிப்பா Boy friend இருக்கனுமா..இது காலேஜா இல்லை வேற ஏதாவதா ..” என்று திட்டி எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்த விசாரணைக்காக, இச்சம்பவம் குறித்த முக்கிய சொற்களைக் (SRM பல்கலைக்கழக புதிய அறிவிப்பு, பெண் மாணவர்கள்) கொண்ட செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஒரு கட்டுரையை நாங்கள் கண்டோம். அதில் “கட்டங்குளத்தூரில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள காவல்துறையினரிடம் ஒரு வைரல் சுற்றறிக்கை தொடர்பாக புகாரளித்துள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து பெண் மாணவர்களும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக வளாகத்தில் ஒரு காதலன் இருப்பது கட்டாயமாகும் என்று கூறுகிறது. ”
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் SRM பல்கலைக்கழக பதிவாளர் N சேதுராமனை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த வைரல் சுற்றறிக்கை தவறானது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார். இதுபோன்று ஒரு சுற்றறிக்கை தவறாகப் பகிரப்படுவது இது முதல் தடவை அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட கன்னிகா என்ற பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு ட்விட்டரில் 4,666 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அவரது கணக்கு பிப்ரவரி 2019 முதல் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரஸ் சுற்றறிக்கை தவறானது. SRM பல்கலைக்கழகம் இந்த கூற்றினை மறுத்துள்ளதுடன், இது குறித்து காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.